நேபாள தேசியப் பஞ்சாயத்து

நேபாள தேசியப் பஞ்சாயத்து (Panchayat) (நேபாளி: पञ्चायत), நேபாளத்தின் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு, அரசியல் கட்சிகள் சார்பற்ற 90 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சபை ஆகும். இப்பஞ்சாயத்தின் தலைமை நிர்வாகியான பிரதம அமைச்சர், தேசியப் பஞ்சாயத்தின் 90 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 1960ல் துவங்கிய இப்பஞ்சாயத்து ஆட்சி முறை, நேபாள மக்கள் போராட்டத்தின் முடிவில், ஏப்ரல் 1990 வரை முப்பது ஆண்டுகள் செயல்பட்டது.[1]

பின்னணி தொகு

1960ல் மன்னர் மகேந்திரா தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, தேசிய நலனுக்காக, நேபாளத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். நாட்டில் சட்ட- ஒழங்கு சீர்கெட்டு, லஞ்ச ஊழல் மலிந்த காரணத்தினால், நேபாளி காங்கிரஸ் கட்சியின் பிரதம அமைச்சர் விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவை பதவி நீக்கம் செய்து, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

டிசம்பர், 1962ல் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வந்தார். அதன் படி, நாட்டின் நிர்வாகத்தை மேற்கொள்ள அரசியல் கட்சிகள் அற்ற, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார். இருப்பினும் இறுதி அதிகாரம் மன்னர் கையில் இருந்தது.[2][3]

நேபாளத்தில் தேசிய பஞ்சாயத்து ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், நாட்டில் முதன்முதலாக ஜனநாயக முறையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஏப்ரல், 1960ல் மன்னர் கலைத்தார்.

ஆட்சி நிர்வாகத்தில் மன்னருக்கு உதவிட, 26 டிசம்பர் 1961ல் மன்னர், ஐந்து அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது.

சில வாரங்களுக்குப் பிறகு அரசியல் கட்சிகளை, சட்ட விரோத அமைப்புகள் எனக் கூறி மன்னர் தடை செய்தார்.

நேபாள காங்கிரஸ் கட்சி, பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து மன்னராட்சிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டங்கள் நடத்தியது.

1961களின் துவக்கத்தில், நேபாள அரசின் தலைமைச் செயலகத்தின் நான்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட தேசிய வழிகாட்டி குழுவை மன்னர் அமைத்தார். இவ்வழிகாட்டிக் குழுவின் பரிந்துரைகளின் படி, அனைத்து அரசியல் கட்சிகளை, மன்னர் தடை செய்தார். மேலும் நேபாள அரசியல் அமைப்புச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, நேபாள உள்ளாட்சி அமைப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியப் பஞ்சாயத்து ஆட்சி நிறுவப்பட்டது. பஞ்சாயத்து ஆட்சியின் தலைவராக நேபாள பிரதம அமைச்சர் மன்னரின் வழிகாட்டுதலின் படி நாட்டை நிர்வகித்தார்.[4]

16 டிசம்பர் 1962ல் புதிய அரசியலமைப்ப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் படி, நான்கு அடுக்கு கொண்ட பஞ்சாயத்து ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசியப் பஞ்சாயத்து உறுப்பினர் தேர்வு முறை தொகு

கீம்மட்ட நிலையில், நேபாளம் முழுமைக்குமான 4,000 கிராமப் பஞ்சாயத்து சபைகளுக்கு ஒன்பது உறுப்பினர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் சேர்ந்து, 75 நேபாள மாவட்டங்களுக்கான மாவட்டப் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.

மாவட்டப் பஞ்சாயத்து மன்ற உறுபினர்கள் ஒன்று கூடி, 14 மண்டலங்களுக்கான பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்.

இந்த 14 மண்டல பஞ்சாயத்து உறுப்பினர்கள் வாக்களித்து, நேபாள தேசியப் பஞ்சாயத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர். நாடாளுமன்ற அமைப்பிற்கு மாறான தேசியப் பஞ்சாயத்து ஆட்சியின் செயல் அலுவலகம் காட்மாண்டு நகரத்தில் அமைக்கப்பட்டது. கூடுதலாக கிராம, மாவட்ட, மண்டல பஞ்சாயத்து மன்றங்களில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், முதியோர், தொழிலாளர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேசியப் பஞ்சாயத்திற்கு தேர்வு செய்யும் உரிமை இருந்தது.

அரசியல் கட்சிகள் சார்பற்ற 90 உறுப்பினர்கள் கொண்ட தேசியப் பஞ்சயாத்து, ஒரு நாடாளுமன்றம் போன்றே செயல்பட்டது. இருப்பினும் இறுதி முடிவு எடுக்கம் அதிகாரம் மன்னருக்கே இருந்தது.[5] நேபாள தேசிய பஞ்சாயத்திற்கான முதல் தேர்தல் மார்ச் - ஏப்ரல் 1963ல் நடைபெற்றது.

 
1967ல் நேபாள மன்னர் மகேந்திரா

பஞ்சாயத்து ஆட்சி கால சீர்திருத்தங்கள் தொகு

நேபாள மன்னரின் கீழ் செயல்பட்ட நேபாள தேசியப் பஞ்சாயத்து மன்றம் நிலச்சீர்திருத்தங்கள் மேற்கொண்டது. மேற்கு நேபாளத்தில் நிலப்பிரபுக்களின் சலுகைகள் பறிக்கப்பட்டது. இரண்டாம் மூன்றாண்டுத் திட்டம் (1962-65) மற்றும் மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களை (1965-70), நிறைவேற்றி, நான்காம் ஐந்தாண்டு திட்டம் (1970 -75) நடைமுறைப்படுத்தப்பட்டது.

மலேரியா கொசு ஒழிப்புப் பணி, மகேந்திரா நெடுஞ்சாலை அமைக்கும் பணி, தராய் பகுதிகளை இணைக்கும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைத் திட்டம், வடக்கே மலைப்பகுதிகள் முதல் தெற்கே தராய் சமவெளிப் பகுதிகள் வரை, வேளாண்மை நிலச் சீர்திருத்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தேசிய பஞ்சாயத்து ஆட்சியின் முடிவு தொகு

நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் அரசியல் கட்சிகள் செயல் தடை செய்யப்பட்டதால், மக்கள் அதிகார வர்க்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிருந்தனர்.[6]

தேசியப் பஞ்சாயத்து ஆட்சி அமைப்பை அகற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட பல அரசியல் கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சியை நிறுவிட வலியுறுத்தி, நேபாளி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து இடதுசாரி முன்னனி அரசியல் கட்சிகள், 1990ல் முதல் நேபாள மக்கள் போராட்டங்கள் 18 பிப்ரவரி 1990 முதல் 8 ஏப்ரல் 1990 முடிய நடைபெற்றது.

இறுதியாக நேபாள மன்னர் பிரேந்திரா போராட்டக்கார்களின் கோரிக்கைகளை ஏற்றார்.[7] 8 ஏப்ரல் 1990 அன்று நேபாள அரசியல் கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது. 19 ஏப்ரல் 1990ல் நேபாளி காங்கிரஸ் கட்சியின் நேபாள பிரதம அமைச்சர் கிருஷ்ண பிரசாத் பட்டாராய் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. நேபாளத்தில் மன்னரின் இறுதி முடிவுக்குட்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றபட்டு, பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.

தேசிய பஞ்சாயத்து அட்சிக்கால பிரதம அமைச்சர்கள் (1962–1990) தொகு

தேசியப் பஞ்சாயாத்து ஆட்சியின் போது இருந்த பிரதம அமைச்சர்கள் விவரம்:

வ.எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் அரசியல் கட்சி நேபாள மன்னர்
(ஆட்சிக் காலம்)
பதவியேற்ற நாள் விலகிய நாள்
  மன்னரின் நேரடி ஆட்சி
மகேந்திரா
(1920–1972)
26 டிசம்பர் 1960 2 ஏப்ரல் 1963 மகேந்திரா
 

(14 மார்ச் 1955–31 சனவரி 1972)
23 துளசி கிரி
(1926–)
முதன்முறை
2 ஏப்ரல்1963 23 டிசம்ப்ர் 1963 சுயேச்சை
24 சூரிய பகதூர் தாபா
(1928–2015)
முதன்முறை
23 டிசம்பர் 1963 26 பிப்ரவரி 1964 சுயேச்சை
(23)   துளசி கிரி
(1926–)
இரண்டாம் முறை
26 பிப்ரவரி 1964 26 சனவரி 1965 சுயேச்சை
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
இரண்டாம் முறை
26 சனவரி 1965 7 ஏப்ரல் 1969 சுயேச்சை
25   கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
முதன் முறை
7 ஏப்ரல் 1969 13 எப்ரல் 1970 சுயேச்சை
கெகெந்திர பகதூர் ராஜ்பண்டாரி
(1923–1994)
தற்காலிக பிரதம அமைச்சர்
13 ஏப்ரல் 1970 14 ஏப்ரல் 1971 சுயேச்சை
(25)   கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
இரண்டாம் முறை
14 ஏப்ரல் 1971 16 சூலை 1973 சுயேச்சை பிரேந்திரா
 

(31 சனவரி 1972–1 சூன் 2001)
26   நாகேந்திர பிரசாத் ரிஜால்
(1927–1994)
முதன் முறை
16 சூலை 1973 1 டிசம்பர் 1975 சுயேச்சை
(23)   துளசி கிரி
(1926–)
மூன்றாம் முறை
1 டிசம்பர் 1975 12 செப்டம்பர் 1977 சுயேச்சை
(25)   கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
மூன்றாம் முறை
12 செப்டம்பர் 1977 30 மே 1979 சுயேச்சை
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
மூன்றாம் முறை
30 மே 1979 12 சூலை 1983 சுயேச்சை
27   லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
முதன் முறை
12 சூலை 1983 21 மார்ச் 1986 சுயேச்சை
(26)   நாகேந்திர பிரசாத் ரிஜால்
(1927–1994)
இரண்டாம் முறை
21 மார்ச் 1986 15 சூன் 1986 சுயேச்சை
28   மரீச் மான் சிங் சிரேஸ்தா
(1942–2013)
15 சூன் 1986 6 ஏப்ரல் 1990 சுயேச்சை
(27)   லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
இரண்டாம் முறை
6 ஏப்ரல் 1990 19 ஏப்ரல் 1990 சுயேச்சை

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Panchayat System in Nepal Part-I
  2. Savada, Andrea Matles; Harris, George Lawrence. (1993). "Nepal and Bhutan Country Studies". Library of Congress Country Studies. Federal Research Division. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  3. "The Koirala Complex". Republica. Archived from the original on 1 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  4. "conflict Tuesday, June 7, 2011".
  5. "The Panchayat System under King Mahendra".
  6. Raeper, William; Hoftun, Martin (1992). Spring Awakening: An Account of the 1990 Revolution in Nepal. Viking. பக். 51-74. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-670-85181-7. https://archive.org/details/springawakeninga0000raep. 
  7. Nepalese force king to accept democratic reform, 'Jana Andolan' (People's Movement), 1990