தியடோர் வோன் யூகுலின்

செருமனிய ஆய்வாளர் மற்றும் பறவையியலாளர்

தியடோர் வோன்[1] யூகுலின்[2](20 மார்ச்சு 1824 - 5 நவம்பர் 1876),[3] ஒரு செருமானியப் பயணியும் பறவையியல் அறிஞரும் ஆவார். அவர் மேற்கொண்ட பல பயணங்களின் மூலமாகத் திரட்டியவைகளினாலும் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளினாலும் பறவையியலில் முக்கியப் பங்காற்றினார்.

ஆடமார்டின் கைவண்ணத்தில்

பயணங்கள் தொகு

வூட்டம்பர்கு மாநிலத்திலுள்ள லியோன்பர்கு என்ற நகரத்தில் தியடோர் பிறந்தார். சுரங்கப் பொறியாளராகப் பயிற்சி பெற்றிருந்ததால், 1851 முதல் 1862 வரையிலான காலத்தில் ஆப்பிரிக்காவின் வட கிழக்குப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. 1870களில் வட துருவப் பகுதிகளுக்கும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.[4]

பணி தொகு

அவர் மேற்கொண்ட பயணங்களில் பாலூட்டிகள், பறவைகளின் ஆய்பொருள்களைச் சேகரித்தார்; அவற்றுள் சில அறிவியல் உலகிற்குப் புதிதானவை. புதிய பறவை இனங்களைக் கண்டறிந்து அவற்றைப் பற்றிய தகவல்களை அறிவியல் பனுவல்களில் வெளியிட்டார். அவரது ஓவியம் வரையும் திறமையும் இப்பணிக்குக் கூடுதலாக உதவிற்று.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "von ஒலிப்பு (ஆங்கில விக்சனரியிலிருந்து)". பார்க்கப்பட்ட நாள் |date=27 February 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "heuglin ஒலிப்பு (pronouncewiki-லிருந்து)". பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "என்சைக்ளோபீடியா பிரித்தானிகாவிலிருந்து (பக். 415, 416)". பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. Elzen, Renate van den & c. THEODOR VON HEUGLIN’S Ornithologie Nordost-Afrika ’s... (2011). Vertebrate Zoology 61(1) 2011. pp. 161-176
  5. "The Birds of North-Eastern Africa 1". பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியடோர்_வோன்_யூகுலின்&oldid=3930843" இலிருந்து மீள்விக்கப்பட்டது