திக்குவல்லை ஸப்வான்
திக்குவல்லை ஸப்வான் (Dickwella Safwan) எழுத்தாளர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், வானொலி நாடக எழுத்தாளர், மேடைநாடக நடிகர், வானொலி நாடக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றுபவர். முழு இலங்கைக்குமான சமாதான நீதிவான்.
திக்குவல்லை ஸப்வான் | |
---|---|
பிறப்பு | ஸப்வான் மே 19, 1954 கப்புவத்தை,தெனிப்பிட்டிய, வெலிகாமம் இலங்கை |
இருப்பிடம் | இலங்கை |
பணி | கிராம சேவகர் |
சமயம் | இஸ்லாம் |
வாழ்க்கைத் துணை | நூருல் ஹுனைஸா |
பிள்ளைகள் | சஹாமா, ஸப்வா,ஹிலால் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇலங்கை திக்குவல்லையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் திக்குவல்லை எம்.எம். ஸப்வான். இவர் ஏ.ஆர். முகம்மது, எம்.எச். பலீலத்தும்மா தம்பதியினரின் புதல்வர். இவர், இனிகலை முஸ்லிம் வித்தியாலயம், அம்பாந்தோட்டை சாகிராக் கல்லூரி, திக்குவல்லை மின்ஹாத் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர். தொழில்ரீதியில் கிராம உத்தியோகத்தர்.
ஈழத்துத் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவர் தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களாக எழுதிவருபவர். இவரது அதிகமான குறுங்கதைகள் ரோணியோ - கல்லச்சுப் பதிப்பாக வெளிவந்துள்ளன.
1978 ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை வானொலியில் ஒலிபரப்பானது. அதன் பின்னர் இவரது நூற்றுக்குமதிகமான ஆக்கங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
எழுதிய சில நூல்கள்
தொகு- உம்மாவுக்கு ஒரு சேலை (சிறுகதைத் தொகுப்பு)
- ஒரே இரத்தம் (மொழிபெயர்ப்பு நூல்)
- கம்பராமாயணம் (மாணாக்கருக்கான நூல்)
- சீறாப்புராணம் - விளக்கம் (மாணாக்கருக்கான நூல்)
- நளவெண்பா, நாலடியார் (மாணாக்கருக்கான நூல்)
வெளிவரவுள்ள நூல்
தொகு- வாப்பாவுக்கொரு சால்வை
விருதுகள்
தொகு- 2008 ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பு (ஒரே இரத்தம்) நூலுக்கான அரச இலக்கிய விருது.
- 2012 ஆம் ஆண்டு தேசிய சமாதான சபை, இவருக்கு தேசமான்ய - தேச கீர்த்தி - கலாவிபூசண விருது வழங்கி கௌரவித்துள்ளது.
- 2013 ஆம் ஆண்டு 40 வருட இலக்கியச் சேவையைப் பாராட்டி தென்றல் கலாமன்றம் 'கலாஜோதி' விருது வழங்கி கௌரவித்துள்ளது.