தினாவன் தீவு
மலேசியத் தீவு
தினாவன் தீவு (மலாய்: Pulau Dinawan; ஆங்கிலம்: Dinawan Island) என்பது மலேசியா, சபா மாநிலத்தில், மேற்கு கரை பிரிவில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 5°50′46.6″N 115°59′26.1″E / 5.846278°N 115.990583°E |
உயர்ந்த ஏற்றம் | 73 m (240 ft) |
நிர்வாகம் | |
இந்தத் தீவு கிமானிசு ஆற்றின் முகப்புக்கு அருகில் கிமானிசு நகரத்திலிருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 73 மீ உயரத்தில் அமைந்துள்ள இத்தீவு பாறைகள் மற்றும் மணல் திட்டுகளால் சூழப்பட்டுள்ளது.[1] தனியார் உரிமையாளர் இத்தீவில் ஒரு சுற்றுலா விடுதியை நடத்துகிறார்.[2]
இரண்டாம் உலகப் போரின் போது, சப்பானியப் படைகளை போர்னியோவில் பூர்வீக சுலுக்குகளும் சீன இனத்தவர்களும் தாக்கினர். பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தீவில் உள்ள ஒவ்வொரு சுலுக் ஆண்களும் தூக்கிலிடப்பட்டனர், அதே நேரத்தில் அவர்களது பெண்கள் மற்றும் குழந்தைகள் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sailing Directions (Enroute), Pub. 163: Borneo, Jawa, Sulawesi, and Nusa Tenggara (PDF). Sailing Directions. United States National Geospatial-Intelligence Agency. 2018. p. 350.
- ↑ Dinawan Island; Retrieved 28 July 2013
- ↑ Tormsen, David (2015). "10 Horrific Atrocities Committed By Japan's Secret Police In World War II; #6: Jesselton Revolt". listverse.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2019.