திபெத்து மீதான மங்கோலியப் படையெடுப்புகள்

 

திபெத்து மீதான மங்கோலியப் படையெடுப்புகள் பலமுறை நடத்தப்பட்டன. 1206ஆம் ஆண்டு செங்கிஸ் கான் திபெத்து மீது படையெடுக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுவதே திபெத்து படையெடுப்பு பற்றிய ஆரம்பகாலத் தகவல் ஆகும்.[1] இருந்தும் இது பொருந்தாத ஒன்றாகக் கருதப்படுகிறது. 1240ஆம் ஆண்டின் இராணுவப் படையெடுப்புக்கு முன்னர் மங்கோலியர்கள் மற்றும் திபெத்தியர்களுக்கு இடையே எதிர்பாராத சந்திப்புகள் ஏற்பட்டதாக ஆதாரங்கள் கிடையாது.[2] 1240ஆம் ஆண்டு மங்கோலியத் தளபதி தூர்த தர்கன் தலைமையிலான திபெத்து மீதான படையெடுப்பு தான் முதல் உறுதி செய்யப்பட்ட படையெடுப்பு ஆகும்.[3] இதில் 30,000 துருப்புக்கள் பங்கெடுத்தன.[4][5] 500 பேர் இறந்தனர்.[6] பெரிய பேரரசுகளுக்கு எதிராக மங்கோலியர்கள் நடத்திய முழு அளவிலான படையெடுப்புகளை விட இந்தப் படையெடுப்பானது சிறியதாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. திபெத்தியலாளர்கள் மத்தியில் இது இன்றும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது.[7] 1240களின் பிற்பகுதியில் மங்கோலிய இளவரசன் கோதான் சாக்கிய லாமா சாக்கிய பண்டிதரை அழைத்தார். அப்பண்டிதர் மற்ற முதன்மையான திபெத்தியத் தலைவர்களை மங்கோலிய ஆளுமைக்குப் பணியுமாறு வலியுறுத்தினார்.[8] திபெத்து மீதான மங்கோலிய ஆட்சி மற்றும், மங்கோலியர்கள் மற்றும் திபெத்தியர்கள் இடையே புரவலர் மற்றும் சமயகுரு உறவுமுறை நிறுவப்பட்டதன் தொடக்கமாக இது பொதுவாகக் கருதப்படுகிறது. இந்த உறவு முறைகள் மங்கோலிய யுவான் அரச மரபைத் தோற்றுவித்த குப்லாய் கானின் ஆட்சியின் கீழும் தொடர்ந்தன. முழு திபெத்து மீதான ஆளுமையையும் சாக்கிய பண்டிதரின் உறவினரான திரோகோன் சோக்யல் பக்பாவுக்கு குப்லாய் கானால் அளிக்கப்பட்டது. இப்பகுதி மீதான யுவான் நிர்வாக ஆட்சியானது 14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது. இதற்குப் பிறகு யுவான் அரசமரபு சிதைவுற ஆரம்பித்தது.

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Wylie. p.105
  2. Wylie. p.106
  3. Wylie. p.110, 'delegated the command of the Tibetan invasion to an otherwise unknown general, Doorda Darkhan'.
  4. Shakabpa. p.61: 'thirty thousand troops, under the command of Leje and Dorta, reached Phanpo, north of Lhasa.'
  5. Sanders. p. 309, his grandson Godan Khan invaded Tibet with 30000 men and destroyed several Buddhist monasteries north of Lhasa
  6. Wylie. p.104
  7. Wylie. p.103
  8. Authenticating Tibet: Answers to China's 100 Questions, by Anne-Marie Blondeau and Katia Buffetrille, p13