திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)

திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு, 1910 (1910 Chinese expedition to Tibet)[1] சீனாவை ஆண்ட குயிங் வம்சத்தினர் திபெத்தில் தங்களின் நேரடி ஆட்சியை நிறுவுவதற்கான 1910-இல் திபெத் மீது போர் தொடுத்தனர். போரின் போது 12 பிப்ரவரி 1910 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவைக் கைப்பற்றியும், 13-வது தலாய் லாமாவையும் விரட்டியும் திபெத்தை தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் சீனர்கள் கொண்டு வந்தனர்.[2]

திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
நாள் 1910
இடம் திபெத்
சீனாவை ஆண்ட குயிங் பேரரசுக்கு வெற்றி
பிரிவினர்
குயிங் பேரரசு திபெத்
தளபதிகள், தலைவர்கள்
குயிங் பேரரசு 13-வது தலாய் லாமா

வரலாறு தொகு

1720 முதல் திபெத், சீனாவின் குயிங் பேரரசின் ஆட்சிப் பகுதியாக இருந்தது. 1904-இல் ஆங்கிலேயர்கள்-சீனர்கள் செய்து கொன்ட லாசா உடன்படிக்கை மூலம், திபெத்தில் சீனர்களின் அரசியல் செல்வாக்கு மிகவும் குறைந்தது. எனவே திபெத்தை சீனாவின் குயிங் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர 1910-இல் சீனா திபெத்தின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது. எனவே திபெத்தின் ஆன்மீகம் மற்றும் அரசியல் தலைவரான 13-வது தலாய் லாமா லாசாவிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் அடைந்தார். [3][4]

இருப்பினும் 1911-912 ஆண்டுகளில் சிங்காய் மற்றும் லாசா பகுதிகளில் சீனப் பேரரசுக்கு எதிராக பரவிய பெருங்கிளர்ச்சிகளை எதிர்கொள்ள முடியாத அனைத்து சீனப் படைகளும் 1912 ஆண்டு இறுதிக்குள் திபெத்தை விட்டுச் சென்றது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு