சுகௌலி உடன்படிக்கை

சுகௌலி உடன்படிக்கை (Treaty of Sugauli) நேபாள-பிரித்தானிய இந்தியா எல்லைப்பகுதிகளை வரையறுக்கும் ஒப்பந்தம் ஆகும்.[1] இந்த ஒப்பந்தம், 1814-1816 ஆங்கிலேய-போருக்குப் பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் நேபாள இராச்சியத்தின் உயர் அதிகாரிகள் 4 மார்ச் 1816 அன்று இந்தியாவின் தற்கால பிகார் மாநிலத்தின் சுகௌலி எனும் ஊரில் வைத்து கையொப்பமிட்டனர். [2]

சுகௌலி உடன்படிக்கை
வரைவு2 டிசம்பர் 1815
கையெழுத்திட்டது4 மார்ச் 1816
இடம்சுகௌலி, பிகார், இந்தியா
கையெழுத்திட்டோர்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சார்பாக பாரிஷ் பிராட்ஷா மற்றும் நேபாள இராச்சியம் சார்பாக் இராஜகுரு கஜராஜ் மிஸ்ராவுடன் சந்திரசேகர் உபாத்தியாயா
தரப்புகள் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
 நேபாளம்
அங்கீகரிப்பவர்கள்பிரித்தானிய இந்தாவின்தலைமை ஆளுநர் டேவிட் ஒச்தெர்லோனி
மொழிஆங்கிலம்
1816-இல் பிரித்தானிய இந்திய அரசு மற்றும் நேபாளம் மேற்கொண்ட சுகௌலி உடன்படிக்கையின்படி, நேபாளத்திற்கு திருப்பி வழங்கப்பட்ட நயா முலுக் பகுதிகள்
சுகௌலி ஒப்பந்தத்தின் விளைவாக நேபாளம் மற்றும் இந்திய நில அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்கள்
இந்தியாவின் வரைபடம், ஆண்டு 1814

உடன்படிக்கையின் சரத்துகள்

தொகு

இந்த உடன்படிக்கையின் படி, ஏற்கனவே நேபாள இராச்சியம் கைப்பற்றியிருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் கிழக்கு தராய் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபாள இராச்சியத்திற்கு நயா முலுக் பிரதேசம் திருப்பி வழங்கப்பட்டது. மேற்கு தராய் பகுதி ஆங்கிலேயருக்கு விட்டுத் தரப்பட்டதால், ஆண்டு ஒன்றுக்கு இரண்டு இலட்சம் ரூபாய், நேபாள இராச்சியத்திற்கு, நட்ட ஈடு வழங்க கம்பெனி ஆட்சியினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. மேலும் நேபாள இராச்சியத்தில், ஒரு கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதுவர் ஒருவரை நியமிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

பின்னணி

தொகு

கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்கள், இந்தியாவில் தங்களது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், நேபாளிகள், மேற்கில் உள்ள தற்கால உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டம் மற்றும் கார்வால் கோட்டங்களை வென்றதுடன், கிழக்கில் உள்ள சிக்கிம் நாட்டையும், டார்ஜீலிங் பகுதிகளையும் வென்று நேபாள இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். இதனால் நேபாளிகள் மீது ஆங்கிலேயர்கள் எரிச்சல் அடைந்தனர். மேலும் கிபி 1792 மற்றும் 1795ல் கிழக்கிந்திய கம்பெனியினர், திபெத்திற்கான தங்கள் வணிக வழித்தடங்களை, நேபாளம் வழியாக நடத்த, நேபாள மன்னரிடம் அனுமதி கோர தூதுக் குழுக்களை அனுப்பினர். ஆங்கிலேயர்களின் கோரிக்கையை நேபாள மன்னர் ஏற்க மறுத்துவிட்டார்.

கிபி 1800களின் முடிவில், நேபாள ராஜாமாதா ராணி ராஜேந்திர லெட்சுமி ஆட்சிக் காலத்தில், பால்பா மலைப்பகுதி மற்றும் தராய் சமவெளியின் ரூபந்தேஹி பகுதிகள் நேபாள இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. [3] கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் பாதுகாப்பு பகுதியில் இருந்த ரூபந்தேகி பகுதியை 1804 முதல் 1812 முடிய ஷா வம்ச மன்னர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதுவே 1814 ஆங்கிலேய-நேபாளப் போருக்கான முக்கியக் காரணம் ஆகும்.[3][4][5]இதனைக் கண்டு எரிச்சல் அடைந்த கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் 1814-16களில் நேபாளத்துடன் போரிட்டனர். போரின் முடிவில் சுகௌலி ஒப்பந்தம் ஏற்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. What is Sugauli Treaty ?
  2. Treaty of Sagauli
  3. 3.0 3.1 Oldfield, p. 40.
  4. Smith, Warlike Preliminaries, Ch. 8, p. 172.
  5. Prinsep, Ch. 2, Causes of Nipal War, p. 54-80.

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகௌலி_உடன்படிக்கை&oldid=3650682" இலிருந்து மீள்விக்கப்பட்டது