நயா முலுக் (Naya Muluk) (நேபாளி: नयाँ मुलुक) நேபாளத்தின் தென்மேற்கே இந்தியாவின் தற்கால உத்தரப் பிரதேச மாநில எல்லையை ஒட்டி அமைந்த தராய் பகுதிகளில் ஒன்றாகும். நயா முலுக் பகுதி சாரதா ஆற்றுக்கும், மேற்கு ரப்தி ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த பகுதி ஆகும். 1816-மேற்கொள்ளப்பட்ட சுகௌலி உடன்படிக்கைக்குப் பிறகு, இதனை நயா முலுக் பிரதேசம் என அழைக்கப்பட்டது.[1][2]

1816-இல் பிரித்தானிய இந்திய அரசு மற்றும் நேபாளம் மேற்கொண்ட சுகௌலி உடன்படிக்கையின்படி, நேபாளத்திற்கு திருப்பி வழங்கப்பட்ட நயா முலுக் பகுதிகள்

வரலாறு தொகு

1814-16-இல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போருக்குப் பின்னர் 1816-இல் மேற்கொள்ளப்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நயா முலுக் பிரதேசம் நேபாளத்திற்கு திருப்பி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் நேபாளம் ஆக்கிரமிப்பு செய்திருந்த சிக்கிம், டார்ஜிலிங், குமாவுன், கார்வால் மற்றும் கிழக்கு தராய் பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்களுக்கு விட்டுத்தர ஒப்புக் கொள்ளப்பட்டது.

நயா முலுக்கின் பகுதிகள் தொகு

 
1832-இல் நேபாள இராச்சியத்தின் தென்மேற்கு பிரதேசங்கள் மற்றும் பிரித்தானிய இந்தியாவிற்குட்பட்ட அவத் இராச்சியங்களை காட்டும் வரைபடம்

நயா முலுக் பிரதேசத்தின் இரண்டு மாவட்டங்கள் நேபாள மாநில எண் 7 மற்றும் இரண்டு மாவட்டங்கள் நேபாள மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. நயா முலுக்கின் பரப்பளவு 9,207 சதுர கிலோமீட்டர்கள் (3,555 sq mi) மற்றும் மக்கள்தொகை 21,44,846 ஆகும்.

மாவட்டங்கள் பரப்பளவு (KM2) மக்கள்தொகை
கஞ்சன்பூர் மாவட்டம் 1,610 451,248
கைலாலீ மாவட்டம் 3,235 775,709
பர்தியா மாவட்டம் 2,025 426,576
பாங்கே மாவட்டம் 2,337 491,313

மேற்கோள்கள் தொகு

  1. "Using 'Shikar Diplomacy' in 19th-Century Nepal". https://thewire.in/external-affairs/shikar-diplomacy-nepal-british. "... what was then called ‘Naya Muluk’, a strip of Terai flatlands the British had returned to Nepal in gratitude in 1860 and today encompassing the districts of Kailali, Banke, Bardiya and Kanchanpur." 
  2. "International Boundary Survey and Demarcation of South-eastern portion of Nepal with India". https://fig.net/resources/proceedings/fig_proceedings/fig2018/papers/ts03a/TS03A_shrestha_9297.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நயா_முலுக்&oldid=3217952" இருந்து மீள்விக்கப்பட்டது