திடக்கழிவு மேலாண்மை
திண்மக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள்,வணிக வளாகங்கள்,தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திண்மப் பொருள்களைச் சரியான முறையில் மேலாளும் செயலாகும். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. எடுத்துகாட்டாக தாள் , தொய்வம் , நெகிழிப் பொருட்கள் , கண்ணாடிகள் , தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவையாகும்.
திண்மக்கழிவுகளின் மூலங்கள்
தொகு1.வீடுகள்
2.அலுவலகங்கள் , மருத்துவமனைகள் ,கல்வி நிறுவனங்கள்
3.தொழிற்சாலைகள்
4.வேளாண் கழிவுகள்
5.நகராட்சிக் கழிவுகள்
திண்மக்கழிவுகளின் வகைப்பாடு
தொகுசிதைவடைவன
தொகுஇவை நுண்ணுயிரிகளின் செயல்களால் எளிதில் சிதைவடையும்.(எ .கா ) இறந்த தாவரங்கள், விலங்குகளின் உடல்கள் , காய்கறிக் கழிவுகள்.
சிதைவடையாதவை
தொகுஇவை நுண்ணுயிரிகளால் எளிதில் சிதைவடையாது .(எ .கா ) நெகிழி ,ஊர்தி தொய்வ வட்டைகள்(டயர்கள்) ,கண்ணாடி, உலோகங்கள்.
சாம்பல்
தொகுமரக்கட்டை, நிலக்கரி போன்றவை எரிபொருளாகப் பயன்படுத்ததும்போது கிடைக்கும் துணை வினைப்பொருள் சாம்பல் ஆகும்
கட்டுமான திண்மக்கழிவுகள்
தொகுஇவை கட்டிடங்கள் கட்டும் போதும் , இடிக்கும் போதும் வெளிப்படும் கழிவுகள் ஆகும்.(எ .கா ) கற்கள், கான்க்ரீட் திடக்கழிவு செங்கற்கள் , மின்சாதனப் பொருட்கள்.
நச்சுத் திண்மக்கழிவுகள்
தொகுஇவை மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகள் ஆகும். (எ.கா ) உலோகங்கள் (குரோமியம் .பாதரசம்,
காட்மியம்,), பூச்க்சி கொல்லிகள் ,வெடிபொருட்கள், ,மருத்துவமனைக் கழிவுகள் (ஊசி,நுண்ணுயிருள்ள அறுவை செய்யப்பட்ட உடற்பகுதி) ஆகியன கதிரியக்கத் தனிமக்கழிவுகளாகும்.
கழிவுநீர்த் தூய்மிப்புக் கழிவுகள்
தொகுஇவை கழிவுநீரைத் தூய்மிக்கும்பொழுது வெளிவரும் திண்மக்கழிவுகளாகும்.
வேளாண் கழிவுகள்
தொகுவேளாண் பொருட்களை பயன்படுத்தியது போது எஞ்சுபவை இதில் அடங்கும்.(எ .கா) நெல் உமி ,
தவிடு , கரும்புச்சக்கை ,கரும்புத்தோகை,சோளத்தட்டை, பண்ணைக்கழிவுகள் தென்னைக் கழிவுகள்.
திண்மக்கழிவுகளின் விளைவுகள்
தொகு1. இக்கழிவுகளை எரிக்கும்போது வளிமண்டலத்தையும், மண்ணில் இடும்போது நீரையும்
நிலத்தினையும் மாசுபடுத்துகிறது.
2. நோயை உண்டாக்கும் நுண்ணுயிரியுள்ள மருத்துவமனைக் கழிவுகள் பல நோய்கள் ஏற்படக்
காரணமாகின்றன.
3. மீள்சுழற்சிக்குப் பயன்படும் தாள் , உலோகம் பொறுக்குபவர்களுக்கு தோல் நோய்கள், மூச்சுயிர்ப்புக்
கோளாறுகள்,கண் எரிச்சல், இரைப்பைத் தொற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.
4. குளோரின் உள்ள திண்மக்கழிவுகளை எரிக்கும்போது அதிலிருந்து வெளிவரும் டையாக்சின் ,
பியூரான் வளிமங்களை முகரும்ம்போது மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
5. நச்சுத் திண்மக்கழிவுகள் உணவுச்சங்கிலி மூலம் உடலில் திரண்டு புற்றுநோய் போன்ற தீய
விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மறு சுழற்சி
தொகுதாள்,கண்ணாடி,உலோகம், நெகிழி போன்ற திண்மக்கழிவுகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவோ
ஆற்றல் எடுக்கக்கூடியதாகவோ மாற்றப்படுகிறது.
திண்மக்கழிவின் மேலாண்மை
தொகுதிரட்டல் :
தொகுதிண்மக்கழிவானது ஊர்திகளால் திரட்டி தூய்மிக்கும் இடத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது .
பிரித்தல் :
தொகுதிண்மக்கழிவுகளை சிதைவன , சிதையாதவை , எரியும் பொருட்கள் , எரியாத பொருட்கள் எனத் தனியாக
பிரித்து நெகிழி ,தாள்,உலோகம் போன்றவை மறுசுழற்சிக்கு அனுப்பப்டுகிறது .
தூளாக்குதல் :
தொகுதிண்மக்கழிவுகள் அரைத்துத் தூளாக்கப்படுகின்றன . பின்பு தூய்மிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது .
திண்மக்கழிவு தூய்மிக்கும் முறைகள்
தொகுஉயிரியல் முறை :
தொகுஇம்முறையில் நுண்ணுயிரிகள் திண்மக்கழிவுகளைச் சிதைக்கின்றன .
அ ) திறந்தவெளிமுறை : பள்ளமான இடங்களில் திண்மக்கழிவுகள் திரட்டப்பட்டு நுண்ணுயிறிகளால்
மக்கச் செய்து பயன்படுத்தப்படுகிறது .
ஆ) உரமாக்குதல் : திண்மக்கழிவுகள் குற்றுயிரி, பூஞ்சைகளால் சிதைக்கப்பட்டு கரிம உரமாக
மாற்றப்படுகிறது .
இ) நிலத்தில் புதைத்தல் : திண்மக்கழிவுகள் குழிகளில் புதைக்கப்பட்டு சுற்றுச் சூழலுக்கு இடர்
ஏற்படாதவாறு பாதுகாக்கப்படுகிறது .
வெப்பமுறை :
தொகுஇம்முறையில் திண்மக்கழிவுகளை வெப்பப்படுத்தி எரிபொருளாகவோ அல்லது எரித்து ஆற்றலாகவோ
மாற்றப்படுகிறது .
அ) பைராலிசிஸ் : இதில் திண்மக்கழிவு 600-1000 செ வெப்பநிலையில் ஆக்சிஜன் அற்ற நிலையில்
எரிக்கப்பட்டு வளிம எரிபொருளாக மாற்றப்படுகிறது .
ஆ) எரித்தல் : இதில் திண்மக்கழிவு எரிக்கும் இயந்திரத்தில் இட்டு எரித்துவரும் வெப்பம் மின்மாற்றலாக மாற்றப்படுகிறது .
திண்மக்கழிவு மேலாண்மையின் பயன்பாடு
தொகுi ) மக்களை நோயிலிருந்து பாதுகாக்கிறது .
ii) மறுசுழற்சி செய்வதால் ஆற்றல் கிடைக்கிறது .
iii) சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது .
மேற்கோள்கள்
தொகு1) கு.குமாரசாமி , அ.அழகப்ப மோசஸ் , மு.வசந்தி ,(2010) "சுற்றுச்சூழல் அறிவியல் " பாரதிதாசன்
பல்கலைக்கழகப் பாடநூல் வெளியீட்டு எண் 46 ,பாரதிதாசன் பல்கலைக்கழகம் ,திருச்சி .
2) கார் .G . 1997 , மண் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ,சர்அப் அண்டு சன்ஸ் , நியூ டெல்லி .