திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் (annexation of Tibet by the People's Republic of China), இந்நிகழ்வை திபெத்தின் அமைதியான விடுதலை என சீனப் பொதுவுடமைக் கட்சியும்[7][8][9] மற்றும் திபெத் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு என திபெத்தியர்களின் மைய நிர்வாகம் [10]மற்றும் திபெத்திய மக்களும் அழைக்கின்றனர்.[11]சீனாவிற்கும், திபெத்திற்கும் 6 அக்டோபர் 1950 முதல் 23 மே 1951 முடிய நடைப்பெற்ற பனிப்போர் முடிவில்[12][13], 1951-இல் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தம்[14] மூலம் திபெத் நாடு, சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.

திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல்
பனிப்போர் பகுதி
நாள் 6 அக்டோபர் 1950 – 23 மே 1951 (7 மாதம், 2 வாரம் மற்றும் 3 நாட்கள்)
இடம் திபெத்
ஏழு அம்ச ஒப்பந்தம், 1951[1]
பிரிவினர்
திபெத் (1912–1951)  சீனா
தளபதிகள், தலைவர்கள்
வாங் சன்கிராப் தூடோப்
கபோய் கவாங் ஜிக்மே  (கைதி)[2]
லாலு சேவாங் தோர்ஜி \[3]
மா சே துங்
சோ என்லாய்
சான் குவாஹூவா
பான் மிங்
படைப் பிரிவுகள்
திபெத்திய இராணுவம்[4] சீன மக்கள் விடுதலை இராணுவம் [5][6]

சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத்திய அரசாங்கம் மற்றும் திபெத்திய சமூக அமைப்புகள் செயல்பட்டது. 1959 திபெத்தியக் கிளர்ச்சியின் போது, திபெத்திய பௌத்த மத குருவாக இருந்த 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்திலிருந்து நாடு கடந்து, இந்தியாவில் 28 ஏப்ரல் 1959 அன்று நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார். எனவே திபெத்தில் இருந்த திபெத்திய அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் கலைக்கப்பட்டது.[15][16]

சீனாவுடன் திபெத்தை இணைத்த பின்னர்

தொகு
 
1951-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஏழு அம்ச ஒப்பந்தத்திற்கு பின்னர், சீன மற்றும் திபெத்திய தலைவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம்[17]
 
1954-இல் திபெத்தின் 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, சீன அதிபர் மா சே துங்கை சந்தித்து, திபெத்தியர்களின் பிரார்த்தனை துணியை அன்பளிப்பாக வழங்குதல்

1950-இல் திபெத்தின் எல்லைப்புற பகுதியான குவாம்தோவை சீன இராணுவத்தினர் கைப்பற்றும் வரை, தலாய் லாமா டென்சின் கியாட்சோ தலைமையிலான அரசாங்கம் திபெத் (1912–1951) ஆட்சி செய்து கொண்டிருந்தது. [18] [19]

1956-இல் திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு கிழக்கில் இருந்த காம் பகுதியில் சீன அரசு, நிலச்சீர்திருத்த சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்ததை அடுத்து, உள்ளூர் திபெத்திய மக்களுக்கும், சீன இராணுவத்திற்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.[20] இதனால் உள்ளூர் திபெத்திய மக்கள், சீனா அரசுக்கு எதிராக 1959-இல் கிளர்ச்சிகள் நடத்தினர். 17 மார்ச் 1959 அன்று இக்கிளர்ச்சி திபெத்தின் தலைநகரான லாசா வரை பரவிய போது, 14-வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ திபெத்தை விட்டு, இந்தியாவில் அடைக்கலம் அடைந்து, நாடு கடந்த திபெத்திய அரசை நிறுவினார்.[21][22] 1959 திபெத்திய கிளர்ச்சியின் போது 2,000 திபெத்தியர்கள், சீன இராணுவத்தால் கொல்லப்பட்டனர். திபெத்தில் தலாய் லாமா தலைமையிலான ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. [16] [23][24]

எட்மண்ட் ஹில்லரியுடன் இணைந்து 29 மே 1951-இல் எவரெசுட்டு சிகரத்தில் முதன்முதலில் ஏறி சாதனை படைத்த டென்சிங் நோர்கே என்ற திபெத்திய செர்ப்பா இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். [25]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Seventeen Point Agreement
  2. Mackerras, Colin. Yorke, Amanda. The Cambridge Handbook of Contemporary China. [1991]. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-38755-8. p.100.
  3. Goldstein, Melvyn C. (1991). A history of modern Tibet, 1913-1951, the demise of the lamaist state. University of California Press. p. 639.
  4. Freedom in Exile: The Autobiography of the Dalai Lama, 14th Dalai Lama, London: Little, Brown and Co, 1990 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-349-10462-X
  5. Laird 2006 p.301.
  6. Shakya 1999, p.43
  7. "Peaceful Liberation of Tibet". Xinhua News Agency. Archived from the original on 16 June 2017. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.
  8. Dawa Norbu (2001). China's Tibet Policy. Psychology Press. pp. 300–301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-0474-3.
  9. Melvyn C. Goldstein; Gelek Rimpoche (1989). A History of Modern Tibet, 1913-1951: The Demise of the Lamaist State. University of California Press. pp. 679, 740. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-06140-8.
  10. "China could not succeed in destroying Buddhism in Tibet: Sangay". Central Tibetan Administration. 25 May 2017. Archived from the original on 21 September 2018. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.
  11. Siling, Luo (2016-08-14). "A Writer's Quest to Unearth the Roots of Tibet's Unrest" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 27 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181127234528/https://www.nytimes.com/2016/08/15/world/asia/china-tibet-lhasa-jianglin-li.html. 
  12. Anne-Marie Blondeau; Katia Buffetrille (2008). Authenticating Tibet: Answers to China's 100 Questions. University of California Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24464-1. Archived from the original on 23 June 2016. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015. It was evident that the Chinese were not prepared to accept any compromises and that the Tibetans were compelled, under the threat of immediate armed invasion, to sign the Chinese proposal.
  13. Tsepon Wangchuk Deden Shakabpa (October 2009). One Hundred Thousand Moons: An Advanced Political History of Tibet. BRILL. pp. 953, 955. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-17732-1.
  14. Seventeen Point Agreement
  15. Latson, Jennifer (March 17, 2015). "How and Why the Dalai Lama Left Tibet". Time. https://time.com/3742242/dalai-lama-1959/. 
  16. 16.0 16.1 Goldstein 1997 p.54,55. Feigon 1996 p.160,161. Shakya 1999 p.208,240,241. (all sources: fled Tibet, repudiated agreement, dissolved local government).
  17. Goldstein, Melvyn C. (2007-08-01). A History of Modern Tibet, volume 2: The Calm before the Storm: 1951-1955 (in ஆங்கிலம்). University of California Press. p. 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-93332-3. Chinese and Tibetan government officials at a banquet celebrating the 'peaceful liberation' of Tibet.
  18. Shakya 1999 p.96,97,128.
  19. Goldstein 1997 p.52-54. Feigon 1996 p.148,149,151
  20. Goldstein 1997 p.53
  21. "The Dalai Lama Escapes from the Chinese". Time. April 20, 1959. http://content.time.com/time/subscriber/article/0,33009,864579-1,00.html. 
  22. "Tibetans revolt against Chinese occupation". history.com. A&E Television Networks. பார்க்கப்பட்ட நாள் 21 February 2021.
  23. van Walt van Praag, Michael; Boltjes, Miek (February 13, 2021). "Time To Break The Silence On Tibet". The Sunday Guardian. https://www.sundayguardianlive.com/news/time-break-silence-tibet. 
  24. Avedon, John F. (June 23, 1984). "China's Tibet Problem". The New York Times. https://www.nytimes.com/1984/06/23/opinion/chinas-tibet-problem.html. 
  25. https://www.britannica.com/biography/Tenzing-Norgay

உசாத்துணை

தொகு

மேலும் படிக்க

தொகு

The Tibet issue: Tibetan view, BBC, The Tibet issue: China's view, BBC