தினேஷ் சந்திர ஜோடர்

தினேஷ் சந்திர ஜோடர் (Dinesh Chandra Joarder) (5 ஆகஸ்ட் 1928 - 14 செப்டம்பர் 2018) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இவர் மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவை இரண்டிலும் உறுப்பினராக இருந்தார்.

தினேஷ் சந்திர ஜோடர்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1971–1980
தொகுதிமால்டா பாராளுமன்றத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1987-1996
தொகுதிகாளியாசக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1928-08-05)5 ஆகத்து 1928
மால்டா, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 செப்டம்பர் 2018(2018-09-14) (அகவை 90) [1]
மால்டா, மேற்கு வங்காளம், India
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்டிபாலி ஜோடர்
பிள்ளைகள்1 மகன்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜகதீஷ் சந்தர் ஜோடரின் மகன் ஜோடர், மால்டா மாவட்டத்தில் உள்ள நிம்பாரி கிராமத்தில் 1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் பிறந்தார். தொழில் ரீதியாக வழக்கறிஞரான இவர், ஏசி இன்ஸ்டிடியூட், மால்டா, மால்டா கல்லூரி, மால்டா, சுரேந்திரநாத் சட்டக் கல்லூரி, கொல்கத்தா மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். இவர் 1960 இல் திபாலி ஜோர்டரை மணந்தார், இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.

அரசியல் வாழ்க்கை

தொகு

1971 ஆம் ஆண்டில், மால்டா (லோக்சபா தொகுதி)யிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் அப்போதைய நடப்பு பாராளுமன்ற உறுப்பினரான உமா ராயை தோற்கடித்து வெற்றி பெற்றார். 1977-ஆம் ஆண்டில் அதே தொகுதியில் காங்கிரசு வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை தோற்கடித்தார். [2] [3], 1980- ஆம் ஆண்டில் இவர் காங்கிரசின் ஏ. பி. ஏ கனி கான் சவுத்ரியிடம் தோற்றார். 1987 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில், கலியாசக் தொகுதியில் (சட்டமன்றத் தொகுதி) இருந்து வெற்றி பெற்றார். [4] [5]

இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டதோடு சமூக சேவகராகவும் விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களுடன் தொடர்புடையவராகவும் இருந்தார். மால்டா மாவட்டத்தில் பல அமைப்புகளின் தலைவராக அல்லது செயலாளராக இருந்தார். 1964 முதல் 1968 வரை ஆங்கில பஜார் நகராட்சியின் ஆணையராக இருந்தார் [6]

பிந்தைய வாழ்க்கையும் இறப்பும்

தொகு

சில காலமாக முதுமைப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், செப்டம்பர் 14, 2018 அன்று மால்டாவில் உள்ள இவரது இல்லத்தில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Dinesh Chandra Joarder's obituary
  2. "General Elections, 1977 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  3. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 June 2014.
  4. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  5. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  6. "Members of Parliament – Lok Sabha – Profile". Joarder, Shri Dinesh Chandra. reFocusindia. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_சந்திர_ஜோடர்&oldid=3801694" இலிருந்து மீள்விக்கப்பட்டது