திருப்ப அசைவு
திருப்ப அசைவு (tropism) என்பது புறத்தூண்டல் ஒன்றுக்கு உயிரங்கிகள் காட்டும் அசைவுத் தோற்றப்பாடு ஆகும், கிரேக்கம் மொழியில் τρόπος, tropos, என்பது "திருப்பம் எனப் பொருள் படும். திருப்ப அசைவுகள் பொதுவாக புறத்தூண்டலை நோகியோ அல்லது விலக்கியோ அமையலாம். நோக்கி அம்மையுமாயின் நேர்த்திருப்ப அசைவு எனவும் விலக்கி அசையுமாயின் மறைத் திருப்ப அசைவு எனவும் அழைக்கப்படும்.
தீ நுண்மம் மற்றும் நோய்க்காரணிகள் என்பன விருந்துவழங்கி திருப்ப அசைவு அல்லது கலத் திருப்ப அசைவை காட்டுகின்றன. இதன்மூலம் இவை தாம் நோயை உண்டுபண்ணக்கூடிய விருந்து வழங்கிகளை அல்லது கலங்களை நோக்கிi வளருகின்றன. பொதுவாக திருப்ப அசைவுகள் திருப்பத்திற்குக் காரணமான தூண்டலின் பெயர் கொண்டு அழைக்கப்படும். எ.கா: ஒளித்திருப்ப அசைவு.
வகைகள்
தொகு- வேதித் திருப்ப அசைவு- வேதித் திரவியத்தை நோக்கி அல்லது விலக்கி அசைவது.
- புவித் திருப்ப அசைவு- புவியீர்ப்பு விசையை நோக்கி அல்லது விலக்கி அசைவது
- கதிர்த்திருப்ப அசைவு- சூரியக் கதிரின் திசையை சார்ந்து அசைவது
- ஒலித்திருப்ப அசைவு- ஒலியின் திசையை சார்ந்து அசைவது
- நீர்த்திருப்ப அசைவு- நீர்வளத் திசையை சார்ந்து அசைவது
- ஒளித்திருப்ப அசைவு- ஒளியின் திசையை சார்ந்து அசைவது
- வெப்பத் திருப்ப அசைவு- வெப்பத்தின் திசையை சார்ந்து அசைவது
- மின்திருப்ப அசைவு- மின்தூண்டலின் திசையை சார்ந்து அசைவது
- பரிசத் திருப்ப அசைவு-தொடுகையின் திசையை சார்ந்து அசைவது