திசுரி யுவனிகா
திசுரி யுவனிகா (சிங்களம்: තිසුරි යුවනිකා මද්දුම ලියනගේ; பிறப்பு மார்ச்சு), என்பவர் ஒரு இலங்கை திரைப்பட நடிகை ஆவார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். [2] 1994 இல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய யுவனிகா பல விருதுகளைப் பெற்றுள்ளார். [3]
திசுரி யுவனிகா තිසුරි යුවනිකා | |
---|---|
பிறப்பு | திசுரி யுவனிகா மத்தும லியனகே மார்ச்சு 6, 1991 நுகேகொடை, இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
கல்வி | அனுலா வித்தியாலயம், நுகேகொடை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1994– தற்போது |
வாழ்க்கைத் துணை | சுராஜ் விஜேசிங்க |
விருதுகள் | சிறந்த புதுமுக நடிகை (2013) சிறந்த நடிகை (2014) சிறந்த நடிகை (2015) |
பிறப்பு மற்றும் திரைத்துறை அறிமுகம்
தொகுஇவர் சுசந்த சந்திரமாலி என்ற இலங்கையின் பிரபல நடிகைக்கும், குமாரு லியனகே தம்பதிக்கு மார்ச் 6, 1991 இல் பிறந்தார். 1994 இல் புஞ்சி குமரிகே நத்தலா திரைப்படத்தில் தனது தாயான சுசந்த சந்திரமாலியுடன் இணைந்து நடித்தார். அப்போது திசுரி யுவனிகாவிற்கு மூன்று வயதாகும். 1994 குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமானாலும், 2001 இல் மீண்டும் உடு கேங் யமையா திரைப்படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார்.
விருதுகள்
தொகு- 2013 இல் சுமதி விருதுகளில் சிறந்த புதுமுக நடிகை
- 2014 தேசிய விருதுகளில் சிறந்த நடிகை
- 2015 இல் சுமதி விருதுகளில் சிறந்த நடிகை
- 2019 இல் சுமதி விருதுகளில் சிறந்த நடிகை
ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
2004 | உடுகன் யமையா | டிங்கிரி |
2008 | மச்சான் | மனோஜின் தங்கை |
2012 | தருவானே | துலானி |
2016 | ஸ்பந்தனா | அச்சினி |
2017 | தர்மயுத்தாய | அச்சினி |
2018 | நிதகாசே பியா டிஎஸ் | இளம் மோலி துனுவில |
ஆதாரங்கள்
தொகு- ↑ "Happy soul". Daily News. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
- ↑ "These days I am very happy". Silumina. பார்க்கப்பட்ட நாள் 2021-06-04.
{{cite web}}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "Interview with Susantha Family සුසන්තා, තිසුරි ගැන රහසක් හෙළි කරයි". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 4 August 2017.