திமிங்கில வேட்டை
திமிங்கில வேட்டை என்பது அறிவியல் ஆராய்ச்சிக்காகவும் திமிங்கிலத்தின் பயன்படு பொருட்களான இறைச்சி, எண்ணெய், பிளப்பர் எனப்படும் அதன் தசை ஆகியவற்றுக்காக திமிங்கிலங்களை வேட்டையாடுதலைக் குறிக்கும். கி.மு. 3000-ஆம் ஆண்டு வாக்கிலிருந்தே திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுவதாக அறியப்படுகிறது.[1] எனினும் 17-ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொழில்முறை திமிங்கில வேட்டை தொடங்கியது. 1930-களின் பிற்பகுதியில் ஆண்டிற்கு 50,000 திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன. 1986-ஆம் ஆண்டு பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டைக்குத் தடை விதித்தது.
திமிங்கில வேட்டை கடுமையான விவாதத்திற்குரியதாகவே உள்ளது. வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை ஆதரிக்கும் நாடுகளான ஐசுலாந்து, நார்வே, சப்பான் முதலிய நாடுகள் சில குறிப்பிட்ட வகை திமிங்கிலங்களை வேட்டையாடுவதற்கான தடையை நீக்க வலியுறுத்தி வருகின்றன.[2]
வரலாறு
தொகுமுற்காலத்தில் திமிங்கில வேட்டையானது கடற்கரையோரங்களில் மட்டுமே நடைபெற்றது. கொரியாவில் கிடைத்துள்ள பாறை எழுத்துக்கள் திமிங்கில வேட்டை 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்துள்ளதைக் காட்டுகின்றன. இதுவே திமிங்கில வேட்டை நடைபெற்றதற்கான மிகப்பழமையான சான்றாகும்.
தற்காலம்
தொகுதற்காலத்தில் நார்வால், பெலூகா, மின்க்கே வகைத் திமிங்கிலங்களே அதிக அளவில் வேட்டையாடப் படுகின்றன. மேலும் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டை பெரும்பாலும் திமிங்கில இறைச்சிக்காகவே நடைபெறுகிறது.
பன்னாட்டு திமிங்கில வேட்டை ஆணையம்
தொகுஇந்த ஆணையம் ஒவ்வோர் உறுப்பு நாடும் எவ்வளவு திமிங்கிலங்களைப் பிடிக்கலாம் என்பதை முடிவு செய்வதற்காகத் தொடங்கப் பட்டது. இவ்வமைப்பு 13 பெரிய திமிங்கில வகைகளை வேட்டையாடுவதைக் கட்டுப் படுத்துகிறது. எனினும் சிறியவற்றைப் பிடிப்பது தொடர்பாக கருத்தொற்றுமை ஏதும் ஏற்படவில்லை. மேலும் உறுப்பனர் அல்லாத நாடுகளை இந்த ஆணையம் கட்டுப் படுத்தாது.
நாடுகள் வாரியாக திமிங்கில வேட்டை
தொகுகனடா
தொகுகனடியர்கள் ஆண்டொன்றுக்கு 600 நார்வால் வகை திமிங்கிலங்களையும் 300 முதல் 400 பெலூகா வகை திமிங்கிலங்களையும் வேட்டையாடுகின்றனர். திமிங்கில இறைச்சியை பாரம்பரியமாக உட்கொள்ளும் வட பகுதியில் இவ்விறைச்சி விற்கப் படுகிறது.
பரோ தீவுகள்
தொகுடென்மார்க்கு இராச்சியத்தின் ஒரு பகுதியான பரோ தீவுகளில் நீள்துடுப்பு திமிங்கிலம் எனப்படும் ஒருவகை கடல் ஓங்கில் வேட்டையாடப் படுகிறது. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 800 திமிங்கிலங்கள் பிடிக்கப் படுகின்றன. திமிங்கில வேட்டை இத்தீவு மக்களின் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருப்பதால் திமிங்கில வேட்டை அங்கு ஆதரிக்கப் படுகிறது.
ஐசுலாந்து
தொகுஇன்னும் தொடர்ந்து திமிங்கில வேட்டையை தொழில் முறையில் நடத்தி வரும் நாடுகளில் ஐசுலாந்தும் ஒன்றாகும். ஒரு திமிங்கிலங்களைப் பிடித்து சப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது. மற்றொரு உள்நாட்டு விற்பனைக்காக திமிங்கிலங்களைப் பிடிக்கிறது.
பிலிப்பைன்சு
தொகு1991 முதல் பிலிப்பைன்சில் வேட்டை தடை செய்யப்பட்டது. இது ஓங்கில்களை மட்டுமே முதலில் குறிப்பிட்டாலும் 1997இல் திமிங்கிலங்களை வேட்டையாடுதலையும் தடை செய்தது.
திமிங்கிலங்களைப் பிடித்து வந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்காக திமிங்கில நோக்கல் சுற்றுலாவிற்காக ஊக்குவிக்கப் பட்டது.
சப்பான்
தொகுசப்பான் வணிக நோக்கிலான திமிங்கில வேட்டையை நிறுத்தி விட்டு அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டும் பிடிப்பதாகக் கூறப்பட்டாலும் திமிங்கில வேட்டைக்கு எதிரான நாடுகள் இதனை ஏற்பதில்லை.
இரசியா
தொகுஇரசியா ஆர்க்காக்களையும் ஓங்கில்களையும் பெருமளவு வேட்டையாடியுள்ளது. 1960களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரசியா 534,000 திமிங்கிலங்களை வேட்டையாடியது. இது 20 ஆம் நூற்றாண்டின் சுற்றுச்சூழல் தொடர்பான பெருங்குற்றங்களுள் ஒன்றாகாக் கருதப் படுகிறது.
ஐக்கிய அமெரிக்கா
தொகுஐக்கிய அமெரிக்காவில் பெலூகா திமிங்கிலங்கள் பரவலாக வேட்டையாடப் படுகின்றன. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 300 பெலூகாக்கள் வேட்டையாடப் படுகின்றன. மேலும் அலாஸ்காவில் வாழும் ஒன்பது சமூகக் குழுக்கள் ஆர்க்டிக்கு திமிங்கிலம் எனப்படும் ஒரு வகைத் திமிங்கிலங்களை வேட்டையாடுகின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "whaling". Encyclopædia Britannica. (2001). அணுகப்பட்டது May 16, 2010.
- ↑ ABC News. "Japan, Norway Move to End Whaling Ban". ABC News.