பால்பா மாவட்டம்

பால்பா மாவட்டம் (Palpa District) (நேபாளி: पाल्पा जिल्लाAbout this soundகேட்க , தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தான்சேன் நகரம் ஆகும்.

நேபாளத்தில் பால்பா மாவட்டத்தின் அமைவிடம்
பால்பா மாவட்டத் தலைமையிடமான தான்சேன் நகரக் காட்சி

லும்பினி மண்டலத்தில் உள்ள பால்பா மாவட்டத்தின் பரப்பளவு 1,373 சதுர கிலோ மீட்டர் ஆகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,61,180 ஆகும்.[1]

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்தொகு

பால்பா மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம் கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [2]

உள்ளாட்சி நிர்வாகம்தொகு

 
பால்பா மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

பால்பா மாவட்டம் தான்சேன் மற்றும் இராம்பூர் என இரண்டு நகராட்சிகளையும், ஐம்பத்தி எட்டு கிராம வளர்ச்சி மன்றங்களையும் கொண்டுள்ளது.

முக்கிய ஆறுகள்தொகு

பால்பா மாவட்டத்தில் காளி கண்டகி ஆறு, தினௌ ஆறு, ரித்திஆறு, பூர்வா ஆறு, சூம்சா ஆறு மற்றும் தோவன் ஆறு என ஆறு ஆறுகள் பாய்கிறது.

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "2011 Nepal census (National Report)". Government of Nepal. பார்த்த நாள் November 2012.
  2. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது horizontal tab character in |series= at position 89 (உதவி)
வார்ப்புரு:Statoids

வெளி இணைப்புகள்தொகு


ஆள்கூறுகள்: 27°52′0″N 83°33′0″E / 27.86667°N 83.55000°E / 27.86667; 83.55000

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்பா_மாவட்டம்&oldid=3099709" இருந்து மீள்விக்கப்பட்டது