பீம்சென் தபா

பீம்சென் தபா (Bhimsen Thapa) About this soundlisten  (நேபாளி: भीमसेन थापा; 1775 – 1839) நேபாள இராச்சியத்தின் முதல் தலைமைப் படைத்தலைவராகவும், முக்தியார் எனும் பிரதம அமைச்சராகவும் 1806 முதல் 1837 முடிய பணியாற்றியவர். மாதவர் சிங் தபா, இவரது அண்னன் மகன் ஆவார்.

தலைமைப் படைத்தலைவர் & பிரதம அமைச்சர்
பீம்சென் தபா
श्री मुख्तियार जर्नेल साहेब
भीमसेन थापा
பீம்சென் தபா, நேபாள முதலமைச்சர் (1806 - 1837)
நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
1806–1837
அரசர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா
ராஜேந்திர விக்ரம் ஷா
முன்னவர் ராணா பகதூர் ஷா
முதலமைச்சராக
பின்வந்தவர் ராணா ஜங் பாண்டே
தலைமைப் படைத்தலைவர்
முன்னவர் தாமோதர் பாண்டே
பின்வந்தவர் ராணா ஜங் பாண்டே
தனிநபர் தகவல்
பிறப்பு (1775-08-00)ஆகத்து 1775
கோர்க்கா, நேபாளம்
இறப்பு 5 ஆகத்து 1839(1839-08-05) (அகவை 64)
காட்மாண்டு, நேபாளம்
தேசியம் நேபாளி
பிள்ளைகள் லலிதா தேவி பாண்டே
ஜனக குமாரி பாண்டே
தீர்க்க குமாரி பாண்டே [1]
இருப்பிடம் தாபாதலி அரண்மனை (1798-1804), பாக் அரண்மனை (1804-)[2]
சமயம் இந்து சமயம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு நேபாள இராச்சியம்
கிளை நேபாள இராணுவம்
தர வரிசை தலைமைப் படைத்தலைவர்
படைத்துறைப் பணி தலைமைப் படைத்தலைவர்
சமர்கள்/போர்கள் ஆங்கிலேய-நேபாளப் போர்


நேபாள இராச்சியத்தின் மூன்றாவது மன்னர் ராணா பகதூர் ஷாவின் மெய்காப்பாளராகவும், தனிச் செயலராகவும் அரண்மனைப் பணியைத் துவக்கினார் தபா வம்சத்தின் பீம்சென் தபா.

நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவின் துயரமான காலங்களில் பீம்சென் தபா உடனிருந்ததால், மன்னர் ராணா பகதூர் ஷா, 1804ல் பீம்சென் தாபாவிற்கு கஜி எனப்படும் அமைச்சர் பதவி வழங்கினார்.

1806ல் மன்னர் ராணா பகதூர் ஷா, தனது ஒன்றுவிட்ட தம்பியால் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க 93 அரசத் துரோகிகளை படுகொலை செய்தார். இதனால் பீம்சென் தபாவிற்கு நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

பீம்சென் பிரதம அமைச்சராக இருந்த காலத்தில், நேபாள இராச்சியம், கிழக்கில் சத்லஜ் ஆறு முதல் மேற்கில் டீஸ்டா ஆறு வரை பரவி இருந்தது.

1814 - 1816 நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாளியர்கள் கைப்பற்றியிருந்த குமாவுன், கார்வால், சிக்கிம், டார்ஜிலிங், மொரங் பகுதிகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு விட்டுத் தரப்பட்டது.

மேலும், கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களின் அனுப்பிய ஒரு அரசப் பிரதிநிதியை நேபாள அரசவையில் நிரந்தரமாக அனுமதிக்க வேண்டியதாயிற்று.

பருவ வயது அடைவதற்கு முன்னரே மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா 1816ல் இறக்கும் போதும், நேபாள நாட்டின் அடுத்த வாரிசு ராஜேந்திர விக்ரம் ஷா குழந்தையாக இருந்த போதும், பீம்சென் தாபா உதவியுடன் ராணி திரிபுரசுந்தரி, நாட்டின் காப்பாளராக செயல்பட்டார்.

பீம்சென் தபாவின் ஆதரவாளரான ராணி திரிபுரசுந்தரி 1832ல் காலமானதாலும், மன்னர் ராஜேந்திர விக்ரம் ஷா ஆட்சி அதிகாரத்தில் பலமற்றவராக இருந்ததாலும், நேபாள அரசவை பிரபுக்களில், குறிப்பாக பாண்டேக்கள், தாமோதர் பாண்டேவின் கொலைக்கு காரணமானவர் என பீம்சென் தாபா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இறுதியில் பீம்சென் தபாவை சிறையில் அடைத்தனர். 1839ல் பீம்சென் தபா, 1839ல் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இப்பிணக்குகளால் நேபாள இராச்சியத்தின் மன்னர்களை பொம்மை அரசர்களாகக் கொண்டு ராணா வம்சத்தவர்கள் 1846 முதல் மறைமுகமாக நேபாள இராச்சியத்தை நிர்வகிக்கத் தொடங்கினர்.

குடும்பம் தொகு

பீம்சென் தாபாவின் தந்தையின் பெயர் அமர் சிங் தபா, தாயின் பெயர் சத்தியரூப மாயா. இவரது பாட்டன் பெயர் வீரபத்திர தபா. இவரது நான்கு சகோதரர்கள்:நயின் சிங், பக்தவர் சிங், அம்ரித் சிங் மற்றும் ரணவீர சிங். இவரது மாற்றாந்தாயின் குழந்தைகள் ரணபம் மற்றும் ரண்சவர் ஆகும். பீம்சென் தாபாவின் ஒரு ஆண் மகன் சிறு வயதில் இறந்துவிட்டார். இவரது மூன்று மகள்கள லலிதா தேவி, ஜனக குமாரி மற்றும் தீர்க்க குமாரி ஆவர்.

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. Paudel, Punya Prasad (2006). Aatreya dekhi Paudel samma. Paudel Society for Cultural Promotion. பக். 101. 
  2. Pradhan 2012, ப. 23-24.

ஆதாரங்கள் தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீம்சென்_தபா&oldid=3587629" இருந்து மீள்விக்கப்பட்டது