சுரேந்திர விக்ரம் ஷா
சுரேந்திர விக்ரம் ஷா (Surendra Bikram Shah) (நேபாளி: सुरेन्द्र बिक्रम शाह) (1829 – 1881) நேபாள இராச்சியத்தை 1847 முதல் 1881 முடிய ஆட்சி செய்தவர்.
சுரேந்திர விக்ரம் ஷா | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சி | 12 மே 1847 – 17 மே1881 |
முடிசூட்டு விழா | 12 மே 1847[1] |
முன்னிருந்தவர் | ராஜேந்திர விக்ரம் ஷா |
பின்வந்தவர் | பிரிதிவி வீர விக்ரம் ஷா |
துணைவர் | சூரிய ராஜ்ஜிய லெட்சுமி தேவி திரிலோக ராஜ்ஜிய லெட்சுமி தேவி தேவ ராஜ்ஜிய லெட்சுமி தேவி |
வாரிசு(கள்) | இளவரசன் திரிலோகன் இளவரசன் நரேந்திரன் இளவரசி திலகா |
அரச குடும்பம் | ஷா வம்சம் |
Dynasty | ஷா வம்சம் |
தந்தை | ராஜேந்திர விக்ரம் ஷா |
தாய் | சாம்ராஜ்ஜிய லெட்சு தேவி |
பிறப்பு | 20 அக்டோபர் 1829 காத்மாண்டு நகர சதுக்கம், நேபாள இராச்சியம் |
இறப்பு | 17 மே 1881 (அகவை 51) காத்மாண்டு நகர சதுக்கம், நேபாள இராச்சியம் |
இவரது தந்தையும், மன்னராக இருந்தவருமான ராஜேந்திர விக்ரம் ஷாவை, அரண்மனையில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்து, நேபாள பிரதம அமைச்சர் ஜங் பகதூர் ராணாவால் 1847ல் சுரேந்திர விக்ரம் ஷா நேபாள மன்னராக முடிசூட்டப்பட்டவர்.
மன்னர் சுரேந்திர விக்ரம் ஷாவை கைப்பொம்மையாகக் கொண்டு, ராணா வம்சத்து பிரதம அமைச்சர் ராணா பகதூர் ஷா 1847 முதல் நேபாள இராச்சியத்தை முழு அதிகாரத்துடன் நிர்வகித்தார்.
இளமை
தொகுநேபாள இராச்சியத்தின் மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷா - பட்டத்து ராணி சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி இணையரின் மூத்த மகனும், பட்டத்து இளவரசரும் ஆவார்.
சுரேந்திர ஷாவின் சிற்றன்னை ராஜ்ஜிய லெட்சுமி தேவி, தன் மகன் ரணேந்திர விக்ரம் ஷாவை பட்டத்து இளவரசன் பதவியில் அமர்த்த சதித் திட்டம் தீட்டினார்.
இத்திட்டத்திற்கு ஜங் பகதூர் ராணா உதவினார். கோத் படுகொலைகளின் போது, பிரதம அமைச்சர் பதே ஜங் ஷா உள்ளிட்ட நாற்பது முக்கிய அரசவை பிரமுகர்களை கொன்றார். பின்னர் ராணி ராஜ்ஜிய லெட்சுமிக்கு எதிராக திரும்பிய ஜங் பகதூர் ராணாவைக் கொல்ல, ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி சதித்திட்டம் தீட்டினார். ஆனால் சதித்திட்டம் தோல்வியில் முடிந்தது.
1847ல் ஜங் பகதூர் ராணா நேபாளத்தின் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவுடன், ராணி ராஜ்ஜிய லெட்சுமியும் வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்டார். இருப்பினும் இறுதியில் 1847ல் சுரேந்திர விக்ரம் ஷா நேபாள அரியணையில் அமர்த்தப்பட்டார்.[2]
மன்னராக சுரேந்திர ஷா
தொகுஜங் பகதூர் ராணாவின் அனுமதி இன்றி மன்னர் சுரேந்திரனை, யாரும் சந்திக்க இயலாதவாறு காத்மாண்டு அரண்மனையில் ஒரு கைதியாக அடைத்து வைக்கப்பட்டார். மாதம் ஒரு முறை முன்னாள் மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷாவைப் பார்க்க மட்டும் சுரேந்திர விக்ரம் ஷா அனுமதிக்கப்பட்டார். சுரேந்திர ஷா, 1881ல் இறக்கும் வரை அரண்மனையிலே, நேபாள தலைமை அமைச்சர் ஜங் பகதூர் ராணாவின் கைதியாக வாழ்ந்தார். ஜங் பகதூர் ராணா மன்னரின் பெயரில் நாட்டை முழு அதிகாரத்துடன் ஆண்டார். [3]
மன்னர் சுரேந்திர விக்ரம் ஷாவின் மகன் திரிலோக்கிய ஷா, அமைச்சர் ஜங் பகதூர் ராணாவின் மூன்று மகள்களான தாரா ராஜ்ஜிய லெட்சுமி தேவி, லலிதா ராஜேஸ்வரி ராஜ்ஜிய லெட்சுமி தேவி மற்றும் இரண்யகர்ப குமாரி தேவி ஆகியோரை மணந்தார்.[4] 1878ல் திரிலோக்கிய ஷா இறந்துவிட, அவரது மூத்த மகன் பிரிதிவி வீர விக்ரம் ஷா நேபாள அரியணையில் ஏற்றப்பட்டார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- History of the Shah Dynasty -- official site பரணிடப்பட்டது 2006-11-10 at the வந்தவழி இயந்திரம்