நேபாள இராச்சியம்
நேபாள இராச்சியம் (Kingdom of Nepal) (நேபாளி: नेपाल अधिराज्य), காத்மாண்டு சமவெளியின் மல்லர் வம்ச மன்னர்களை எதிர்த்து, 1767 - 1768களில் நடைபெற்ற கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களின் முடிவில், நேபாளப் பகுதிகளை ஒன்றினைத்து, ஷா வம்சத்து கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா 1768-இல் சேத்திரிகளின் துணையுடன் நேபாள இராச்ச்சியத்தை நிறுவினார்.[1][2] தற்கால நேபாளத்தில் 2008-இல் முடியாட்சி முறை ஒழிக்கப்படும் வரை, 240 ஆண்டுகள் ஷா வம்சத்து மன்னர்கள் நேபாள இராச்சியத்தை ஆண்டனர்.
நேபாள இராச்சியம்
| |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1768–2008 | |||||||||
நாட்டுப்பண்: "May Glory Crown You, Courageous Sovereign" | |||||||||
![]() 2008-இல் நேபாள இராச்சியத்தின் பகுதிகள் | |||||||||
நிலை |
| ||||||||
தலைநகரம் | காட்மாண்டு | ||||||||
பேசப்படும் மொழிகள் | நேபாளி மொழி, நேபால் பாசா | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் |
| ||||||||
மகாராஜாதிராஜா | |||||||||
• 1768–1775 | பிரிதிவி நாராயணன் ஷா (முதல்) | ||||||||
• 2001–2008 | ஞானேந்திரா (இறுதி) | ||||||||
தலைமை அமைச்சர் (பிரதமர்) | |||||||||
• 1806 - 1837 | பீம்சென் தபா (முதல்) | ||||||||
• 2006–2008 | கிரிஜா பிரசாத் கொய்ராலா (இறுதி) | ||||||||
சட்டமன்றம் |
| ||||||||
வரலாறு | |||||||||
• பிரிதிவி நாராயணன் ஷா நேபாளத்தை ஒருங்கிணைத்தல் | 25 செப்டம்பர் 1768 | ||||||||
• ராணா வம்ச முதலமைச்சர்களின் ஆட்சி | 1846–1951 | ||||||||
• ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி | 1951–2008 | ||||||||
• அரசியலமைப்பிற்குட்பட்ட மன்னராட்சி | 1990–2007 | ||||||||
• நேபாளக் குடியரசு | 28 மே 2008 | ||||||||
நாணயம் |
| ||||||||
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NP | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |
1847 முதல் ஷா வம்சத்து நேபாள மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, ராணா வம்சத்தவர்கள் 1951 முடிய நேபாள இராச்சியத்தை நிர்வகித்தனர்.
வரலாறுதொகு
ஷா வம்ச ஆட்சிதொகு
நேபாள இராச்சியத்தின் ஷா வம்சத்து பிரிதிவி நாராயணன் ஷா உள்ளிட்ட கோர்க்கா மன்னர்கள், மேற்கில், வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் காங்கிரா, குமாவான், சிர்மூர் மற்றும் கார்வால் பகுதிகளையும், கிழக்கில் சிக்கிம் நாட்டை வென்று நேபாளத்துடன் இணைத்தனர். கோர்க்கா அரசு உச்சத்தில் இருக்கையில், கிழக்கில் டீஸ்டா ஆறு முதல் மேற்கில் சத்லஜ் ஆறு வரையும், தெற்கில் இமயமலையின் தெராய் சமவெளிப் பகுதிகள் வரை பரவியிருந்தது.
நாட்டை விரிவாக்குதல்தொகு
கீர்த்திப்பூர் போர், பக்தபூர் போர் மற்றும் காட்மாண்டுப் போர்களில், ஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா மற்றும் அவரது மகன்கள் பிரதாப் சிங் ஷா மற்றும் ராணா பகதூர் ஷா ஆகியோர், மல்லர் வம்சத்தினர் ஆண்ட காத்மாண்டு சமவெளியைக் கைப்பற்றி, தங்களது தலைநகரை காட்மாண்டிற்கு மாற்றினர்.
பின்னர் ஷா வம்சத்தினர், நேபாளத்தின் மேற்கில் உள்ள கார்வால், குமாவுன், சிர்மூர் நாடுகளையும், கிழக்கில் உள்ள சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளையும் கைப்பற்றி அகண்ட நேபாள இராச்சியத்தை நிறுவினர்.
திபெத் பகுதியின் மலைக்கணவாய்களையும், உள் திங்கிரி சமவெளியின் கட்டுப்பாட்டுகள் குறித்து, சீனாவின் குயிங் பேரரசுக்கும் - நேபாள அரசுக்குமிடையே நடந்த போரில், நேபாள இராச்சியம் வெற்றியை இழந்தது. நேபாளத்திற்கு ஏற்பட்ட இப்பின்னடைவால், 1816இல் ஏற்பட்ட நேபாள - சீன உடன்படிக்கையின்படி, நேபாள இராச்சியம், திபெத் மீதான கட்டுப்பாட்டை இழந்தது.
ஆங்கிலேய-நேபாளப் போர்தொகு
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் போது, நேபாள இராச்சியத்தின் எல்லைப்புறத்தில் இருந்த குறுநில மன்னர்கள், தங்கள் நாட்டை பிரித்தானிய இந்தியா அல்லது நேபாள இராச்சியத்துடன் இணைப்பது குறித்தான முடிவில், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும் நேபாள இராச்சியத்திற்கும் இடையே தோன்றிய கருத்து மோதல்கள், 1814-1816-இல் ஆங்கிலேய-நேபாளப் போருக்கு வித்திட்டது.
போரின் முடிவில் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட சுகௌலி ஒப்பந்தப்படி, நேபாள இராச்சியம் கைப்பற்றியிருந்த மொரங், சிக்கிம், டார்ஜிலிங், கார்வால் மற்றும் சிர்மூர் பகுதிகளை கம்பெனி ஆட்சியாளர்களுக்கு விட்டுக் கொடுத்தது. மேற்கு தராய் பகுதி ஆங்கிலேயர்களுக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு, நட்ட ஈடு வழங்க கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பரம்பரை முதலமைச்சர்கள் & தலைமைப் படைத்தலைவர்கள்தொகு
ஷா வம்ச மன்னர்களின் பிரதம அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் தாபா வம்சத்தின் பீம்சென் தபாவும் அவரது வாரிசுகளும், 1806 முதல் 1846 முடிய பதவியில் இருந்தனர். பின்னர் 1846 முதல் ராணா வம்சத்தினர், ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர்களாகவும், தலைமைப் படைத்தலைவர்களாகவும் செயல்பட்டனர்.
அரசியல் வீழ்ச்சியின் காரணமாக ஷா வம்சத்தின் மன்னராட்சி நிலைகுழைந்த போது, 1843-இல் ராணா வம்சத்து ஜங் பகதூர் ராணா மற்றும் அவரது வம்சத்தினர் 1846 முதல் 1951 முடிய நேபாள இராச்சியத்தின் தலைமை நிர்வாகிகளாக முழு அதிகாரத்துடன் செயல்பட்டனர்.
ராணா வம்ச ஆட்சி 1846–1951தொகு
நேபாள அரச குடும்பத்திற்குள் கோஷ்டி பூசல் கிளம்பியதன் விளைவாக, 1846ஆம் ஆண்டில் நேபாள தலைமைப் படைத்தலைவர் ஜங் பகதூர் ராணாவை, பதவியிலிருந்து நீக்க, நேபாள அரசி தீட்டிய சதித்திட்டம் வெளிப்பட்ட காரணத்தினால், நேபாள நாட்டு இராணுவத்திற்கும், நேபாள நாடு அரசியின் விசுவாசப் படைகளுக்கும் நடந்த கைகலப்பில் நேபாள முதலமைச்சர் பதே ஜங் ஷா மற்றும் மெய்க்காப்பாளர்கள் நாற்பது வரை படுகொலை செய்யப்பட்டனர். இதனை கோத் படுகொலைகள் என நேபாள வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. சதித் திட்டத்தை நிறைவேற்றிய நேபாள படைத்தலைவர் ஜங் பகதூர் ராணா நிறுவிய ராணா வம்சத்தவர்கள், நேபாள மன்னர்களை கைப்பாவையாக்கிக் கொண்டு நேபாள இராச்சியத்தை 1846 முதல் 1951 முடிய ஆட்சி செய்தனர்.
நேபாள இராச்சியத்தினர், 1857 சிப்பாய் கிளர்ச்சியை அடக்க, நேபாள நாட்டு கூர்க்கா படைகள் ஆங்கிலேயர்களுக்கு உதவின. பின்னர் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில், நேபாள இராச்சியம், பிரித்தானியப் பேரரசுக்கு உதவியது. அதற்கு கைம்மாறாக பிரித்தானிய அரசு, நேபாளி அல்லாத மக்கள் வாழும் தெராய் சமவெளிப் பகுதிகளை, நேபாளத்திற்கு பரிசாக வழங்கியது.
நேபாளம்தொகு
கி பி 1930-இல் நேபாள இராச்சியத்தின் இயற்பெயரான கோர்க்கா எனும் பெயரை நேபாளம் என மாற்றப்பட்டது. நாட்டின் தலைநகராக காத்மாண்டு விளங்கியது.[3][4]கோர்க்கா சர்க்கார் என்பதை நேபாள அரசு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல் ஜனநாயக இயக்கம் 1950–1960தொகு
1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில், ராணா வம்ச முடியாட்சிக்கு எதிராக, ஜனநாயக அரசு முறை நடைமுறைப்படுத்திடவும், அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்கள் போராட்டங்கள் துவங்கின. 1950இல் சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது, இந்திய அரசு, நேபாளத்தில் தன் ஆதிக்கத்தை வளர்த்துக்கொள்ள, மன்னர் திருபுவனையும், நேபாளி காங்கிரஸ் கட்சியின் புதிய பிரதமரின் தலைமையிலான நேபாள அரசையும் ஆதரித்தது.
பஞ்சாயத்து ஆட்சிக் காலம் 1960–1990தொகு
1955 முதல் 1972 முடிய நேபாள மன்னராக இருந்த மகேந்திரா, நேபாள அரசின் நிர்வாகத்தை ஏற்று நடத்த, அரசியல் கட்சிகள் சார்பற்ற பஞ்சாயத்து ஆட்சி முறை அமைப்பை 1960இல் உருவாக்கினார். இப்பஞ்சாயத்து அமைப்பு, நேபாளத்தை 1990 முடிய நிர்வகித்தது. 1972 முதல் 2001 முடிய நேபாள மன்னராக இருந்த வீரேந்திரரின் காலத்தில், ஜன் அந்தோலான் எனும் மக்கள் இயக்கத்தின் நீண்டகால போராட்டத்திற்குப் பின் மன்னர் பிரேந்திரா, அரசியல் அமைப்புச் சட்டத்தில், திருத்தங்கள் மேற்கொண்டு, மே 1991இல் பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.[5]
இரண்டாம் ஜனநாயக இயக்கம்தொகு
1996ஆம் ஆண்டில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), மன்னரின் கீழ் இயங்கும் நாடாளுமன்ற நடைமுறையை நீக்க, மக்கள் குடியரசு அமைய மக்கள் புரட்சி செய்தனர். இதனால் நேபாளம் முழுவதும் நீண்டகாலம் நடந்த உள்நாட்டுப் போரில் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
1 சூன் 2001இல் நேபாள அரண்மனையில் நேபாள அரச குடும்பத்தில் நடந்த படுகொலைகளில், மன்னர் வீரேந்திரர், ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்ப உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளுக்கு காரணமான பட்டத்து இளவரசர் தீபேந்திரா, மூன்று நாட்களுக்குப் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
மன்னர் வீரேந்திராவின் இறப்பிற்கு பின், அவரது சகோதரர் ஞானேந்திரா நேபாள மன்னராக பட்டமேற்றார். நேபாள பொதுவுடமைக் கட்சியின் வன்முறைகளை ஒடுக்க, 1 பிப்ரவரி 2005இல் மன்னர் ஞானேந்திரர் நேபாள நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அனைத்து ஆட்சி அதிகாரங்களை தன் கையில் எடுத்துக் கொண்டார்.[5]
கூட்டாச்சி ஜனநாயக குடியரசுதொகு
நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார். 24 ஏப்ரல் 2006இல் முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் நேபாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. 28 டிசம்பர் 2007 அன்று நேபாள அரசியல் சட்டத்தின் பிரிவு 159இல் திருத்தம் மேற்கொண்டு, நேபாள நாட்டை, கூட்டுக் குடியரசு நாடாக அறிவித்து, முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டது.[6][7]
புவியியல்தொகு
இமயமலையில் செவ்வக வடிவத்தில் அமைந்த நேபாள இராச்சியத்தின் நீளம் 800 கிலோ மீட்டராகவும்; அகலம் 200 கிலோ மீட்டராகவும், மொத்தப் பரப்பளவு 147,181 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது. புவியியல் ரீதியாக நேபாள இராச்சியம், மலைகள், மலைச்சார்ந்த பகுதிகள், சமவெளிப் பகுதிகள் என மூன்று நிலப்பரப்பாக பிரிக்கப்பட்டுள்ளது.
கோசி ஆறு, கண்டகி ஆறு, காக்ரா ஆறு மற்றும் பாக்மதி ஆறு என நான்கு பெரிய ஆறுகள் நேபாள இராச்சியத்தின் சமவெளிப் பகுதிகளை வளப்படுத்துகிறது.
நேபாள இராச்சியத்தில் இமயமலையின் மகாபாரத மலைத்தொடர், சிவாலிக் மலை, எவரெஸ்ட் மலைகள் அமைந்துள்ளது.
நேபாள மாவட்டங்கள், மண்டலங்கள் மற்றும் வளர்ச்சிப் பிராந்தியங்கள்தொகு
நிர்வாக வசதிக்காக நேபாளம், 75 மாவட்டங்களாகவும், 14 மண்டலங்களாகவும், 5 வளர்ச்சிப் பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்தொகு
நேபாள இராச்சியத்தின் பொருளாதாரம் 76% விழுக்காடு வேளாண்மையைச் சார்ந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்மை 39%, சேவை அமைப்புகள் 41%, தொழிற்சாலைகள் 22% பங்கு வகிக்கிறது.
மக்கள் தொகையியல்தொகு
சூலை 2005-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள இராச்சியத்தின் மொத்த மக்கள் தொகை27,676,547-ஆக இருந்தது. ஆயிரம் ஆண்களுக்கு 1060 பெண்கள் எனும் விகிதத்தில் பாலின விகிதம் இருந்தது.எழுத்தறிவு 53.74 விழுக்காட்டாகவும் இருந்தது.
இனக் குழுக்கள்தொகு
நேபாள இராச்சியத்தில் மலை பிராமணர்கள் 12.5%, மகர் மக்கள் 7%, தாரு மக்கள் 6.6%, தமாங் மக்கள் 5.5%, நேவார் மக்கள் 5.4%, காமி மக்கள் 3.9%, யாதவர்கள் 3.9%, மற்றவர்கள் 32.7%, வெள்ளை நேபாளிகள் 2.8% ஆகவும் உள்ளனர்.
மொழிகள்தொகு
நேபாள இராச்சியத்தில் ஆட்சி மொழியான நேபாள மொழி 47.8% நேபால் பாசா 3.6%, மைதிலி மொழி போஜ்புரி 7.4%, தாரு மொழி 5.8%, தாகுரா மொழி 5.8%, தமாங் மொழி 5.1%, மகர் மொழி 3.3%, அவதி மொழி 2.4%, பிற மொழிகள் 10%, வகைப்படுத்தாத மொழிகள் 2.5% அளவிலும் பேசப்படுகிறது.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Royal Ark
- ↑ Giuseppe, Father (1799). [htts://books.google.com/books?id=vSsoAAAAYAAJ&pg=PA307 "Account of the Kingdom of Nepal"]. Asiatick Researches. London: Vernor and Hood. 2 June 2012 அன்று பார்க்கப்பட்டது. p. 308.
- ↑ Planet, Lonely. "History of Nepal – Lonely Planet Travel Information". www.lonelyplanet.com. 2017-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-05-08 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Bindloss, Joseph (2010-09-15) (in en). Nepal 8. Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74220-361-4. https://books.google.com/books?id=wiIw2_WFwC4C.
- ↑ 5.0 5.1 "Timeline: Nepal". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/country_profiles/1166516.stm. பார்த்த நாள்: 29 September 2005.
- ↑ "Nepal votes to end monarchy". CNN Asia report. http://edition.cnn.com/2007/WORLD/asiapcf/12/28/nepal.monarchy/index.html?iref=mpstoryview.
- ↑ "Nepal votes to abolish monarchy". BBC News. 28 May 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7424302.stm. பார்த்த நாள்: 22 May 2011.