தினேஷ்சந்திர சர்கார்
தி. சி. சிர்கார் எனவும் தி.சி.சர்கார் எனவும் அழைக்கப்படும் தினேஷ்சந்திர சிர்கார் (Dineshchandra Sircar) (1907 – 1985), ஓர் கல்வெட்டியல் நிபுணரும், வரலாற்றாசிரியரும், நாணயவியல் மற்றும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார். குறிப்பாக இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் கல்வெட்டுகளை புரிந்து கொள்ளும் பணிக்காக அறியப்பட்டவர். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (1949-1962) தலைமை கல்வெட்டு ஆசிரியராகவும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் கார்மைக்கேல் பேராசிரியராகவும் (1962-1972) இந்திய வரலாற்று காங்கிரசின் பொதுத் தலைவராகவும் இருந்தார். 1972 இல், சர்காருக்கு வில்லியம் ஜோன்ஸ் நினைவு தகடு வழங்கப்பட்டது.
தினேஷ்சந்திர சர்கார் | |
---|---|
பிறப்பு | 1907 கிருஷ்ணா நகர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 1985 (அகவை 77–78)[1] இந்தியா |
பணி | வரலாற்றாசிரியர், கல்வெட்டுவியலாளர் |
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
தொகுசர்கார் கிருஷ்ணாநகரில் ஆயுர்வேத மருத்துவர்களின் குடும்பத்தில் பிறந்தார். 1929-இல் சமசுகிருதத்தில் மேதகைமை பட்டமும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் 1931-இல் தனது முதுகலை பட்டத் தேர்வில் முதல் வகுப்பைப் பெற்றார்.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Ranabir Chakravarti. "Sircar, Dineschandra". Banglapedia. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
மேலும் படிக்க
தொகு- Maity, Sachindra Kumar; Thakur, Upendra; Sircar, D.C. (1987). Indological Studies: Prof. D.C. Sircar Commemoration Volume. Abhinav Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-220-9.
- Gouriswar Bhattacharya (1986). Deyadharma: Studies in Memory of Dr. D.C. Sircar (Sri Garib Dass Oriental Series, No 33). Orient Book Distributors. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7030-021-5.
வெளி இணைப்புகள்
தொகு- Ranabir Chakravarti. "Sircar, Dineschandra". Banglapedia.
- Prominent epigraphists, Archaeological Survey of India