சீன நேபாளப் போர்
சீன நேபாளப் போர் அல்லது சீன கோர்க்காப் போர் ( Sino-Nepalese War - Sino-Gorkha war) (சீனம்: 廓爾喀之役, நேபாளி: नेपाल-चीन युद्ध) நேபாளப் படைகள் 1788-1789 மற்றும் 1791-1792 ஆண்டுகளில் இரண்டு முறை திபெத்தியப் பேரரசை கைப்பற்றுவதற்காக நடந்த போராகும்.
சீன-நேபாளப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
சீனா, திபெத் | நேபாள இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
8வது தலாய் லாமா | ராணா பகதூர் ஷா | ||||||
பலம் | |||||||
10,000 | 10,000 | ||||||
இழப்புகள் | |||||||
தகவல் இல்லை | தகவல் இல்லை |
கோர்க்காலிகளுக்கு எதிரான இரண்டாவது தாக்குதல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
சீனா, திபெத் | நேபாள இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சிங் பேரரசர் புக்காங்கன் | ராணா பகதூர் ஷா தாமோதர பாண்டே |
||||||
பலம் | |||||||
70,000 | 20,000 - 30,000 | ||||||
இழப்புகள் | |||||||
தகவல் இல்லை | தகவல் இல்லை |
போரின் காரணங்கள்
தொகுநெடுங்காலமாக திபெத்தியப் பேரரசுக்காக, நேபாள இராச்சியத்தினர், தரம் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை உற்பத்தி செய்து வழங்கியதால் ஏற்பட்ட வணிகப் பிணக்கு முற்றியது. இதனால் கோபமுற்ற திபெத்தியர்கள், திபெத்தின் தலைநகரான லாசாவில் நேபாள வணிகர்களின் வணிகப் பொருட்களை கொள்ளையடித்தனர்.
எனவே நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவின் படைகள் திபெத்தின் மீது படையெடுத்தார். கெரூங் உடன்படிக்கையின் படி, திபெத்தியர்கள் ஆண்டுதோறும், நேபாள அரசுக்கு திறை செலுத்த வேண்டியதாயிற்று.
சிறிது காலம் கழித்து, இப்பிணக்கில் தலையிட்டு தீர்த்து வைக்க, திபெத்திற்கு அருகில் ஆட்சி செய்த சீன சிங் பேரரசிடம் திபெத்திய அரசு முறையிட்டது. அதன் படி, சிங் பேரரசின் படைத்தலைவர் புக்காங்கன் தலைமையிலான சீன - திபெத்திய படைகள், நேபாளப் படைகளை நூவா கோட் வரை துரத்தியடித்தது. பின்னர் பெத்திராவதி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர், சீனர்களுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்த வேண்டியதாயிற்று.[1]
போர் உடன்படிக்கை
தொகுநேபாள இராச்சியம், திபெத்தியப் பேரரசு மற்றும் சிங் பேரரசிற்கு இடையே 2 அக்டோபர் 1792ல், பெத்திராவதி எனுமிடத்தில் போர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.[2] போர் உடன்படிக்கையின் விவரங்கள்:
- நேபாளம் மற்றும் திபெத் நாடுகள் சிங் பேரரசின் மேலாண்மையை ஏற்று கொள்ளவேண்டும்.
- திபெத்தின் தலைநகரான லாசாவில், திபெத்தியர்கள் கொள்ளையடித்த நேபாள வணிகர்களின் உடைமைகளுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.
- நேபாள வணிகர்கள், திபெத் மற்றும் சீனாவில் வணிகம் செய்யும் உரிமை வழங்கப்பட்டது.
- திபெத் - நேபாள அரசுகளுக்கிடையே பிணக்குகள் ஏற்பட்டால், இருதரப்பு கோரிக்கையின் படி, சீனப் பேரரசு தலையிட்டு தீர்த்து வைக்கும்.
- வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து நேபாளத்தை காக்க சீனா அரசு உதவியாக இருக்கும்.
- ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நேபாளம் மற்றும் திபெத் இராச்சியங்கள், சீனாவின் சிங் பேரரசுக்கு திறை செலுத்த வேண்டும்.
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Tibetan and Nepalese Conflict". Official website of Nepal Army. Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
- ↑ Acharya, Baburam (2013), The Bloodstained Throne: Struggles for Power in Nepal (1775-1914), Penguin Books Limited, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5118-204-7
மேற்கோள்கள்
தொகு- Boulnois, L. (1989). "Chinese Maps and Prints on the Tibet-Gorkha War of 1788-92". Kailash: A Journal of Himalayan Studies (Kathmandu) 15 (1,2). http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/kailash/pdf/kailash_15_0102_03.pdf. பார்த்த நாள்: Oct 19, 2013.
- Mote, F.W. (1999). Imperial China 900-1800. Cambridge, MA: Harvard University Press. pp. 936–939. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674012127.
- Prinsep, Henry Thoby (1825), History of the political and military transactions in India during the administration of the Marquess of Hastings, 1813–1823, Vol 1, vol. 1, London: Kingsbury, Parbury & Allen
- Rose, Leo E. (1971). Nepal; strategy for survival. University of California Press. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789994655120.
- Regmi, Mahesh C. (ed.) (1970). "An official Nepali account of the Nepal-China War". Regmi Research Series (Kathmandu) 2 (8): 177–188. http://ebooks.library.cornell.edu/cgi/t/text/pageviewer-idx?c=regmi;cc=regmi;idno=002regmi;view=image;seq=177. பார்த்த நாள்: Oct 19, 2013.
- Norbu, Thubten Jigme; Turnbull, Colin (1972). Tibet: Its History, Religion and People (1 ed.). Penguin Books. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780140213829.
- Stein, R.A. (1972). Tibetan Civilization. Stanford University Press. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0804709017.
- Uprety, Prem (June 1996). "Treaties between Nepal and her neighbors: A historical perspective". Tribhuvan University Journal (Kathmandu) 19 (1): 15–24. http://tujournal.edu.np/index.php/TUJ/article/view/60. பார்த்த நாள்: Oct 19, 2013.
மேலும் படிக்க
தொகு- Wright, Daniel, History of Nepal. New Delhi-Madras, Asian Educational Services, 1990
வெளி இணைப்புகள்
தொகு- The History of Nepal: Expansion of Nepal பரணிடப்பட்டது 2011-12-10 at the வந்தவழி இயந்திரம்
- History of Nepalese Army: Nepal-Tibet War பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம்