நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை

(நேபாள அரசுப் படுகொலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நேபாள அரச குடும்ப படுகொலைகள் 2001இல் ஜூன் 1ஆம் திகதி நேபாளத்தின் தலைநகரம் கத்மந்துவில் அமைந்த நாராயணன்ஹிட்டி அரண்மனையில் நடந்தன. ஒரு அரசு விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் பிரேந்திராவின் மகன் இளவரசர் திபெந்திரா சாராயத்தை குடித்துவிட்டு துப்பாக்கியால் விருந்தில் இருந்த மக்களை சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் பிரேந்திரா, அவரின் தாய் அரசி ஐஸ்வரியா உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டு நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். [1] [2]

நேபாள அரசுப் படுகொலைகள்
இடம்கத்மந்து, நேபாளம்
நாள்ஜூன் 1, 2001
21:00 (UTC+5:45)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஷா வம்சம்
பிரேந்திரா
தாக்குதல்
வகை
படுகொலை
தந்தையார் கொலை
தற்கொலைத் தாக்குதல்
இறப்பு(கள்)10 (சுட்டவர் உள்ளிட்ட)
காயமடைந்தோர்5
தாக்கியோர்இளவரசர் திபேந்திரா

இந்த கடும் நிகழ்வு காரணமாக பிரேந்திராவின் இளைய சகோதரர் இளவரசர் ஞானேந்திரா பதவிக்கு வந்தார். ஞானேந்திரா காரணமாகத் தான் இப்படுகொலை நடந்தது என்று சில நேபாள பொதுமக்கள் நம்புகின்றனர், ஆனால் இக்கொலைக்கான முழுக் காரணம் இன்று வரை அறியப்படவில்லை. என்றாலும் இளவரசர் தீபேந்திரா தனது காதலியான தேவயானி ராணாவை திருமணம் புரிவதில் அவரது தாயாருடன் ஏற்பட்ட பிணக்கே காரணம் என நம்பப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Timeline: The Nepal Royal Massacre
  2. A Witness To Massacre In Nepal Tells Gory Details