சோக்கியால் வம்சம்
சோக்கியால் (Chogyal), முன்னாள் சிக்கிம் இராச்சியத்தை கிபி 1642 முதல் 16 மே 1975 முடிய ஆட்சி செய்த அரச மரபினர் ஆவார். சோக்கியால் அரசமரபினர் தற்கால சிக்கிம், கிழக்கு திபெத் பகுதிகளை ஆண்டனர்.[1] 1975ம் ஆண்டில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பின்படி, இந்த இராச்சியம் இந்தியாவின் சிக்கிம் மாநிலமாக சேர்க்கப்பட்டுள்ளது.[2][3]இவர்களது உறவினர்களான நம்கியால் வம்சத்தினர் லடாக், மேற்கு திபெத் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
நம்கியால் வம்சம், சிக்கிம் of சிக்கிம் | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
சிக்கிம் அரச சின்னம் | ||
பால்தென் தோன்துப் நாம்கியால் | ||
முதல் மன்னர் | ஹுன்சோக் நாம்கியால் | |
கடைசி மன்னர் | பால்தென் தோன்துப் நாம்கியால் | |
அலுவல் வசிப்பிடம் | சுக்லாகாங் அரண்மனை, கேங்டாக் | |
மன்னராட்சி துவங்கியது | 1642 | |
மன்னராட்சி முடிவுற்றது | 16 மே 1975 | |
தற்போதைய வாரிசு | வாங்சுக் நம்கியால் |
சிக்கிம் இராச்சிய மன்னர்கள் 1642–1975
தொகுசிக்கிம் இராச்சியத்தை 1642 முதல் 1975 முடிய ஆண்ட சோக்கியால்கள்:
வ. எண் | ஆட்சிக் காலம் | படம் | சோக்கியல் (பிறப்பு-இறப்பு) |
நிகழ்வுகள் |
---|---|---|---|---|
1 | 1642–1670 | புன்சோக் நம்கியால் (1604–1670) |
சிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர் யுக்சோம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டவர். | |
2 | 1670–1700 | டென்சுங் நம்கியால் (1644–1700) |
தலைநகரத்தை யுக்சோமிலிருந்து ரப்டென்சேவிற்கு மாற்றியவர். | |
3 | 1700–1717 | சோக்தோர் நம்கியால் (1686–1717) |
இவரின் மாற்றாந்தாய் மகன் பெண்டியோன்குமுவின் அச்சுறுத்தலின் பேரில், சோக்தோர் நம்கியால், லாசால் அடைக்கலம் அடைந்தார். திபெத்தியப் பேரரசு இவரை மீண்டும் சிக்கிம் இராச்சியத்தின் மன்னராக்கினர். | |
4 | 1717–1733 | கெயிர்மெத் நம்கியால் (1707–1733) |
நேபாளிகள் சிக்கிமை தாக்கினர். | |
5 | 1733–1780 | இரண்டாம் புன்சோக் நம்கியால் (1733–1780) |
சிக்கிமின் தலைநகரம் ரப்டென்சேவை நேபாளிகள் முற்றுகையிட்டனர். | |
6 | 1780–1793 | டென்சிங் நம்கியால் (1769–1793) |
நேபாளிகள், மன்னர் டென்சிங் நம்கியாலை திபெத்திற்கு நாடு கடத்தினர். பின்னர் அங்கேயே இறந்தார். | |
7 | 1793–1863 | சுக்புத் நம்கியால் (1785–1863) |
சிக்கிம் இராச்சியத்தை நீண்ட காலம் ஆண்டவார். தலைநகரத்தை ரப்டென்சேவிலிருந்து தும்லோங் நகரத்திற்கு மாற்றினார்.
1817ல் சிக்கிம் மன்னரும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரும் செய்து கொண்ட திதாலியா உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றியிருந்த, சிக்கிம் இராச்சியத்தின் மேற்கு பகுதிகள், மீண்டும் சிக்கிம் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. 1835ல் சிக்கிம் இராச்சியத்தினர் தங்களது டார்ஜிலிங் பகுதியை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கு பரிசாக வழங்கப்பட்டது. | |
8 | 1863–1874 | சித்கியோங் நம்கியால் (1819–1874) |
||
9 | 1874–1914 | துடோப் நம்கியால் (1860–1914) |
1889ல் சிக்கிம் நாட்டு அரசவையில் ஆலோசனை வழங்க, பிரித்தானிய இந்தியா அரசு ஜான் கிளொட் ஒயிட் எனும் ஆங்கிலேய அரசியல் அலுவலரை நியமித்தனர். 1894ல் தலைநகரத்தை தும்லோங்கிலிருந்து கேங்டாக்கிற்கு மாற்றப்பட்டது. | |
10 | 1914 | சித்கியோங் துல்கு நம்கியால் (1879–1914) |
குறுகிய காலம் மன்னர். 35வது வயதில் மாரடைப்பால் 5 டிசம்பர் 1914ல் காலமானார். | |
11 | 1914–1963 | தஷி நம்கியால் (1893–1963) |
1950ல் இந்தியா - சிக்கிம் உடன்படிக்கையின் படி, சிக்கிம் எல்லைகளை காக்க இந்தியா உதவ முன்வந்தது. | |
12 | 1963–1975 | பால்தென் தொண்டுப் நம்கியால் (1923–1982) |
சிக்கிம் இராச்சியத்தின் இறுதி மன்னர். 1975ல் சிக்கிமில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் படி, சிக்கிம் இராச்சியம் 16 மே 1975ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிக்கிம் இந்திய மாநிலத் தகுதி பெற்றது. |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Measuroo.com States and Territories of India series. Online: [1] (accessed: 14 May 2008)
- ↑ G. T. (1 March 1975), "Trouble in Sikkim", Index on Censorship, 4: 68–69, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/03064227508532403, S2CID 220927214
- ↑ "Sikkim Votes to End Monarchy, Merge With India". The New York Times. 16 April 1975. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.