ஜங் பகதூர் ராணா


ஜங் பகதூர் ராணா (Jung Bahadur Kunwar Ranaji)[3] (இயற்பெயர்: வீர நரசிங் குன்வர் (Bir Narsingh Kunwar) (நேபாளி: वीर नरसिंह कुँवर), (பிறப்பு:18 சூன் 1817 - இறப்பு:25 பிப்ரவரி 1877), நேபாள் இராச்சியத்தில் ராணா வம்சத்தை நிறுவியரும், ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் படைத்தலைவராக இருந்தவர் ஆவார். பின்னர் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, ஜங் பகதூர் ராணாவும், அவரது வம்சத்தினரும் நேபாள இராச்சியத்தை, 1856 முதல் 1951 முடிய ஆண்டனர்.

ஜங் பகதூர் ராணா
ஜங் பகதூர் குன்வர்
श्री ३ महाराजा
जङ्ग बहादुर कुँवर
राणाजी
மகாராஜா ஜங்பகதூர் ராணா
நேபாள இராச்சியத்தின் எட்டாவது பிரதம அமைச்சர்
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா
பதவியில்
15 செப்டம்பர் 1846 - 1 அகஸ்டு 1856
அரசர் ராஜேந்திர விக்ரம் ஷா
முன்னவர் பதே ஜங் ஷா
பின்வந்தவர் பம் பகதூர் குன்வர்
பதவியில்
28 சூன் 1857 - 25 பிப்ரவரி 1877
அரசர் சுரேந்திர விக்ரம் ஷா
முன்னவர் பம் பகதூர் குன்வர்
பின்வந்தவர் ரணதீப் சிங் குன்வர்
தனிநபர் தகவல்
பிறப்பு வீர நரசிங்க குன்வர்
18 சூலை 1817
இறப்பு 25 பெப்ரவரி 1877(1877-02-25) (அகவை 59)
பதார்காட்
குடியுரிமை நேபாளம்
தேசியம் நேபாளி
உறவினர் தாய்மாமன் மாதாபார் சிங் தாபா
பிள்ளைகள் ஜெகத் ஜங் பகதூர் ராணா
  • ஜித் ஜங் பகதூர் ராணா
  • பத்ம ஜங் பகதூர் ராணா
  • ரணவீர ஜங் ராணா
  • பதான் குமாரி ராணா
பெற்றோர் தந்தை பால நரசிங்க குன்வர்
சமயம் இந்து சமயம்[1]
ஸ்ரீ ஜங் பகதூர் குன்வர் ராணா
श्री ३ महाराज जङ्गबहादुर कुँवर राणा
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மகாராஜா
ஆட்சிக்காலம்6 ஆகஸ்டு 1856 – 25 பிப்ரவரி 1877
முடிசூட்டுதல்6 ஆகஸ்டு 1856[2]
முன்னையவர்established
பின்னையவர்ரணதீப் சிங் குன்வர்
துணைவர்இரண்யகர்ப தேவி
கைலா மகாராணி
கங்கா மகாராணி
சித்தி கஜலெட்சுமி
புத்தலி மகாராணி
மிஸ்ரி மகாராணி
மீனா மகாராணி
தக்சோக் ராணி
குழந்தைகளின்
பெயர்கள்
பீமா பிரதாப் ஜங் ராணா
ஜெகத் ஜங் பகதூர் ராணா
ஜித் ஜங் பகதூர் ராணா
பத்ம ஜங் பகதூர் ராணா
பபெர் ஜங் ராணா
ரணவீர ஜங் ராண மற்றும் 7 மகன்கள்
பதான் குமாரி ராணா
தாரா இராச்சிய லெட்சுமி
லலிதா இராஜேஸ்வரி
சோமகர்வ திவ்வியேஷ்வரி
பெயர்கள்
ஜங் பகதூர் குன்வர் ராணா
அரச மரபுராணா வம்சம்
தந்தைபால நரசிங்க குன்வர்
தாய்கணேஷ் குமாரி தாபா குன்வர்
மதம்இந்து சமயம்

கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் குறுநில மன்னராக இருந்த ஜங் பகதூர் ராணா, பின்னர் நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் பணியாற்றியவர்.

தற்கால கர்நாடகா மாநிலததின் குடகு நாட்டின் மன்னர் சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கங்காதேவியை, ஜங் பகதூர் ராணா, வாரணாசியில் திருமணம் செய்து கொண்டவர்.

நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச குடும்பத்தில் அரசியல் பிணக்குகள் ஏற்பட்ட போது, ஜங் பகதூர் ராணா, நேபாள இராச்சியத்தின் மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அனைத்து ஆட்சி அதிகாரத்தை தானே எடுத்துக் கொண்டு, நாட்டை இருபதாண்டுகள் ஆண்டவர்.

நேபாள வரலாற்றில் கொடுங்கோல் மன்னர் எனப் பெயர் பெற்ற ஜங் பகதூர் ராணா, ராணா வம்சத்தை நிறுவினார். ஜங் பகதூர் ராணாவும் ராணா வம்சத்தினர் நேபாளத்தை கி பி 1856 முதல் 1951 முடிய ஆண்டனர். [4] [5]

ஜங் பகதூர் ராணாவின் தாத்தா ராமகிருஷ்ண குன்வர், பிரிதிவி நாராயணன் ஷா நிறுவிய நேபாள இராச்சியத்தின் பெரும் படைத்தலைவராக பணியாற்றியவர்.

இவரது தந்தை பால நரசிங் குன்வர், ராணா பகதூர் ஷாவின் அரசவையில் செல்வாக்குடன் விளங்கியவர்.

கிபி 1857ல் நேபாள மன்னர் சுரேந்திர விக்ரம் ஷா, ஜங் பகதூர் குன்வருக்கு, ராணா என்ற பட்டம் வழங்கினார். இவரது வம்சத்தினரும் ராணா என்ற பட்டதுடன் அழைக்கப்பட்டனர்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Google Books
  2. Royal Ark
  3. http://www.royalark.net/Nepal/lamb3.htm
  4. Rana, Purushottam S.J.B. (1998). Jung Bahadur Rana: the story of his rise and glory. Book Faith India. பக். 150. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7303-087-1. 
  5. Dietrich, Angela (1996). "Buddhist Monks and Rana Rulers: A History of Persecution". Buddhist Himalaya: A Journal of Nagarjuna Institute of Exact Methods. http://ccbs.ntu.edu.tw/FULLTEXT/JR-BH/bh117536.htm. பார்த்த நாள்: 17 September 2013. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jang Bahadur Rana
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க தொகு

ஜங் பகதூர் ராணா
பிறப்பு: 18 சூன் 1817 இறப்பு: 25 பிப்ரவரி 1877
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
புதிதாக உருவாக்கப்பட்டது
கஸ்கி மற்றும் லம்ஜுங்கின் மன்னர்
1856–1877
பின்னர்
ராணதீப் சிங் குன்வர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்_பகதூர்_ராணா&oldid=3213498" இருந்து மீள்விக்கப்பட்டது