திபாலி பர்தாகூர்
திபாலி பர்தாகூர் (Dipali Barthakur) அசாமைச் சேர்ந்த ஓர் இந்தியப் பாடகர் ஆவார். இவரது பாடல்கள் முக்கியமாக அசாமிய மொழியில் பாடப்பட்டன [1]. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது [2].
திபாலி பர்தாகூர் Dipali Barthakur | |
---|---|
பிறப்பு | நிலோமோனி தேயிலைத் தோட்டம், சோனாரி, சிவசாகர் மாவட்டம், அசாம் | 30 சனவரி 1941
இறப்பு | 21 திசம்பர் 2018 குவகாத்தி | (அகவை 77)
பணி | பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1955-1969 |
வாழ்க்கைத் துணை | நீல் பவன் பருவா |
விருதுகள் | பத்மசிறீ, 1998 |
பிறப்பு
தொகுஅசாம் மாநிலத்திலுள்ள சிவசாகர் மாவட்டம்[3]சோனாரி நகரத்தில் பிசுவாநாத் போர்தாக்கூர் மற்றும் சந்திரகாந்தி தேவி[4] தம்பதியருக்கு மகளாக திபாலி தாக்கூர் 1941 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 30 ஆம் நாள் பிறந்தார்.
இசை வாழ்க்கை
தொகுபர்தாக்கூர் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற இளம்வயதிலேயே பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1958 ஆம் ஆண்டு குவகாத்தியின் அகில இந்திய வானொலியில் "மோர் போபாய் லகோரி என்ற பாடலை பாடினார்[3].இதே ஆண்டில் லச்சிட் போர்புகன் (1959) படத்திற்காக "யோவ்போன் அமோனி கோரே செனாய்தோன்" என்ற பாடலையும் பாடினார்[5]. இவர் பாடிய புகழ்பெற்ற பிற அசாமிய மொழிப் பாடல்கள் வறுமாறு :[4]
- சோனோர் காரு நாலேச் முக்
- யோவ்போன் அமோனி கோரே செனாய்தோன்
- யூண்டோன் யூனாலைட்"
- கொன்மனா போராக்சைர் சிப்"
- சேனை மோய் யாவ் தெயி"
- ஓ 'போந்து சோமோய் பேல் அமர் பேல்"
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபர்தாக்கூர் தனது கடைசி பாடலான "லூயிட்டோ நெயாபி போய் என்ற பாடலை 1969 ஆம் ஆண்டில் பாடினார். அதன்பிறகு இவர் கடுமையான மோட்டார் நியூரான் நோய் எனப்படும் இயக்க நரம்பணு நோயால் பாதிக்கத் தொடங்கினார். இந்நோய் இவரது பாடலுக்குத் தடையாக இருந்தது மற்றும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தியது. இவர் 1976 ஆம் ஆண்டு அசாமில் இருந்த ஒரு பிரபல இந்திய கலைஞரும் ஓவியருமான நீல்பவன் பருவாவை மணந்து கொண்டார், நீல் பவன் புகழ்பெற்ற அசாமி எழுத்தாளர் பினந்தா சந்திரா பருவாவின் மகன் ஆவார் [1][6]. 2018 ஆம் ஆண்டு குவகாத்தியிலுள்ள நெம்கேர் மருத்துவமனையில் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு திசம்பர் மாதம் 21 ஆம் நாளில் மரணமடைந்தார்[7].
விருதுகள்
தொகுபர்தாக்கூருக்கு 1990-92 ஆம் ஆண்டு நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசைக்கான பிரிவில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. இவரது சில விருதுகள் / அங்கீகாரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "A tribute to marriage of arts & minds - Book on celebrity couple". The Telegraph. 26 December 2003. http://www.telegraphindia.com/1031226/asp/guwahati/story_2719265.asp.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ 3.0 3.1 Suchibrata Ray, Silpi Dipali Barthakuror 71 Sonkhyok Jonmodin, Amar Asom, 31 January 2012, accessed date: 03-02-2012
- ↑ 4.0 4.1 "Deepali-Borthakur". assamspider.com. Archived from the original on 10 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 April 2013.
- ↑ "Musical Minds". enajori.com. Archived from the original on 2013-04-10. பார்க்கப்பட்ட நாள் 2013-04-12.
- ↑ "Where Rubies are Hidden - II". Rukshaan Art. பார்க்கப்பட்ட நாள் 8 July 2019.
- ↑ Dipali Borthakur Passes Away
- ↑ "October 16th, 2010 - October 28th, 2010, The Strand Art Room, Neel Pawan Baruah". ArtSlant. Archived from the original on 2020-02-15. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.
- ↑ "Rediff On The NeT: Nani Palkhivala, Lakshmi Sehgal conferred Padma Vibushan". Rediff.co.in. 1998-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.
- ↑ TI Trade (2010-01-18). "The Assam Tribune Online". Assamtribune.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-01.