கீர்வான் யுத்த விக்ரம் ஷா

நேபாள அரசர்

கீர்வான் யுத்த விக்ரம் ஷா (Girvan Yuddha Bikram Shah) (நேபாளி: गीर्वाणयुद्ध विक्रम शाह) (19 அக்டோபர் 1797 – 20 நவம்பர் 1816), 1799 முதல் 1816 முடிய நேபாள இராச்சியத்தை ஆண்ட நான்காவது மன்னராவார்.

கீர்வான் யுத்த விக்ரம் ஷா
நேபாள மன்னர்
ஆட்சிக்காலம்8 மார்ச் 1799 – 20 நவம்பர் 1816
முடிசூட்டுதல்8 மார்ச் 1779[1]
முன்னையவர்ராணா பகதூர் ஷா
பின்னையவர்ராஜேந்திர விக்ரம் ஷா
பிறப்பு19 அக்டோபர் 1797
காத்மாண்டு நகரச் சதுக்கம் காத்மாண்டு அரண்மனை
இறப்பு20 நவம்பர் 1816 (அகவை 19)(அம்மை நோய்)
காத்மாண்டு நகரச் சதுக்கம் காத்மாண்டு அரண்மனை
துணைவர்சித்தி லெட்சுமி தேவி
ராஜ்ஜிய லெட்சுமி தேவி
கீர்த்திரேகா
குழந்தைகளின்
பெயர்கள்
நரேந்திர விக்ரம் ஷா
ராஜேந்திர விக்ரம் ஷா
சத்திய ரூப லெட்சுமி தேவி
சௌபாக்கியசுந்தரி
அரச மரபுஷா வம்சம்
தந்தைராணா பகதூர் ஷா
தாய்கந்தவதி தேவி
மதம்இந்து சமயம்

கீர்வான் யுத்த விக்ரம் ஷா பிறந்த ஒன்றறை ஆண்டுகளில், அவனுக்கு இளவரசு பட்டம் சூட்டிய ராணா பகதூர் ஷா, தன் மனைவி கந்தவதி தேவியுடன் நாட்டை விட்டு வெளியேறியதால், குழந்தை கீர்த்திவான் யுத்த ஷாவின் பெரியன்னை ராணி ராஜராஜேஸ்வரி, இளவரசன் சார்பாக அரசப்பிரதியாக, தலைமை அமைச்சர் தாபா வம்சத்தின் பீம்சென் தபா உதவியுடன் நாட்டை நிர்வகித்தர். கீர்வான் யுத்த விக்ரம் ஷா தமது 19வது வயதில் அம்மை நோய் தாக்கி இறந்ததால், அவரது மகன் ராஜேந்திர விக்ரம் ஷாவிற்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டது.

சீன நேபாளப் போர்

தொகு

1788 - 17989ல் திபெத்திய-நேபாள வணிகரகளுக்குமிடையே ஏற்பட்ட வணிகப் பிணக்கால், தாமோதர பாண்டே தலைமையிலான நேபாளப் படைகளுக்கும், திபெத்தியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரில், திபெத்தியப் பேரரசு தோல்வி கண்டது. எனவே திபெத்திய அரசு, நேபாள இராச்சியத்திற்கு போர் ஈட்டுத் தொகை வழங்கியது. பின்னர் திபெத்தியர்களின் தூண்டுதலின் பேரில், 1791-1792ல் சீனர்களுக்கும் - நேபாளப் படைக்களுக்கும் நடைபெற்ற போரில், நேபாளம் சீனாவிடம் சரண் அடைந்து, பெத்திராவதி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர், சீனர்களுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்த வேண்டியதாயிற்று.[2] 1814-1816ல் ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், நேபாளம், சீனர்களுக்கு திறை செலுத்துவதை நிறுத்தியது.

ஆங்கிலேய-நேபாளப் போர்

தொகு

1814 - 1816ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், இரு தரப்பும் செய்து கொண்ட போர் உடன்படிக்கையின் படி, குமாவுன், கார்வால், சிக்கிம், டார்ஜிலிங், மேற்கு தராய் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத் தரப்பட்டது.

நேபாள இராச்சியத்தின் கிழக்கு எல்லையாக மேச்சி ஆறும், மேற்கு எல்லையாக மகாகாளி ஆறும் நேபாள இராச்சியத்தின் எல்லையாக உறுதிப்படுத்தப்பட்டது.

மேற்கு தராய் பகுதி ஆங்கிலேயருக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு, நட்ட ஈடு வழங்க கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபாள இராச்சியத்தில், கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசப்பிரதிநிதி ஒருவரை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Royal Ark
  2. "Tibetan and Nepalese Conflict". Official website of Nepal Army. Archived from the original on 2017-12-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
  3. India-Board (8 Nov 1816).
கீர்வான் யுத்த விக்ரம் ஷா
பிறப்பு: 19 அக்டோபர் 1797 இறப்பு: 20 நவம்பர் 1816
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் நேபாள மன்னர்
1799–1816
பின்னர்