செர் பகதூர் தேவ்பா
செர் பகதூர் தேவ்பா (Sher Bahadur Deuba) (நேபாளி: शेर बहादुर देउवा) (பிறப்பு: 13 சூன் 1946) born 13 June 1946) நேபாள அரசியல்வாதியும், 40வது பிரதம அமைச்சரும்[1] முன்னர் 1995 -1997 மற்றும் 2001-2002, 2004-2005, 2017-2018 ஆகிய காலகட்டங்களில், ஆக மொத்தம் நான்கு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். மேலும் இவர் தற்போது நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார். நேபாள உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் படி, இவர் ஐந்தாம் முறையாக நேபாள பிரதம அமைச்சராக 13 சூலை 2021 அன்று பதவியேற்றார்.[2][3]18 சூலை 2021 அன்று நேபாள பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 165 வாக்குகள் பெற்று செர் பகதூர் தேவ்பா தமது பிரதமர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். [4][5]
மாண்பு மிகு செர் பகதூர் தேவ்பா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
शेरबहादुर देउवा | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேபாள பிரதம அமைச்சர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 13 சூலை 2021 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 7 சூன் 2017 – 15 பிப்ரவரி 2018 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | பிரசந்தா என்ற புஷ்ப கமல் தகால் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 4 சூன் 2004 – 1 பிப்ரவரி 2005 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | நேபாள மன்னர் ஞானேந்திரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | சூரிய பகதூர் தாபா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 26 சூலை 2001 – 4 அக்டோபர் 2002 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | நேபாள மன்னர் ஞானேந்திரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | லோகேந்திர பகதூர் சந்த் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 12 செப்டம்பர் 1995 – 12 மார்ச் 1997 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சியாளர் | நேபாள மன்னர் பிரேந்திரா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | மன் மோகன் அதிகாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | லோகேந்திர பகதூர் சந்த் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 13 சூன் 1946 ஆஷிகிராம், Ashigram, டடேல்துரா மாவட்டம், நேபாள இராச்சியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் (2002க்கு முன்னர்; 2007–தற்போது வரை) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | அர்சு ராணா தேவ்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | திரிபுவன் பல்கலைக்கழகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மந்திரி சபை | செர் பகதூர் தேவ்பாவின் ஐந்தாம் அமைச்சரவை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
தொகு2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், செர் பகதூர் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாம் இடத்தில் தள்ளப்பட்டு, இடதுசாரி கூட்டணி கட்சிகளான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. செர் பகதூர் தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே செர் பகதூர் தேவ்பா, புதிய நாடாளுமன்றத்தை அமைத்தவுடன், 21 சனவரி 2018க்குள் பிரதமர் பதவியிலிருந்து பதவி விலக உள்ளார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sher Bahadur Deuba elected 40th PM of Nepal" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-06-06/sher-bahadur-deuba-elected-new-pm-of-nepal.html.
- ↑ President appoints Nepali Congress President Sher Bahadur Deuba prime minister
- ↑ Deuba not to take oath until Office of President revises its appointment notice
- ↑ Nepal PM Sher Bahadur Deuba set to seek vote of confidence
- ↑ Sher Bahadur Deuba wins vote of confidence in Nepal Parliament