திக்கி தோல்மா

இந்திய மலையேற்ற வீராங்கனை

திக்கி தோல்மா (Dicky Dolma) 19 வயதில் எவரெசுட்டு சிகரத்தை எட்டிய இந்தியப் பெண்ணாவார். 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று இளைய பெண்மணியான திக்கி தோல்மா இந்த மலையேற்றச் சாதனையை நிகழ்த்தினார்.[1][2]

இந்திய-நேபாள எவரெசுட்டு பயணத்தில் இச்சாதனை நடந்தது.[3] இந்த இந்தோ-நேபாள மகளிர் எவரெசுட்டு பயணக் குழுவை 1984 ஆம் ஆண்டு எவரெசுட்டு சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண் பச்சேந்திரி பால் வழிநடத்தினார்.[3] ஒரு பனிச்சறுக்கு வீரராக இருந்த திக்கி 1989 அகில இந்திய திறந்த ஆலி பனிச்சறுக்கு விழா மற்றும் 1999 ஆம் ஆண்டு ஆசிய குளிர்கால விளையாட்டு உட்பட பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார்.[3] பனிச்சறுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் அடிப்படை மலையேறும் படிப்புகளை திக்கி மணலி நிறுவனத்தில் எடுத்தார்.[3] திக்கி தோல்மாவின் அதே பயணத்தில், சந்தோசு யாதவ் இரண்டாவது முறையாக எவரெசுட்டு சிகரத்தை ஏறினார். இரண்டு முறை உச்சிக்கு சென்ற முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெற்றார்.[4] திக்கி தோல்மா இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மனாலிக்கு அருகேயுள்ள பல்சான் கிராமத்தைச் சேர்ந்தவராவார்.[5] திக்கி தோல்மாவுக்கு 1994 ஆம் ஆண்டுக்கான தேசிய சாகச விருதும் வழங்கப்பட்டது .

எவரெசுட்டு சிகரத்தை எட்டிய இளைய பெண்மணிகள் [6]

தொகு
  • சூங்கோ தபே - 22 செப்டம்பர் 1939 ஆம் ஆண்டு பிறந்தார் - 16 மே 1975 அன்று 35 வயது, 236 நாட்கள்
  • பச்சேந்திரி பால்- 25 ஏப்ரல் 1954 ஆம் ஆண்டு பிறந்தார் - 23 மே 1984, வயது 30 ஆண்டுகள், 28 நாட்கள்
  • சரோன் வூடு - 18 மே 1957 இல் பிறந்தார் - 20 மே 1986, வயது 29 ஆண்டுகள், 2 நாட்கள்
  • லிடியா பிராடே- அக்டோபர் 9, 1961 இல் பிறந்தார் - அக்டோபர் 14, 1988, வயது 27 ஆண்டுகள், 5 நாட்கள்
  • சந்தோசு யாதவ்- 10 அக்டோபர் 1967 இல் பிறந்தார் - 12 மே 1992, 24 வயது, 215 நாட்கள்
  • கிம் சூன்-யோ - 10 ஆகத்ட் 1970 இல் பிறந்தார்-10 மே 1993, வயது 22 ஆண்டுகள், 273 நாட்கள்
  • திக்கி தோல்மா - 5 ஏப்ரல் 1974 இல் பிறந்தார் - 10 மே 1993, வயது 19 வயது, 35 நாட்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. New Seasons Course Book 6, 2/E By Manuja Sarita, Page 85
  2. "Everest 2005: Chris Harris, 14". Archived from the original on 2016-02-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-03.
  3. 3.0 3.1 3.2 3.3 EverestHistory.com: Dicky Dolma
  4. Encyclopaedia of Indian Events & Dates - By S. B. Bhattacherje - Page A274
  5. Punjab History Conference, Thirty-seventh Session, March 18-20, 2005(Google Books)
  6. "Adventure Stats". Archived from the original on 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கி_தோல்மா&oldid=3947543" இலிருந்து மீள்விக்கப்பட்டது