பிரதாப் சிங் ஷா

நேபாள மன்னர்


பிரதாப் சிங் ஷா (Pratap Singh Shah, King of Nepal) (நேபாளி: प्रतापसिंह शाह) (1751 – 1777)[2] நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் இரண்டாவது மகன் ஆவார்.

பிரதாப் சிங் ஷா
நேபாள மன்னர்
Pratap Singh Shah.jpg
ஆட்சி11 சனவரி 1775 - 17 நவம்பர் 1777
முடிசூட்டு விழா12 சனவரி 1775[1]
முன்னிருந்தவர்பிரிதிவி நாராயணன் ஷா
பின்வந்தவர்ராணா பகதூர் ஷா
துணைவர்ராணி இராஜேந்திர ராஜ்ஜிய லெட்சுமி தேவி
மைஜு ராணி மானேஸ்வரி தேவி
ராணி விதுராயணி தேவி
வாரிசு(கள்)நரேந்திர ஷா (குழந்தை பருவத்தில் இறப்பு)
ராணா பகதூர் ஷா
விதுர் பகதூர் ஷா
சேர் பகதூர் ஷா
அரச குலம்ஷா வம்சம்
தந்தைபிரிதிவி நாராயணன் ஷா
தாய்ராணி நரேந்திர இராச்சிய லெட்சுமி தேவி
பிறப்பு16 ஏப்ரல் 1751
கோர்க்கா, நேபாளம்
இறப்பு17 நவம்பர் 1777 (அகவை 26) (காச நோய்)
காட்மாண்டு, நேபாளம்
சமயம்இந்து சமயம்

பிரதாப் சிங் ஷா 24வது வயதில் 1775ல் நேபாள இராச்சியத்தின் மன்னராக முடி சூட்டப்பட்டார். 36 மாதங்கள் இராச்சியத்தை ஆண்ட, பிரதாப் சிங் காசநோயால் தமது 26வது வயதில் காலமானார்.

பிரதாப் சிங் ஷாவின் இரண்டறை வயது மகன் ராணா பகதூர் ஷாவிற்கு பதிலாக பிரதாப் சிங் ஷாவின் பட்டத்து ராணி இராஜேந்திர ராஜ்ஜிய லெட்சுமி தேவி, நேபாள இராச்சியத்தின் அரசப் பிரதிநிதியாக நாட்டை நிர்வகித்தார். பின்னர் ராணா பகதூர் ஷா உரிய வயது அடைந்தவுடன் நேபாள இராச்சியத்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Royal Ark
  2. "Royal Court of Nepal". 2006-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-12-15 அன்று பார்க்கப்பட்டது.
பிரதாப் சிங் ஷா
பிறப்பு: 16 ஏப்ரல் 1751 17 நவம்பர்
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
பிரிதிவி நாராயணன் ஷா
நேபாள மன்னர்
1775–1777
பின்னர்
ராணா பகதூர் ஷா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_சிங்_ஷா&oldid=3563459" இருந்து மீள்விக்கப்பட்டது