திமோத்தி சிராபேக்

அமெரிக்க அண்டவியலாளர்

டிம் இரிச்சர்டு வால்டேர் சிராபேக் கிராகே (Tim Richard Walter Schrabback–Krahe) ஒரு சூட்டன்போர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்த காவ்லி துகள் வானியற்பியல், அண்டவியல் நிறுவனக் கிப்பாக்(KIPAC) ஆய்வுறுப்பினர் ஆவார். இவர் புதிர்க்கதிர் வானியல், நோக்கீட்டு அண்டவியல் குழுவில் பணிபுரிகிறார். இவரது ஆய்வு மென் ஈர்ப்பு வில்லையாக்கத்திலும் அண்டவியிலிலும் வானியற்பியலிலும் அதன் பயன்பாடுகளிலும் கவனம் குவிக்கிறது.

•CFHT வில்லை •இயூக்ளிடு • MAD கொத்து அளக்கை[1]

இவர் இலெய்டன் நோக்கீட்டகத்தில் அண்ட அளக்கை அறிவியலாளர் குழு ஒன்றுக்குத் தலைமை தாங்கி வருகிறார்.[2]இக்குழு தன் அண்ட அளக்கை வெளிப் புலத்தில் 446 000 பால்வெளிகளை செறிவாக ஆய்வு செய்தது.[3] அபுள் விண்வெளித் தொலைநோக்கியைப் பயன்படுத்தி இவ்வளவு பெரிய அளக்கையை எவரும் இதுவரை நிகழ்த்தவில்லை. இந்த ஆய்வு அண்டம் கருப்பு ஆற்றல் எனும் புதிர்நிலை உறுப்பால் கூடுதலாக முடுக்கப்படுகிறது என்று தனித்து உறுதிப்படுத்தியது. இதுபோன்ற சில தனித்த உறுதிப்பாடுகள் முன்னரே அளக்கைகளில் பெறப்பட்டுள்ளன. [4] [5]


மேற்கோள்கள்

தொகு
  1. http://www.slac.stanford.edu/~schrabba/
  2. T.Schrabback of the Leiden University. Other collaborators included: J. Hartlap (University of Bonn), B. Joachimi (University of Bonn), M. Kilbinger (IAP), P. Simon (University of Edinburgh), K. Benabed (IAP), M. Bradac (UCDavis), T. Eifler (University of Bonn), T. Erben (University of Bonn), C. Fassnacht (University of California, Davis), F. W. High(Harvard), S. Hilbert (MPA), H. Hildebrandt (Leiden Observatory), H. Hoekstra (Leiden Observatory), K. Kuijken (Leiden Observatory), P. Marshall (KIPAC), Y. Mellier (IAP), E. Morganson (KIPAC), P. Schneider (University of Bonn), E. Semboloni (University of Bonn), L. Van Waerbeke (UBC) and M. Velander (Leiden Observatory).
  3. http://ukads.nottingham.ac.uk/abs/2009ApJ...690.1236I
  4. http://www.spacetelescope.org/news/heic1005/#1
  5. ESA/Hubble Information Centre (2010, March 25). Astronomers confirm Einstein's theory of relativity and accelerating cosmic expansion.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமோத்தி_சிராபேக்&oldid=3585326" இலிருந்து மீள்விக்கப்பட்டது