நேபாள காலக் கோடுகள்

நேபாளத்தின் முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைகள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்திய மகாபாரத இதிகாசத்தின் 12ஆம் பருவத்தில், 206ஆவது அத்தியாயத்தில், பரத கண்டத்தின் வடக்கேயுள்ள இமயமலைவாழ் மக்களைக் குறிப்பிடுகையில், கிராத இராச்சிங்களின் ஒரு பகுதியாக தற்கால நேபாளத்தை குறித்துள்ளது. மேலும் கிராத இராச்சியத்தின் கிராதப் படைகள் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டதாகவும் குறித்துள்ளது.

கிமு 5 - கிபி 1768

தொகு

ஒன்றிணைந்த நேபாள இராச்சியம் (1768 - 1979)

தொகு

பல கட்சி அரசியல் ஆட்சி முறை (1980 - 1991)

தொகு

அரசியல் கட்டமைப்பு சீர்குலைதல் (1994 - 2000)

தொகு

அரண்மனை படுகொலைகள் (2001)

தொகு

அவசர நிலை சட்டம் பிரகடனம் (2001 - 2003)

தொகு
  • 2001 - நவம்பர் - மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களின் நான்கு நாள் போராட்டாத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதால், மன்னர் ஞானேந்திரா நாட்டில் அவரச நிலைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மாவோயிஸ்டுகளை இராணுவம் துணை கொண்டு அடக்கினார்.
  • 2002 மே - நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல் நடத்தப்பட்டது. செர் பகதூர் தேவ்பா தலைமையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது. மீண்டும் நெருக்கடி நிலை காலம் நீட்டப்பட்டது.
  • 2002 அக்டோபர் - மன்னர் ஞானேந்திரா செர் பகதூர் தேவ்பாவின் அமைச்சரவையை கலைத்தார்.
  • 2003 சனவரி - அரசும் - மாவோயிஸ்டுகளும் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவித்தனர்.

அமைதி குலைதல் (2003 - 2004)

தொகு
  • 2003 ஆகஸ்டு - மாவோயிஸ்டுகள் ஏழு மாதங்களாக அரசுடன் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் மாவோயிஸ்டுகள்/மாணவர்கள் - காவல் துறையினரிடையே அடிக்கடி கைகலப்புகள் முற்றியது.
  • 2004 ஏப்ரல் உலக வணிக அமைப்பில், நேபாளம் இணைந்தது.
  • 2004 மே - நேபாளத்தில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்த எதிர்கட்சிகள் தெருக்களில் இறங்கி போராடினர். மன்னரால் நியமிக்கப்பட்ட பிரதமர் சூரிய பகதூர் தாபா பதவி விலகினார்.

மீண்டும் முழு முடியாட்சி முறை (2005 - 2006)

தொகு
  • 2005 பிப்ரவரி - மாவோயிஸ்டு தீவிரவாதிகளை முற்றிலும் களையெடுக்க, மன்னர் ஞானேந்திரா, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து, மீண்டும் நெருக்கடி நிலை சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • 2005 ஏப்ரல் - சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மன்னர் ஞானேந்திரா நெருக்கடி நிலை சட்டத்தை விலக்கி, முடக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீட்டெடுத்தார்.
  • 2005 நவம்பர் - மாவோயிஸ்டுகளும், இடதுசாரி கட்சிகளும் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒன்று சேர்ந்தனர்.
  • 2006 ஏப்ரல் - மன்னரின் நேரடி ஆட்சிமுறைக்குக்கு எதிராக நடந்த கலவரங்களின் விளைவாக, முடக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. மாவோயிஸ்டுகள் மூன்று மாத போர் நிறுத்தம் மேற்கொண்டனர்.
  • 2006 மே - நாடாளுமன்றம் மன்னரின் அரசியல் அதிகாரங்களை குறைத்து தீர்மானம் இயற்றியது. மேலும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தியது.

அமைதிப் பேச்சு வார்த்தைகள் (2006 - 2007)

தொகு
  • 2006 நவம்பர் - அரசு - மாவோயிஸ்டு தீவிரவாதத் தலைவரகளுடன் விரிவான அமைதி உடன்படிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் இருபதாண்டுகளாக மாவோயிஸ்டுகள் நடத்திய போராட்டங்கள் நிறைவடைந்தது.
  • 2007 சனவரி - தற்காலிக அரசியலமைப்புச் சட்டப்படி அமைந்த நாடாளுமன்றத்திற்கு, மாவோயிஸ்ட்டு தலைவர் பிரசந்தா எனும் புஷ்ப கமல் தகால் உறுப்பினர் ஆனார்.

அரசில் மாவோயிஸ்டுகள் பங்கெடுத்தல் (2007)

தொகு
  • 2007, ஏப்ரல் - மாவோயிஸ்டுகளை அரசியலில் ஈடுபடுத்த வேண்டி நடைபெற்ற முயற்சியில், இடைக்கால அரசில் மாவோயிஸ்டுகள் பங்கேற்றனர்.
  • 2007, செப்டம்பர் - மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் முடிவில், மூன்று குண்டுகளை காத்மாண்டு சமவெளியில் வெடிக்கச் செய்தனர். அதில் முதல் குண்டு தலைநகரம் காட்மாண்டுவில் வெடித்தது. இடைக்கால மன்னராட்சியை ஒழிக்க வலியுறுத்தி அரசிலிருந்து மாவோயிஸ்டுகள் வெளியேறினர். அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நவம்பர், 2007ல் நடத்தவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

முடியாட்சியின் முடிவு (2007 - 2008)

தொகு
  • 2007, டிசம்பர் - நேபாளத்தில் மன்னராட்சி முறையை ஒழிக்கப்பட்டது. நேபாளத்தை ஜனநாயகக் கூட்டாச்சிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.[5][6]
  • 2008 சனவரி - பிரதேச தன்னாட்சியை வலியுறுத்தி தெற்கு தராய் பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளால் பலர் கொல்லப்பட்டனர்.
  • 2008 ஏப்ரல் - புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில் முன்னாள் மாவோயிஸ்டுகள் பெரும்பாலன இடங்களைக் கைப்பற்றிய போதிலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
  • 2008 மே - முடியாட்சி முறை முழுவதுவமாக ஒழிக்கப்பட்டு, நேபாளக் குடியரசு நாடாக மாறியது.[7]
  • 2008 சூன் - பிரதம அமைச்சர் பதவிக்கு நடைபெற்ற போட்டியால், மாவோயிஸ்டுகள் அமைச்சரவையிலிருந்து விலகினர்.
  • 2008 சூலை - ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 2008 ஆகஸ்டு நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்த மாவோயிஸ்டு தலைவர் புஷ்ப கமல் தகால் எனும் பிரசந்தா, பின்னர் அமைச்சரவையிலிருந்து வெளியேறி, எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார்.

மாவோயிஸ்டுகள் அரசிலிருந்து வெளியேறல் (2009)

தொகு
  • 2009 மே - முன்னாள் மாவோயிஸ்டு போராளிகளை, நேபாள இராணுவத்தில் சேர்க்கக் கோரினார் பிரதமர் பிரசந்தா. இதனை ஏற்க மறுத்தார் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ். இதனால் ஏற்பட்ட பிணக்கால், பிரசந்தா பிரதம அமைச்சர் பதவிலிருந்து விலகினார்.
  • 2009 மே - பிரித்தானியப் பேரரசின் இராணுவத்தில் குறைந்தது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த கூர்க்கா வீரர்களை, ஐக்கிய ராச்சியத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டது.
  • 2009 டிசம்பர் - தூர-மேற்கு வளர்ச்சிப் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய நில ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதனால் நேபாளத்தில் அமைதிக்கான செயல்பாடுகளில் சுணக்கம் உண்டாகும் பயமேற்பட்டது.

அரசியலமைப்பின் மீதான தாக்கங்கள் (2010 - 2015)

தொகு
  • 2010 மே - நான்கு முறை நீட்டிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும், அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் காலம், மீண்டும் ஒரு நீட்டிக்கப்பட்டது.
  • 2011 சனவரி - ஐக்கிய நாடுகள் அவை நேபாளத்தில் அமைதி காக்கும் பணியை முடித்துக் கொண்டது.
  • 2011 மார்ச் - 2011 நேபாள மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்.
  • 2012 மே - புதிய அரசியல் அமைப்பு வரைவு சட்டத்தை இயற்ற இயலாத அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் கலைக்கப்பட்டது.
  • 2013 நவம்பர் - மார்க்சிஸ்-லெனினிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும், நேபாளி காங்கிரஸ் கட்சியும் இணைந்து அமைத்த இரண்டாவது நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம் கூடியது. இத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
  • 2014 பிப்ரவரி - நேபாளி காங்கிரஸ் கட்சியின் சுசில் கொய்ராலா பிரதம அமைச்சரானார்.
  • 2014 ஏப்ரல் - 14 எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது, வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்ட 16 செர்ப்பாக்கள் பனிப்புயலால் இறந்தனர்.
  • 2014 நவம்பர் - அருண் ஆற்றின் குறுக்கே இந்தியாவும் - நேபாளமும் இணைந்து, 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நீர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் இட்டனர்.
  • 2015 ஏப்ரல் - 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கதால் காத்மாண்டு சமவெளியின் நகரங்கள் பலத்த சேதமடைந்தது. 8,000 பேர் மாண்டனர். இலட்சக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்.

குறிப்பிடத்தக்க அரசியலமைப்புச் சட்டம் (2015 - 2018)

தொகு

2020 முதல் நேபாளம்

தொகு
  • நேபாளத்தை ஆளும் நேபாள பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களான பிரசந்தா மற்றும் கட்க பிரசாத் சர்மா ஒளி குழுவினர்களுக்கிடையே பல மாதங்களாக தொடர்ந்த சர்ச்சைகள் காரணமான, நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் ஒளியின் பரிந்துரையின் படி, நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 20 டிசம்பர் 2020 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நேபாள நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[10] நேபாள உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் அறிவிப்பை தள்ளுபடி செய்தது. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி நேபாளி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Hamilton, Francis Buchanan (1819). An Account of the Kingdom Of Nepal and of the Territories Annexed to This Dominion by the House of Gorkha. Edinburgh: Longman. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 237.
  2. Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. பார்க்கப்பட்ட நாள் 12 January 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help) Page 123.
  3. Properties inscribed on the World Heritage List (4)
  4. "Timeline: Nepal". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/country_profiles/1166516.stm. பார்த்த நாள்: 29 September 2005. 
  5. "Nepal votes to end monarchy". CNN Asia report. http://edition.cnn.com/2007/WORLD/asiapcf/12/28/nepal.monarchy/index.html?iref=mpstoryview. 
  6. "Nepal votes to abolish monarchy". BBC News. 28 May 2008. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7424302.stm. பார்த்த நாள்: 22 May 2011. 
  7. 7.0 7.1 Nepal country profile
  8. "Grassroots democracy". Nepali Times. Himal Media. பார்க்கப்பட்ட நாள் 12 May 2017.
  9. Nepal elections explained
  10. நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; அதிபர் பண்டாரி அறிவிப்பு: இடைத்தேர்தல் தேதியும் வெளியீடு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாள_காலக்_கோடுகள்&oldid=4060218" இலிருந்து மீள்விக்கப்பட்டது