யுவான் ஆட்சியில் திபெத்

மங்கோலியாவின் யுவான் வம்ச ஆட்சியில் திபெத் (Tibet under Yuan rule) மங்கோலியப் பேரரசின் யுவான் வம்ச ஆட்சியின் கீழ் திபெத் 1354 முதல் 1270 முடிய 84 ஆண்டுகள் இருந்த காலத்தைக் குறிக்கிறது. இக்காலத்தில் திபெத்திய பௌத்த விவகாரங்களை நிர்வகிக்க யுவான் வம்ச பேரரசரால் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இதனால் திபெத்திய பௌத்தத்தின் சாக்கியத் தத்துவப்பள்ளியின் குருமார்களான லாமாக்களின் செல்வாக்கு அதிகரித்தது.

மங்கோலியாவின் யுவான் வம்ச ஆட்சியில் திபெத்
宣政院轄地
1270–1354
மங்கோலியாவின் யுவான் வம்ச ஆட்சியில் திபெத்
மங்கோலியாவின் யுவான் வம்ச ஆட்சியில் திபெத்
சமயம்
திபெத்திய பௌத்தம்
அரசாங்கம்யுவான் வம்ச ஆட்சி
வரலாறு 
• தொடக்கம்
1270
• முடிவு
1354
முந்தையது
பின்னையது
[[மங்கோலியப் பேரரசு]]
பாக்மோதுருபா வம்சம்
1294-இல் யுவான் பேரரசின் வரைபடம்

கிளர்ச்சிகள்

தொகு

1290-இல் ஏற்பட்ட திபெத்திய கிளர்ச்சிகளை அடக்க குப்லாய் கானின் பேரன் தேமூர்-புக்வா எடுத்த நடவடிக்கைகளின் போது, திரிக்குன் மடாலயத்தை கொளுத்தி 10,000 திபெத்திய கிளர்ச்சியாளர்களை கொன்றார்.[1]

யுவான் வம்சத்தின் வீழ்ச்சி

தொகு

சீனா மாகாணங்களின் எழுச்சியால் 1346 - 1354-க்கு இடைப்பட்ட காலத்தில் யுவான் அரசமரபு வீழ்ச்சியடையத் துவங்கியது. இதனால் திபெத்தில் மங்கோலியர்களின் யுவான் வம்ச ஆட்சி 1358-இல் முடிவிற்கு வந்தது. இதனால் திபெத்தில் சாக்கிய பௌத்தப் பிரிவினரின் மேலாதிக்கம் ஒழிந்து, கையு பௌத்தப் பிரிவினர்களின் கை ஓங்கியது.

தன்னாட்சியுடன் திபெத்

தொகு

பின்னர் 1720-இல் சீனாவின் குயிங் வம்சம் திபெத்தை கைப்பற்றும் வரை, கையு பௌத்தப் பிரிவினர் திபெத்தை தன்னாட்சியுடன் 362 ஆண்டுகள் தன்னாட்சியுடன் ஆண்டனர்.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Wylie, Turnell V. (1977) "The First Mongol Conquest of Tibet Reinterpreted," Harvard Journal of Asiatic Studies 37.1: 103-133.

ஆதார நூற்பட்டியல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_ஆட்சியில்_திபெத்&oldid=4060449" இலிருந்து மீள்விக்கப்பட்டது