திப்பு சுல்தானின் கனவுகள்
திப்பு சுல்தான் கண்ட கனசு (Tipu Sultan Kanda Kanasu) என்பது கிரீசு கர்னாடு எழுதிய [1] ஒரு கன்னட நாடகமாகும். இந்த நாடகம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு குழுக்களால் பல முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரும்பாலும் இந்தியா மற்றும் பாக்கித்தானில் இந்நாடகம் நடந்துள்ளது. மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானின் (1750-1799) வாழ்க்கையின் கடைசி நாட்களையும், இந்திய நீதிமன்ற வரலாற்றாசிரியர் மற்றும் ஒரு பிரித்தானிய அறிஞரின் பார்வையில் வரலாற்று தருணங்களையும் கதை பின்பற்றுகிறது.
கிரீசு கர்னாடின் நாடகம், திப்பு சுல்தான் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய பார்சி கையெழுத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது. இது இந்திய அலுவலக நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அது பின்னர் திப்பு சுல்தானின் கனவுகள் என மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. திப்பு சுல்தான் 1785 முதல் 1798 வரை தனது கனவுகளில் சிலவற்றைப் பதிவு செய்துள்ளார். அவிசுவாசிகள், மராட்டியர்கள் மற்றும் நாசரேனியர்களை (அதாவது ஆங்கிலேயர்கள்) தோற்கடிப்பது மற்றும் நபியின் தோழர்கள் மற்றும் இசுலாமிய ஞானிகளின் தரிசனங்கள் பற்றிய பல கனவுகள் இதில் உள்ளன.[2]
கிரீசு கர்னாடின் நாடகம் அவரது நாடகத்திற்கு திப்புவின் 37 கனவுகளில் நான்கைப் பயன்படுத்துகிறது: கனவு 9, கனவு 10, கனவு 13 மற்றும் நான்காவது கனவான ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெற்றி ஆகியவை அந்நான்கு கனவுகளாகும்.[3] 1781-1802 ஆம் ஆண்டுகளில் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த உசேன் அலிகான் கிர்மானி எழுதிய திப்பு சுல்தானின் வரலாறான நேசானி ஐதுரியின் தொடர்ச்சி (ஆங்கில மொழிபெயர்ப்பு 1864 இல் வெளிவந்தது) கிரிசு கர்னாடின் நாடகத்திலும் ஒரு பாத்திரம் ஆகும்.[4]
"இந்த எதிர் வரலாற்று நாடகத் திட்டத்தின் மூலம் கர்னாடு சாதிக்க விரும்புவது, பிரித்தானிய வரலாற்றாசிரியர்கள், நாடக கலைஞர்கள் மற்றும் கலைஞர்களால் பிரச்சாரம் செய்யப்பட்ட இரக்கமற்ற மற்றும் கொள்கையற்ற 'மற்றவர்களின்' பிம்பத்தை சிதைப்பதாகும். அல்லது திப்பு சுல்தானின் மாற்று மனிதாபிமான மற்றும் உன்னத பாத்திரத்தை மீண்டும் உருவாக்குவதும் கூட." [5] என இயோர்டானிய அறிஞர்கள் கவால்டே மற்றும் நெய்ம்னே ஆகியோர் ஒரு கட்டுரையில் முடிக்கிறார்கள்,
மொழிபெயர்ப்புகள்
தொகு- சேகரிக்கப்பட்ட நாடகங்கள்: தலேடாண்டா, தீ மற்றும் மழை, திப்பு சுல்தானின் கனவுகள், மலர்கள் மற்றும் பிம்பங்கள்: இரண்டு நாடக மோனோலாக்சு: மலர்கள் : உடைந்த பிம்பங்கள் , தொகுதி. 2 . ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அச்சகம், அமெரிக்கா. 2005.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-567311-1
மேற்கோள்கள்
தொகு- ↑ Abha Shukla Kaushik, "Subaltern Historiography: Girish Karnad’s Dreams of Tipu Sultan", Impressions 4.1 (2010). Accessed 13 September 2014.
- ↑ The Dreams of Tipu Sultan, Tr. Mahmud Husain, Pakistan Historical Society Publications, 1957
- ↑ Use of Dreams in Girish Karnad's the Dreams of Tipu Sultan, Thiyam Naoba Singh, Global Journal of HUMAN-SOCIAL SCIENCE: G Linguistics & Education, Volume 18 Issue 13 pp. 13-15, 2018
- ↑ History of Tipu Sultan by Khan, Hussain Ali Kirmani; Miles, W., 1864
- ↑ Khawaldeh, Imad M. and Neimneh, Shadi, Reclaiming the Lost Hero in Girish Karnad's the Dreams of Tipu Sultan (September 3, 2017). AWEJ for translation & Literacy Studies Volume, 1 Number 3, August 2017