1959 திபெத்தியக் கிளர்ச்சி
1959 சீனாவிற்கு எதிரான திபெத்தியர்களின் கிளர்ச்சி (1959 Tibetan uprising or the 1959 Tibetan rebellion) 1951-இல் திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்த பின்னர்[11], திபெத் நாடானது, 1955-இல் சீனாவின் ஒரு நிர்வாகப் பகுதியாக மாற்றப்பட்டது. இதனை திபெத்திய மக்கள் ஏற்காது தொடர்ந்து அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் திபெத்திய பௌத்த சமயத் தலைவரான 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோவை சீன அரசு கைது செய்து விடுவார்களோ எனற அச்சத்தின் காரணமான, 10 மார்ச் 1959 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவில் சீன அரசுக்கு எதிரராக திபெத்திய போராளிகள், பௌத்த பிக்குகள், திபெத்திற்கு கிழக்கில் உள்ள காம் மாகாண காம்பா மக்கள், திபெத்தை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சிகளை தொடங்கினர்.[12][13]ஆனால் ஜெனரல் தான் குவான்சான் தலைமையிலான சீன இராணுவத்தினர் 23 மார்ச் 1959 அன்று சீனாவிற்கு திபெத்தியர்களின் கிளர்ச்சியை போரிட்டு ஒடுக்கினர். இந்த கிளர்ச்சியில் 2,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 85 ஆயிரம் முதல் 87 ஆயிரம் திபெத்தியர்கள் காயமடைந்தனர்.
1959 திபெத்தியக் கிளர்ச்சி | |||||||
---|---|---|---|---|---|---|---|
பனிப்போர் பகுதி | |||||||
![]() கிளர்ச்சியின் போது திபெத்தியப் படைத்தலைவர் சரோங் மற்றும் திபெத்திய பௌத்த பிக்குகள், சீன இராணுவத்தால் கைதி செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
![]() கிழக்கு திபெத்தில் கிளர்ச்சி: | சீன மக்கள் குடியரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பல்வேறு சீன எதிர்ப்புத் தலைவர்கள் [6] | ![]() |
||||||
இழப்புகள் | |||||||
காயமுற்றோர் 85,000–87,000 [8] [9][10] | 2,000 கொல்லப்பட்டனர் |

![கிளர்ச்சியின் இறுதியில் திபெத்தியப் போராளிகள், ஜோக்காங் விகாரையின் கூரை மீதேறி சீனத் துருப்புகளுக்கு எதிராக இயந்த்திரத் துப்பாக்கிகளால் சுடும் காட்சி [14]](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Bundesarchiv_Bild_135-S-12-47-14%2C_Tibetexpedition%2C_Lhasa%2C_Blick_auf_den_Stadttempel.jpg/250px-Bundesarchiv_Bild_135-S-12-47-14%2C_Tibetexpedition%2C_Lhasa%2C_Blick_auf_den_Stadttempel.jpg)
கிளர்ச்சிக்குப் பின்னர்
தொகுதிபெத்தின் தலைநகரான லாசா நகரத்தின் செரா விகாரை, கான்டென் விகாரை மற்றும் துரெப்ங் விகாரைகளை சீன இராணுவம் குண்டுகள் பொழிந்து பெரும் சேதம் உண்டாக்கினர். தலாய் லாமாவின் மெய்க்காவல் படையினரின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டு, பொது இடத்தில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திபெத்தியர்களின் வீடுகளையும், பொது இடங்களையும் சீனப்படையினர் சோதனையிட்டு, ஆயுதங்களை பறித்தனர். ஆயிரக்கணக்கான திபெத்திய பௌத்தப் பிக்குகளை கைது செய்தனர். பலரை மரண தண்டனை விதித்தனர். லாசாவில் இருந்த விகாரை எனும் வழிபாட்டு கட்டிடங்களை கொள்ளையடித்து, அழித்தனர்.[9]
12 மார்ச் மாதத்திற்குப் பின்னர் திபெத்திய பெண்கள் சீன இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் மேற்கொண்டு கிளர்ச்சி செய்தனர். கிளர்ச்சி செய்த போராட்ட வீரகங்னைகளை சீன இராணுவம் கைது சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட பெண்களை சீன இராணுவம் சிறையில் கொடுமைப்படுத்தினர். 12 பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சீனா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத் பகுதிக்கு, 1965-இல் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற சலுகை வழங்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டு சீனாவிற்கு எதிரான திபெத்தியர்கள் நடத்திய கிளர்ச்சியை நினைவு கூறும் வகையில், திபெத்தியர்கள் வாழும் உலக நாடுகளில் ஆண்டுதோறும் மார்ச், 10 நாளான்று திபெத்தியர்கள் எழுச்சி நாள் மற்றும் 12 மார்ச் அன்று திபெத்தியப் பெண்களின் எழுச்சி நாளும் கொண்டாடப்படுகிறது. [15]
இதனையும் காண்க
தொகு- திபெத்திய வரலாறு
- திபெத்தியப் பேரரசு
- குயிங் ஆட்சியில் திபெத்
- திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு – 1904
- லாசா உடன்படிக்கை - 7 செப்டம்பர் 1904
- திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
- திபெத் (1912–1951)
- திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் - 1951
- திபெத் தன்னாட்சிப் பகுதி - சீனாவின் கீழ், 1965 முதல்
- திபெத் தன்னாட்சிப் பகுதி - 1965 முதல் சீனாவின் கீழ்
- திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
- தலாய் லாமா டென்சின் கியாட்சோ
மேற்கோள்கள்
தொகு- ↑ Van Schaik 2013, ப. 233, 236.
- ↑ "Status Report on Tibetan Operations". Office of the Historian. January 26, 1968.
- ↑ Salopek, Paul (January 26, 1997). "THE CIA'S SECRET WAR IN TIBET". Chicago Tribune. Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-1997-01-26-9701270002-story.html.
- ↑ Conboy, Kenneth J.; Morrison, James; Morrison, James (2002). The CIA's Secret War in Tibet. Lawrence: University Press of Kansas. Archived from the original on 1 April 2022. Retrieved 11 December 2018.
- ↑ "China/Tibet (1950–Present)". University of Central Arkansas.
- ↑ Van Schaik 2013, ப. 234.
- ↑ Van Schaik 2013, ப. 232, 235.
- ↑ Mackerras, Colin (1988). "Drama in the Tibetan Autonomous Region.". Asian Theatre Journal 5 (2): 198–219.
- ↑ 9.0 9.1 Official Website of the Tibetan Government in Exile. History Leading up to March 10th 1959. 7 September 1998. Retrieved March 16, 2008.
- ↑ "Inside Story of CIA's Black Hands in Tibet. The American Spectator, December 1997". Archived from the original on 2011-07-19. Retrieved 2009-02-28.
- ↑ Chen Jian, The Tibetan Rebellion of 1959 and China's Changing Relations with India and the Soviet Union, Journal of Cold War Studies, Volume 8 Issue 3 Summer 2006, Cold War Studies at Harvard University.
- ↑ Li, Jianglin (2016-10-10). Tibet in Agony (in ஆங்கிலம்). Harvard University Press. ISBN 978-0-674-97370-1.
- ↑ Luo, Siling (2016-06-22). "西藏的秘密战争,究竟发生了什么?(下)". The New York Times (in சீனம்). Retrieved 2020-07-15.
- ↑ Van Schaik 2013, ப. 236.
- ↑ Gyatso, His Holiness the 14th Dalai Lama, Tenzin (18 November 2011). "The Genesis Of The Tibetan Women's Struggle For Independence". tibetanwomen.org. Tibetan Women’s Association. Retrieved 30 January 2019.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
கூடுதல் ஆதாரங்கள்
தொகு- Avedon, John (1997). In Exile from the Land of Snows: The Definitive Account of the Dalai Lama and Tibet Since the Chinese Conquest. Harper Perennial. ISBN 978-0-06-097741-2.
- Bauer, Kenneth M. (2004), High Frontiers: Dolpo and the Changing World of Himalayan Pastoralists, Columbia University Press, ISBN 978-0-231-12390-7
- Croddy, Eric (2022). China's Provinces and Populations: A Chronological and Geographical Survey. Springer. ISBN 978-3-031-09164-3. Archived from the original on 18 December 2022. Retrieved 18 December 2022.
- Conboy, Kenneth; Morrison, James (2002). The CIA's Secret War in Tibet. University Press of Kansas. ISBN 978-0-7006-1159-1.
- Feigon, Lee (1996). Demystifying Tibet: Unlocking the Secrets of the Land of the Snows. Ivan R Dee. ISBN 978-1-56663-089-4.
- Garver, John W. (1997). The Sino-American Alliance: Nationalist China and American Cold War Strategy in Asia (Illustrated, reprint ed.). M.E. Sharpe. ISBN 978-0-7656-0053-0. கணினி நூலகம் 36301518.
- Grunfeld, A. Tom (1996). The Making of Modern Tibet. East Gate Book. ISBN 978-1-56324-713-2.
- Guyot-Réchard, Bérénice (2017). Shadow States: India, China and the Himalayas, 1910–1962. Cambridge University Press. ISBN 978-1-107-17679-9. Archived from the original on 18 December 2022. Retrieved 18 December 2022.
- Jian, Chen (Summer 2006), "The Tibetan Rebellion of 1959 and China's Changing Relations with India and the Soviet Union" (PDF), Journal of Cold War Studies, 8 (3): 54–101, doi:10.1162/jcws.2006.8.3.54, S2CID 153563687, archived (PDF) from the original on 8 June 2011, retrieved 16 March 2008
- Knaus, Robert Kenneth (1999). Orphans of the Cold War: America and the Tibetan Struggle for Survival. PublicAffairs. ISBN 978-1-891620-18-8.
- Laird, Thomas (2006). The Story of Tibet: Conversations with the Dalai Lama. Grove Press. ISBN 978-0-8021-1827-1.
- Li, Janglin (2016). Tibet in agony, Lhasa 1959. Harvard University Press. ISBN 978-0-674-08889-4.
- 14th Dalai Lama (1990). Freedom in exile: the autobiography of the Dalai Lama (1st ed.). HarperCollins. ISBN 0-06-039116-2. கணினி நூலகம் 21949769.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - Richardson, Hugh E (1984). Tibet and its History (Second, Revised and Updated ed.). Shambhala. ISBN 978-0-87773-376-8.
- Robin, Francoise (2020). "Introduction". Resistant Hybridities: New Narratives of Exile Tibet. Lexington Books. pp. 1–16. ISBN 9781498552363. Archived from the original on 18 December 2022. Retrieved 18 December 2022.
- Shakya, Tsering (1999). The Dragon In The Land Of Snows. Columbia University Press. ISBN 978-0-231-11814-9.
- Smith, Warren W. Jr (1997). Tibetan Nation: A History Of Tibetan Nationalism And Sino-tibetan Relations. Westview press. ISBN 978-0-8133-3280-2.
- Van Schaik, Sam (2013). Tibet: A History. Yale University Press. ISBN 978-0-300-19410-4.
- Watry, David M (2014). Diplomacy at the Brink: Eisenhower, Churchill, and Eden in the Cold War. Baton Rouge: Louisiana State University Press. ISBN 978-0-8071-5718-3.
வெளி இணைப்புகள்
தொகு- March Winds பரணிடப்பட்டது 2 பெப்ரவரி 2019 at the வந்தவழி இயந்திரம், 7 March 2009 – Jamyang Norbu
- Tibetan Government in Exile's account of the events leading to the March 10, 1959, uprising
- Kopel, Dave. "The Dalai Lama's Army". National Review, April 5, 2007.
- Patterson, George N. The Situation in Tibet The China Quarterly, No. 6. (Apr.–Jun., 1961), pp 81–86.
- Ginsburg, George and Mathos, Michael. Communist China's Impact on Tibet: The First Decade. Far Eastern Survey, Vol. 29, No. 7. (July,1960), pp. 102–109.
- The Tibetan Uprising of 1959 பரணிடப்பட்டது 5 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்