திண்டிவனம் கே. இராமமூர்த்தி

திண்டிவனம் கே. இராமமூர்த்தி (Tindivanam K. Ramamurthy) (1934 டிசம்பர் 9- 8 ஆகத்து 2021) தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் தமிழ்நாடு பிரதேச இந்திய தேசிய காங்கிரசு குழு பொதுச் செயலாளராக பணியாற்றி உள்ளார் (1967–78). இவர் தமிழக சட்டப்பேரவை (1967–71) மற்றும் தமிழகச் சட்டமன்றம் (1976-84) ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். சட்டப்பேரவையில் 1981 முதல் 1984 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1984 முதல் 1990 வரை இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக 8 ஆகத்து 2021 அன்று காலமானார்.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு