லம்ஜுங் மாவட்டம்
லம்ஜுங் மாவட்டம் (Lamjung District) (நேபாளி: लमजुङ जिल्ला ⓘ), தெற்காசியாவில் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 4-இல் அமைந்துள்ளது. இம்மாவட்டத் நிர்வாகத் தலைமையிட நகரமான பேசிசஹர் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும்.
கண்டகி மண்டலத்தில் அமைந்த லம்ஜுங் மாவட்டம் 1,692 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,67,724 ஆகும். [1]நிலவியலின் படி, இம்மாவட்டம் நேபாளத்தின் நடுவில் அமைந்துள்ளது. குரூங் இன மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நேபாள மொழி, குரூங் மொழி மற்றும் மகர் மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் அன்னபூர்னா கொடுமுடி அமைந்துள்ளது.
படக்காட்சிகள்
தொகு-
மர்சியந்தி ஆறு
-
ஹிலேடேக்சர் கிராமம்
-
விளையாடும் குரூங் இன குழந்தை
புவியியல் மற்றும் தட்ப வெப்பம்
தொகுலம்ஜுங் மாவட்டம் இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 6,400 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி பகுதிகள், டிரான்ஸ்-இமயமலை என ஏழு காலநிலைகளில் காணப்படுகிறது. [2]
உள்ளாட்சி நிர்வாகம்
தொகுலம்ஜுங் மாவட்டத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தை ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களும், பேசிசஹர் மற்றும் சுந்தர் பஜார் என இராண்டு நகராட்சிகளும் மேற்கொள்கிறது.
2015 நிலநடுக்கம்
தொகு25 ஏப்ரல் 2015 அன்று ஏற்பட்ட நேபாள நிலநடுக்கம் இம்மாவட்டத்தின் அருகில் மையம் கொண்டிருந்தது.[3] இதனால் காட்மாண்டு நகரம் பெரும் பொருட் சேதமும், உயிர்ச் சேதம் கண்டது.[4]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 2013-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418041642/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012.
- ↑
The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013
{{citation}}
: horizontal tab character in|series=
at position 89 (help) - ↑ "Map of the earthquake M7.9 - 29km ESE of Lamjung, Nepal". Global Earthquake Epicenters with Maps. Geographic.org. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
- ↑ "Strong Earthquake Strikes Nepal Near Its Capital, Katmandu". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 25 April 2015.
- லம்ஜுங் மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2017-01-13 at the வந்தவழி இயந்திரம்