சிஞ்சா சமவெளி

சிஞ்சா சமவெளி ( Sinja Valley) நேபாள நாட்டின் மாநில எண் 6ல் சூம்லா மாவட்டத்தின், இமயமலையில் உள்ளது.

சிஞ்சா சமவெளி
सिञ्जा उपत्यका
சமவெளி
நரகோட் சிஞ்சா சமவெளி
நரகோட் சிஞ்சா சமவெளி
சிஞ்சா சமவெளி is located in நேபாளம்
சிஞ்சா சமவெளி
சிஞ்சா சமவெளி
நேபாளத்தின் சிஞ்சா சமவெளியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°19′28″N 81°58′57″E / 29.32444°N 81.98250°E / 29.32444; 81.98250ஆள்கூறுகள்: 29°19′28″N 81°58′57″E / 29.32444°N 81.98250°E / 29.32444; 81.98250
நாடு நேபாளம்
மண்டலம்கர்ணாலி
மாவட்டம்சூம்லா
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)

சிஞ்சா சமவெளியை, பண்டைய கச மல்லர்கள் 12 - 14 நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தினர். காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை, சிஞ்சா சமவெளியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில், பல அரண்மனைகள், கோயில்கள் மற்றும் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[1]சிஞ்சா சமவெளி பாறைகளில் துவக்க கால நேபாளி மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.

வரலாறுதொகு

14ம் நூற்றாண்டில் கச மல்ல இராச்சியம், இரண்டு தனி நாடுகளாக பிரிந்தது. கிபி 18ம் நூற்றாண்டில், ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா நேபாள இராச்சியத்தை ஒன்றிணைக்கும் வரை, கச மல்ல நாடுகள் ஆட்சி செலுத்தியது. சிஞ்சா சமவெளியை நிறுவியவர் மன்னர் நாகராஜன் ஆவார்.

உலகப்பாரம்பரிய களமாக தரம் உயர்த்துதல்தொகு

30 சனவரி 2008ல் சிஞ்சா சமவெளியை பண்பாட்டு உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிப்பதற்கு யுனெஸ்கோ நிறுவனத்தின் தற்காலிக பட்டியலில் உள்ளது.

அடிக்குறிப்புகள்தொகு

  1. Sinja valley - UNESCO World Heritage Centre

மேற்கோள்கள்தொகு

Sinja valley - UNESCO World Heritage Centre Retrieved 2009-03-03.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஞ்சா_சமவெளி&oldid=2526849" இருந்து மீள்விக்கப்பட்டது