திடீரென்று முடிக்கும் விதி (விளையாட்டு)
சடுதி முடிப்பு (Sudden death) சடுகுடு, கோ-கோ, கால்பந்து, வளைதடிப் பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் பயன்படுகிறது.[1] திடீரென்று முடிக்கும் விதி என்பது இரு அணிகளும் சமமாக புள்ளிகளைப் பெற்றிருந்தால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். அதிலும் சமநிலை நீடிக்கும் பட்சத்தில் திடீரென்று முடிக்கும் விதி பயன்படுத்தப்படும்.[2] இம்முறையில் ஒவ்வொரு அணிக்கும் 1 முறை வாய்ப்பு அளிக்கப்படும். அதில் எந்த அணி முதலில் புள்ளிகளைப் பெறுகிறதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.[3][4][5]
விளையாட்டில், சடுதி முடிப்பு அறுதிப் போட்டிக்கான ஒரு வடிவமாகும். ஒரு ஓட்டப் பந்தயத்தில் போட்டியாளர் ஒருவர் மற்ற போட்டியாளர்களை விட முன்னேறி இருக்கும்போது, அவரை வென்றவராக அறிவித்துப் போட்டி உடனடியாக முடிக்கப்படும். இது முடிவில் விளையாட்டு யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தாலோ அல்லது இயல்பான விளையாட்டு நேரத்தில் வெற்றி தோல்வி யாருக்கும் கிடைக்காவிட்டாலோ அல்லது இயல்பான விளையாட்டுச் சாதனை முடியவரும்போதோ பயன்படுத்தப்படும்.
எடுத்துகாட்டாக, ஒரு குழிப் பந்தாட்டத்தில் (கோல்ஃப்) நான்கு வீச்சடிப்பில் இலக்கு குழி எண்னிக்கையை முடிக்க வேண்டும் எனில், அப்போது ஒருவீச்சு கூடுதலாகத் தந்து விளையாட்டை இலக்கு நேரத்தில் முடிக்கலாம். ஒவ்வொரு விளையாட்டுக்கும் சடுதி முடிப்பு விதி மாறும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ New York Times, November 19, 1940. Novel Plan Adopted to Decide Play-Offs, p. 22
- ↑ "NCAA Division II women: Beale's OT tally sends Nebraska-Omaha past Seattle Pacific 2-1 for national title. Since 2022, tied matches will result in teams playing the full 20-minute overtime, divided into halves". www.soccertimes.com. Archived from the original on 2006-03-29.
- ↑ New York Times, April 30, 1946. Danzig, Allison, Pro Giants To Play Seven Home Games, p. 27.
- ↑ New York Times, December 18, 1948, Cards And Eagles Evenly Matched, p. 17.
- ↑ New York Times, December 11, 1950, Sudden Death Overtime For Play-Off Contests, p. 33
இதனையும் காண்க
தொகு
உசாத்துணை
தொகு- Gifford, Frank and Richmond, Peter, The Glory Game:How the 1958 NFL Championship Changed Football Forever HarperCollins e-books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-171659-1