தாவர உடற்செயலியல்
தாவர உடற்செயலியல் அல்லது தாவர உடலியங்கியல் (plant physiology) என்பது தாவரங்களின் செயல்பாடு அல்லது உடலியங்கியல் தொடர்பான தாவரவியலின் ஒரு துணைப்பிரிவாகும்.[1] தாவர புறஅமைப்பியல் (தாவரங்களின் அமைப்பு), தாவர சூழலியல் (சுற்றுச்சூழலுடனான தொடர்பு), தாவரவேதியியல் (தாவரங்களின் உயிர்வேதியியல்), உயிரணு உயிரியல், மரபியல், உயிரியற்பியல், மூலக்கூற்று உயிரியல் ஆகியவை நெருக்கமாக தொடர்புடைய துறைகளில் அடங்கும்.
ஒளித்தொகுப்பு, சுவாசம், தாவர உணவூட்டம், தாவர வளரூக்கி செயற்பாடுகள், திருப்ப அசைவுகள், தூண்டல் இயக்கங்கள், ஒளிக்காலத்துவம், ஒளி உருவத்தோற்றவியல், சர்க்கேடியன் இசைவுகள், சுற்றுச்சூழல் அழுத்ததௌடற்செயலியல், விதை முளைத்தல், செயலற்ற நிலை, இலை துளைச் செயற்பாடு, ஆவியுயிர்ப்பு போன்ற அடிப்படைச் செயல்முறைகளில் தாவர உடற்செயலியலாளர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
குறிப்புகள்
தொகு- ↑ Frank B. Salisbury; Cleon W. Ross (1992). Plant physiology. Brooks/Cole Pub Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-15162-0.