லாசா உடன்படிக்கை

1904 திபெத்துக்கும் பிரிட்டிஷுக்கும் இடையிலான ஒப்பந்தம்

லாசா உடன்படிக்கை (Treaty of Lhasa), 1903-1904-களின் போது திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பிற்குப் பின்னர் சீனாவின் குயிங் பேரரசில் இருந்த திபெத்திற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே லாசாவில் நடைபெற்ற மாநாட்டில் 7 செப்டம்பர் 1904 அன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதன் தொடர்ச்சியாக ஆங்கிலேய - சீனா இடையே 1906-இல் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

லாசா உடன்படிக்கை
ஐக்கிய இராச்சியம் மற்றும் திபெத்திய மாநாடு
கையெழுத்திட்டது7 செப்டம்பர் 1904
இடம்லாசா, திபெத், சீனாவின் குயிங் பேரரசு

உடன்படிக்கையில் உள்ள நிபந்தனைகள் தொகு

லாசா உடன்படிக்கையின் படி, பிரித்தானிய வணிகர்கள் திபெத்தின் லாசா வழியாக சீனாவின் குயிங் பேரரசின் மேற்கு பகுதி நகரங்களுக்கு, திபெத்தியர்களின் தொந்தரவு இன்றி வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிந்தது. இதற்காக திபெத் நட்டத் தொகையாக 50 இலட்சம் ரூபாய் பிரித்தானியாவிற்கு செலுத்த நேரிட்டது. ரூபாய் 50 இலட்சம் செலுத்தும் வரை திபெத்தின் சும்பி பீடபூமியை பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகத்தில் இருக்கும். மேலும் சிக்கிம்- திபெத் எல்லைக் கோடுகளை மதித்து நடக்க வேண்டும். திபெத் சிக்கிம், பூடான், நேபாளம் போன்ற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது மற்றும் வேறு நாடுகளின் இராணுவ ஆதரவை திபெத் பெறக்கூடாது. இதனால் பிரித்தானிய இந்தியா திபெத் வழியாக எவ்வித தடைகளின்றி சீனாவின் குயிங் பேரரசில் வணிகம் செய்ய முடிந்தது. [1] [2]

லாசா உடன்படிக்கைக்குப் பின்னர் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Powers 2004, pg. 82
  2. Alexandrowicz-Alexander, Charles Henry (1954). "The Legal Position of Tibet". The American Journal of International Law 48 (2): 265–274. doi:10.2307/2194374. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-9300. 
  • Bell, Charles Tibet, Past and Present. Oxford

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாசா_உடன்படிக்கை&oldid=3178294" இருந்து மீள்விக்கப்பட்டது