குயிங் ஆட்சியில் திபெத்

சீனாவின் குயிங் வம்ச ஆட்சியில் திபெத் (Tibet under Qing rule) சீனாவின் குயிங் வம்ச ஆட்சியின் கீழ் திபெத் 1720 முதல் 1912 முடிய இருந்த 192 ஆண்டுகளின் காலக்கட்டத்தைக் குறிக்கிறது.

குயிங் ஆட்சியின் கீழ் திபெத்
மாகாணம் சீனாவின் குயின் பேரரசு
[[மங்கோலியாவின் சுகர் கானகம்|]]
1720–1912 [[திபெத் (1912–1951)|]]
Location of குயிங் ஆட்சியின் கீழ் திபெத்
Location of குயிங் ஆட்சியின் கீழ் திபெத்
1820-இல் சீனாவின் சி பேரரசில் திபெத்
தலைநகரம் லாசா
அரசு சீனாவின் குயிங் வம்ச ஆட்சி
வரலாறு
 •  திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு 1720
 •  லாசா கலவரம் 1750
 •  சீன நேபாளப் போர் 1788–1792
 •  திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு 1903–1904
 •  சிங்காய் லாசா கிளர்ச்சிகள் 1912

வரலாறு தொகு

முன்னர் மங்கோலிய டிசுங்கர் வம்சத்தினரை வென்ற, மங்கோலிய கோசூத் கானக வம்சத்தினர் திபெத்தை 1642 முதல் 1717 முடிய 75 ஆண்டுகள் ஆண்டது. 1720-இல் சீனாவின் குயின் வம்சத்தினர் கோசூத் கானக வம்சத்தினரை வென்றனர். பின் திபெத்தில், குயிங் வம்சத்தின் அரசப் பிரதிநிதியை நியமனம் செய்து ஆட்சி செய்தனர்.[1] குயிங் ஆட்சியின் கீழ் திபெத், தலாய் லாமாக்களின் கீழ் அரசியல் சுயாட்சியை தக்க வைத்துக் கொண்டது.

திபெத் மீதான பிரித்தானியர்களின் படையெடுப்பு (1903–1904) தொகு

திபெத் வழியாக இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே பட்டுப் பாதை வழியாக வணிகம் செய்வதற்கு வசதியாக 1886-இல் பிரித்தானியர்களுக்கும் - சீனர்களுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கோள்ளப்பட்டது.[2] 1890,[3] and 1893,[4]ஆனால் இந்த ஒப்பந்தத்தை திபெத்தியர்கள் ஏற்கவில்லை.[5]திபெத்தியர்கள் பட்டுப் பாதைளில் தடைகளை ஏற்படுத்தி பிரித்தானிய வணிகர்களின் வண்டிகளை மறித்தனர். பிரித்தானியா - ருசியா இடையே தொடர்ந்த அரசியல் முறுகல் காரணமாக, ருசியாவை கண்காணிக்க லாசாவில் ஒரு பிரித்தானிய அரசப்பிரதிநிதைய நியமிக்க முடிவு செய்தனர்.

20-ஆம் நூற்றான்டின் துவக்கத்தில் நடு ஆசியாவில் தங்கள் மேலான்மையை வலுப்படுத்திக் கொள்வதற்கு ரஷ்யாவும், பிரித்தானிய இந்தியாவும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. லாசாவில் பிரித்தானிய வணிகர்களின் போக்குவரத்தை தடைசெய்து கொண்டிருந்த திபெத்தியர்களை அடக்குவதற்கும், லாசாவுடன் ருசியாவின் நட்பை தடை செய்யவும், 1904-இல் பிரித்தானியப் படைகள் லாசாவை நோக்கிச் சென்றது. இதற்கு பதிலடியாக சீனாவை ஆண்டு கொண்டிருந்த குயிங் பேரரசு, திபெத் தனது ஆட்சிக்குட்பட பகுதி என பிரித்தானியவை எச்சரிக்கை செய்தது.[6]பிரித்தானியப் படைகள் லாசாவை அடைவதற்கு முன் தலாய் லாமா தனது மெய்க்காவலர்களுடன் வெளி மங்கோலியாவிற்கு சென்று, 1908-இல் பெய்ஜிங் சென்றார்.

1904-இல் லாசா உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. லாசா உடன்படிக்கையின் படி, பிரித்தானிய இந்திய வணிகர்கள் மற்றும் பயணியர்கள் எவ்வித தடையின்றி லாசா வழியாக செல்வதற்கு திபெத்தியர்கள் தலையிடக்கூடாது என்றும், மேலும் திபெத்தியர்கள் வேறு நாடுகளுடன், பிரித்தானியர்கள் அனுமதியின்றி அரசியல் ரீதியாக தொடர்புகள் கொள்ளக்கூடாது என்றும், அதற்காக திபெத்திய அரசிடமிருந்து, பிரித்தானிய இந்தியா அரசினர் பிணைத் தொகை ரூபாய் 2.5 மில்லியன் வசூலித்தனர்.[7]

லாசா உடன்படிக்கையைத் தொடர்ந்து 1906-இல் நடைபெற்ற திபெத் தொடர்பான பிரித்தானிய இராச்சியம் மற்றும சீனா மாநாட்டில், பிரித்தானியர்களோ அல்லது சீனர்களோ திபெத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்கவோ அல்லது உள்நாட்டு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்றும் முடிவானது.[8] மேலும் 1904-இல் செய்து கொள்ளப்பட்ட லாசா உடன்படிக்கையின் படி, பெய்ஜிங் ஈட்டுத்தொகையாக 2.5 மில்லியன் ரூபாய் இலண்டனுக்கு செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. [9] 1907-இல் பிரித்தானியா மற்றும் ருசியா]வும், திபெத் மீதான சீனாவின் மேலான்மையை ஏற்றுக்கொண்டது.[10] "[10] சிங்காய் புரட்சியின் முடிவில், திபெத் புதிய அரசியல் எழுச்சியுடன் 1912 முதல் 1951 முடிய சுயாட்சியுடன் ஆட்சி செய்தது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு