சிக்கிம் இராச்சியம்

சிக்கிம் இராச்சியம் (Kingdom of Sikkim), கிழக்கு இமயமலை பகுதியில் அமைந்த இவ்விராச்சியத்தை, திபெத்தின் சோக்கியால் வம்ச மன்னர்களால் பரம்பரையாக கிபி 1642 முதல் 16 மே 1975 முடிய ஆளப்பட்டது.[3]

சிக்கிம் இராச்சியம்
འབྲས་ལྗོངས། (Sikkimese)
Drenjong
འབྲས་མོ་གཤོངས། (Classical Tibetan)
Dremoshong
ᰕᰚᰬᰯ ᰜᰤᰴ (Lepcha)
Mayel Lyang
1642–1975
கொடி of சிக்கிம்
கொடி
சிக்கிம் முத்திரை
சின்னம்
நாட்டுப்பண்: Drenjong Silé Yang Chhagpa Chilo [1]
Why is Sikkim Blooming So Fresh and Beautiful?
வடகிழக்கு இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தின் வரலாற்று வரைபடம்
வடகிழக்கு இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தின் வரலாற்று வரைபடம்
நிலை
தலைநகரம்
 • யோக்சோம் (1642–1670)
 • ரப்டெண்ட்சே (1670–1793)
 • தும்லோங் (1793–1894)
 • கேங்டாக் (1894–1975)
பேசப்படும் மொழிகள்
அலுவல் மொழிகள்
திபெத்திய மொழி, சிக்கிம் மொழி
பிற மொழிகள்
லெப்ச்சா மொழி (பண்டைய காலத்தில்)
நேபாளி மொழி (பிந்தைய காலத்தில்)
சமயம்
மகாயான பௌத்தம்
மக்கள்பூட்டியர்கள், சிக்கிமிய மக்கள்
அரசாங்கம்முடியாட்சி
சோக்கியால் 
• 1642–1670
புந்சோக் நம்கியால்(முதல்)
• 1963–1975
பால்தேன் தொண்டுப் நம்கியால் (இறுதி)
சட்டமன்றம்சிக்கிம் அரசக் குழு
வரலாறு 
• நிறுவப்பட்டது
1642
• திடாலியா உடன்படிக்கை
1817
• டார்ஜிலிங் பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக வழங்கப்பட்டது.
1835
• மன்னர் பால்தேன் தொண்டுப் நம்கியால் பால்தேன்வ் வலுக்கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார்.
1975
• இந்தியாவுடன் இணைப்பு
16 மே 1975
பின்னையது
}
சிக்கிம்
தற்போதைய பகுதிகள் இந்தியா

வரலாறு தொகு

நேபாளிகளின் ஆதிக்கம் தொகு

ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தின் நேபாள மன்னர்கள், சிக்கிம் இராச்சியத்தை கைப்பற்றி 1775 முதல் 1815 முடிய நாற்பது ஆண்டுகள் ஆண்டனர். கிபி 1814 - 1846ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சிய மன்னர், தான் கைப்பற்றிருந்த சிக்கிம் இராச்சியத்தை கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினருக்கு விட்டுக் கொடுத்தார்.[4]

பிரித்தானிய மற்றும் இந்தியாவின் காப்பரசாக சிக்கிம் இராச்சியம் தொகு

1861ல் சிக்கிம் மன்னருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட தும்லோங் உடன்படிக்கையின் படி, சிக்கிம் இராச்சியம், ஆங்கிலேயர்களின் காப்பரசாக 1861 முதல் 1947 முடிய செயல்பட்டது. பின்னர் தன்னாட்சி உரிமையுடன் ஆண்ட சிக்கிம் இராச்சியம், 1950 முதல் இந்தியாவின் காப்பரசாக விளங்கியது.[5]

இந்தியாவுடன் இணைத்தல் தொகு

1975 இல், சிக்கிமில் உள்ள நேபாள இந்துக்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன இதைத் தொடர்ந்து சிக்கிம் மன்னருக்கு எதிராக நேபாள மக்கள் கோபமுற்றனர்.[6][7] அவர்களது தூண்டுதலால், இந்தியத் தரைப்படை காங்டாக்கிற்குள் நுழைந்தது. தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையில் சுனந்த கே. தத்தா ரேயின் கூற்றுப்படி, அரண்மனை காவலர்களைக் கொன்ற இந்திய இராணுவம் 1975 ஏப்ரலில் அரண்மனையை சூழ்ந்தது.[5]

மன்னராட்சியின் ஆதரவாளர்கள் நிராயுதபாணியாக்கப்பட்ட பிறகு, முடியாட்சி தேவையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் சிக்கிம் மக்கள் மன்னராட்சியை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர், இதைத் தொடர்ந்து காக்கி லீந்தப் தோர்ஜி தலைமையிலான சிக்கிமின் புதிய பாராளுமன்றத்தின் கோரிக்கைப்படி சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக இந்திய அரசாங்கத்தால் உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட்டது.[5][8]

பண்பாட்டு மற்றும் சமயம் தொகு

சிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர் திபெத்திலிருந்து வந்ததால், பண்பாடு மற்றும் மத விடயங்களில் சிக்கிம் இராச்சிய மக்கள், திபெத்திய முறையை பயில்கின்றனர். நேபாள இன மக்கள் சிக்கிமில் அதிகம் வாழ்வதால், இந்து பண்பாடும் பயிலப்படுகிறது.

சிக்கிம் இராச்சிய மன்னர்கள் 1642–1975 தொகு

சிக்கிம் இராச்சியத்தை 1642 முதல் 1975 முடிய ஆண்ட சோக்கியால்கள்:

வ. எண் ஆட்சிக் காலம் படம் சோக்கியல்
(பிறப்பு-இறப்பு)
நிகழ்வுகள்
1 1642–1670   புன்சோக் நம்கியால்
(1604–1670)
சிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர் யுக்சோம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டவர்.
2 1670–1700   டென்சுங் நம்கியால்
(1644–1700)
தலைநகரத்தை யுக்சோமிலிருந்து ரப்டென்சேவிற்கு மாற்றியவர்.
3 1700–1717   சோக்தோர் நம்கியால்
(1686–1717)
இவரின் மாற்றாந்தாய் மகன் பெண்டியோன்குமுவின் அச்சுறுத்தலின் பேரில், சோக்தோர் நம்கியால், லாசால் அடைக்கலம் அடைந்தார். திபெத்தியப் பேரரசு இவரை மீண்டும் சிக்கிம் இராச்சியத்தின் மன்னராக்கினர்.
4 1717–1733   கெயிர்மெத் நம்கியால்
(1707–1733)
நேபாளிகள் சிக்கிமை தாக்கினர்.
5 1733–1780   இரண்டாம் புன்சோக் நம்கியால்
(1733–1780)
சிக்கிமின் தலைநகரம் ரப்டென்சேவை நேபாளிகள் முற்றுகையிட்டனர்.
6 1780–1793   டென்சிங் நம்கியால்
(1769–1793)
நேபாளிகள், மன்னர் டென்சிங் நம்கியாலை திபெத்திற்கு நாடு கடத்தினர். பின்னர் அங்கேயே இறந்தார்.
7 1793–1863   சுக்புத் நம்கியால்
(1785–1863)
சிக்கிம் இராச்சியத்தை நீண்ட காலம் ஆண்டவார். தலைநகரத்தை ரப்டென்சேவிலிருந்து தும்லோங் நகரத்திற்கு மாற்றினார்.

1817ல் சிக்கிம் மன்னரும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரும் செய்து கொண்ட திதாலியா உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றியிருந்த, சிக்கிம் இராச்சியத்தின் மேற்கு பகுதிகள், மீண்டும் சிக்கிம் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. 1835ல் சிக்கிம் இராச்சியத்தினர் தங்களது டார்ஜிலிங் பகுதியை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

8 1863–1874   சித்கியோங் நம்கியால்
(1819–1874)
9 1874–1914   துடோப் நம்கியால்
(1860–1914)
1889ல் சிக்கிம் நாட்டு அரசவையில் ஆலோசனை வழங்க, பிரித்தானிய இந்தியா அரசு ஜான் கிளொட் ஒயிட் எனும் ஆங்கிலேய அரசியல் அலுவலரை நியமித்தனர். 1894ல் தலைநகரத்தை தும்லோங்கிலிருந்து கேங்டாக்கிற்கு மாற்றப்பட்டது.
10 1914   சித்கியோங் துல்கு நம்கியால்
(1879–1914)
குறுகிய காலம் மன்னர். 35வது வயதில் மாரடைப்பால் 5 டிசம்பர் 1914ல் காலமானார்.
11 1914–1963   தஷி நம்கியால்
(1893–1963)
1950ல் இந்தியா - சிக்கிம் உடன்படிக்கையின் படி, சிக்கிம் எல்லைகளை காக்க இந்தியா உதவ முன்வந்தது.
12 1963–1975   பால்தென் தொண்டுப் நம்கியால்
(1923–1982)
சிக்கிம் இராச்சியத்தின் இறுதி மன்னர். 1975ல் சிக்கிமில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் படி, சிக்கிம் இராச்சியம் 16 மே 1975ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிக்கிம் இந்திய மாநிலத் தகுதி பெற்றது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. Hiltz, Constructing Sikkimese National Identity 2003, ப. 80–81.
 2. According to Article II of Convention of Calcutta, Sikkim was a direct protectorate of the British Government, not the British Indian government.
 3. "HISTORY OF SIKKIM". Archived from the original on 2006-10-30. பார்க்கப்பட்ட நாள் 2017-12-31.
 4. "History of Nepal: A Sovereign Kingdom". Official website of Nepal Army. Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2017-12-31.
 5. 5.0 5.1 5.2 "Indian hegemonism drags Himalayan kingdom into oblivion". Nikkei. Nikkei Asian Review. 21 February 2016 இம் மூலத்தில் இருந்து 3 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170403015228/http://asia.nikkei.com/Politics-Economy/International-Relations/Indian-hegemonism-drags-Himalayan-kingdom-into-oblivion?page=1. பார்த்த நாள்: 4 December 2016. 
 6. Larmer, Brook (March 2008). "Bhutan's Enlightened Experiment". National Geographic (Bhutan). (print version). http://ngm.nationalgeographic.com/2008/03/bhutan/larmer-text/8. 
 7. "25 years after Sikkim". Nepali Times (#35). 23–29 March 2001. http://nepalitimes.com/news.php?id=9621#.V89C9zVGRhY. 
 8. Sethi, Sunil (18 February 2015). "Treaties: Annexation of Sikkim". India Today. India Today. http://indiatoday.intoday.in/story/did-india-have-a-right-to-annex-sikkim-in-1975/1/435037.html. பார்த்த நாள்: 4 December 2016. 

ஆதார நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிம்_இராச்சியம்&oldid=3643871" இலிருந்து மீள்விக்கப்பட்டது