திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு

திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு (British expedition to Tibet), பிரித்தானிய இந்தியாவின் வணிகர்கள் திபெத் மற்றும் சிக்கிம் வழியாக பட்டுப் பாதை மூலம் இணைந்து சீனாவுடன் வணிகம் செய்ய திபெத்தியர்கள் தடை செய்ததால, பிரித்தானிய இந்தியா இராணுவம் திபெத் மீதான இப்படையெடுப்பு டிசம்பர் 1903-இல் துவங்கி, செப்டம்பர் 1904 வரை நீடித்தது.[2] 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் பர்மா மற்றும் சிக்கிம் கைப்பற்றிய பிறகு, பட்டுப் பாதையில் சீனாவுடன் பிரித்தானியர்கள் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், நடு ஆசியாவில் ருசியாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், சீனாவின் குயிங் ஆட்சியில் உள்ள திபெத்தை ஆக்கிரமிக்க பிரித்தானியப் பேரரசு திட்டம் வகுத்தது.[3]

திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு

பிரித்தானிய மற்றும் திபெத்திய அதிகாரிகள் சந்திப்பு
நாள் டிசம்பர் 1903 - செப்டம்பர் 1904
இடம் திபெத்
26°05′20″N 89°16′37″E / 26.08889°N 89.27694°E / 26.08889; 89.27694
பிரித்தானியர்களுக்கு வெற்றி
பிரிவினர்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு பிரித்தானியப் பேரரசு
 இந்தியா
சீனாவின் குயிங் பேரரசு
திபெத்
தளபதிகள், தலைவர்கள்
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஜேம்ஸ் ஆர். எல். மெக்டோனால்டு
பிரான்சிஸ் யங் ஹஸ்பென்ட்
தபோன் டைலிங்
13-வது தலாய் லாமா
பலம்
3,000 படைவீரர்கள்
7,000 துணைப் படைவீரர்கள்
அறியப்படவில்லை, பல்லாயிரக்கணக்கான வேளாண் குடிகள்
இழப்புகள்
போர் வீரர்கள் 202
பிறர் 411
2,000–3,000 [1]

ஏப்ரல் 1903-இல் ருசியா தனக்கு திபெத்தில் எவ்வித அரசியல் ஆதாயம் இல்லை என அதிகாரப்பூர்வமாக பிரித்தானியர்களுக்கு அறிவித்தது. இதனை அடுத்து இந்தியத் தலைமை ஆளுநர் கர்சன் பிரபு திபெத்தை ஆக்கிரமிக்க படைகள் அனுப்பலாம் என பிரித்தானியப் பேரரசுக்கு தகவல் அனுப்பினார்.[4]

1904-இல் பிரித்தானியர்கள் திபெத்தின் தலைநகரம் லாசாவை கைப்பற்றிய பின்னர், திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர் 13-வது தலாய் லாமா வெளி மங்கோலியாவிற்கும், பின்னர் பெய்ஜிங்குற்கும் தப்பி ஓடினார். இதனால் திபெத்திய இராணுவ அதிகாரிகளுக்கும், பிரித்தானிய அரசியல் அலுவலர்களுக்கும் இடையே லாசா உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. [5][6][7]

லாசா உடன்படிக்கை

தொகு

லாசா உடன்படிக்கையின் படி, பிரித்தானிய வணிகர்கள் திபெத்தின் லாசா வழியாக சீனாவின் குயிங் பேரரசின் மேற்கு பகுதி நகரங்களுக்கு, திபெத்தியர்களின் தொந்தரவு இன்றி வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிந்தது. பிரித்தானியர்கள்க்கு போர் நட்ட ஈட்டுத் தொகையாக 50 இலட்சம் ரூபாய் திபெத்தியர்கள் செலுத்தும் வரை, திபெத்தின் சும்பி பீடபூமியை பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்தில் இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் சிக்கிம், பூடான், நேபாளம் போன்ற நாடுகளின் விவகாரங்களில் திபெத்தின் தலையீடு செய்யக் கூடாது என்றும் மற்றும் வேறு நாடுகளின் இராணுவ ஆதரவை திபெத் பெறக்கூடாது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் பிரித்தானிய இந்தியா திபெத் வழியாக எவ்வித தடைகளின்றி சீனாவின் குயிங் பேரரசில் வணிகம் செய்ய முடிந்தது. [8] [9]

இதனையும் காணக்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Charles Allen, p. 299.
  2. Landon, P. (1905). The Opening of Tibet Doubleday, Page & Co., New York.
  3. Charles Allen, Duel in the Snows, John Murray 2004, p. 1.
  4. Bell, Charles (1992). Tibet Past and Present. CUP Motilal Banarsidass Publ. p. 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1048-1. Archived from the original on 3 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2010.
  5. "Convention Between Great Britain and Tibet (1904)". Archived from the original on 10 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2011.
  6. Charles, Bell (1992). Tibet Past and Present. CUP Motilal Banarsidass Publ. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1048-1. Archived from the original on 3 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2010.
  7. Joslin, Litherland and Simpkin. British Battles and Medals. pp. 217–8. Published Spink, London. 1988.
  8. Powers 2004, pg. 82
  9. Alexandrowicz-Alexander, Charles Henry (1954). "The Legal Position of Tibet". The American Journal of International Law 48 (2): 265–274. doi:10.2307/2194374. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9300. 

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • "No. 27743". இலண்டன் கசெட் (Supplement). 13 December 1904. pp. 8529–8536. Macdonald's official report