திமேயோ வினை
திமேயோ வினை (DeMayo reaction) என்பது ஒரு ஒளிவேதியியல் வினையாகும். இவ்வினையில் 1,3-டைகீட்டோனின் ஈனால் ஓர் ஆல்க்கீன் இனச் சேர்மத்துடன் அல்லது C=C இரட்டைப் பிணைப்பு கொண்ட மற்றொரு இனச் சேர்மத்துடன் வினைபுரிந்து வளையபியூட்டேன் வளையம் உருவாகிறது. இவ்வளையம் ஆல்டால் வினைக்கு முன் வினைக்கு உட்பட்டு 1,5-டைகீட்டோன் உருவாகிறது :[1].
டைகீட்டோனின் இரண்டு கார்பனைல் குழுக்களுக்கு இடையில் C=C இரட்டைப் பிணைப்பிலுள்ள இரண்டு கார்பன் அணுக்களைச் சேர்ப்பது இவ்வினையின் நிகர விளைவாகும்.
ஒரு மூலக்கூறின் இரண்டு பகுதிகளைச் சேர்ப்பதற்காக ஒப்பீட்டளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வழியாகவும், 1,3-டைகீட்டோனை தொகுப்பு வினை மூலம் 1,5-டைகீட்டோனாக மாற்ற உதவும் வழி முறையாகவும் இவ்வினை தொகுப்பில் பயனுள்ளதாக இருக்கிறது. [2+2] வளையக் கூட்டு வினை வினையின் முதல் பகுதியாகும். உறுதிப்படுத்தும் ஆல்டால் பிளவின் முன்வினைக்கு வளையபியூட்டேன் வளையத்தின் நிலைப்புத்தன்மையற்ற காரணம் சாதகமாகிறது.
திமேயோ வினை-வினைவழி முறையின் இயங்கு படம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Li, Jie Jack. Name reactions : a collection of detailed mechanisms and synthetic applications (Fifth ed.). Cham. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319039794. இணையக் கணினி நூலக மைய எண் 870309747.