பச்சேந்திரி பால்

இவர் தமிழ்நாட்டிலும் 1 வருடம் இருந்தார் மற்றும் இவரது தாத்தாவின் தாத்தாவின் தந்தை, தமிழ்நாட்ட

பச்சேந்திரி பால் (Bachendri Pal) உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நாகுரி கிரமத்தை சேர்த்தவர். இவர் 1954-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீ கிருஷ்ணபால்சிங், தாயார் ஹன்ஸாதேவி. தந்தை சிறிய அளவிலான பலசரக்கு வியாபாரம் செய்தவர். இந்திய எல்லையிலிருந்து தீபெத்திய எல்லை பகுதிக்கு சரக்குகளை விற்பனை செய்வது இவரது தொழில்.

2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து பச்சேந்திரிபாலுக்கு புதுதில்லியில் பத்மபூசண் விருது வழங்கிய நிகழ்வு

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பச்சேந்திரி பால் மலையேற்ற பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து, மலையேற்றம் தொடர்பான குழு பயிற்சியினை பெற்றார் . அந்த பயிற்சியின் போது அவர் 6675 மீட்டர் உயரம் உள்ள கங்கோத்திரி மலையிலும் ,5819 மீட்டர் உயரம் உள்ள ருதுகாரி மலையிலும் ஏறினார்.

பின்னர் தேசிய சாகச அமைப்பில் ,பெண்களுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கும் பயிச்சியாளராக சேர்ந்து சிறிது காலம் பணிபுரிந்தார். 1984 ஆம் ஆண்டு எவெரெஸ்ட் மலையில் ஏற ,இந்தியாவின் 4-வது மலையேற்றக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பச்சேந்திரி பால் இடம்பெற்றார் .அந்த பயணத்தின்போது அவர்களது குழு மீது பனிமலை விழுந்து பலருக்கும் காயம் ஏற்பட்டது .இருப்பினும் பச்சேந்திரி பால் மனம் தளராமல் தனது பயணத்தை தொடர்ந்தார் .மைனஸ் 40 டிகிரி அளவிற்கு தட்பவெப்பம் இருந்தபோதும் ,கடுமையான குளிர் காற்று வீசியபோதும் ,பல்வேறு இடங்களில் பனிமலை முகடுகள் தடையாக இருந்தபோதும் மனம் தளராமல் அத்தனை தடைகளையும் மீறி தொடர்ந்து மலை ஏறி பச்சேந்திரி பால் சாதனை படைத்தார்.

1984 ஆம் ஆண்டு மே மதம் 23 ஆம் தேதி 8847.7 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் இந்திய தேசிய கோடியை பறக்கவிட்டார்.[1][2]

1985ஆம் ஆண்டு மற்றொரு குழுவுடன் தனது மலையேற்றதை தொடங்கினார் .அதே போல் அனைத்து பெண்கள்கொண்ட மலையேற்றக் குழுவிற்கு தலைமைதாங்கி சியாச்சின் மலைப்பகுதி வழியாக சுமார் 4500 கிலோ மீட்டர் தூரம் இமயமலைப்பகுதியில் சாகச மலையேற்றப் பயணத்தை மேற்கொண்டார்.

விருதுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Bachendri Pal, the first Indian woman to climb Mount Everest: All about her". Archived from the original on 2017-11-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
  2. Bachendri Pal
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சேந்திரி_பால்&oldid=3947560" இலிருந்து மீள்விக்கப்பட்டது