தியலும அருவி

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு அருவி

தியலும நீர்வீழ்ச்சி (Diyaluma Falls) இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் கிளையாறான புங்கள ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.இது மொத்தம் 220 மீட்டர் பாய்ச்சலைக் கொண்டது. இது கொழும்பு - கல்முனை பெருந்தெருவில் கொஸ்லந்தைக்கும் வெல்லவாயவுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனைக் காணலாம். இலங்கையின் இரண்டாவது உயரமான இந்நீர்வீழ்ச்சி சில வேளைகளில் இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி என தரப்படுத்தப்படுவதும் உண்டு. உலர் வலயத்தில் அமைந்திருந்தாலும் இதன் நீரூற்றுகள் இலங்கையின் ஈரவலயத்தில் இருந்தே தோன்றுவதால் ஆண்டு முழுவதும் நீர் பாய்கிறது. பூனாகலை ஆற்று வழியாக வரும் அருவியே நீர்வீழ்ச்சியாகப் பாய்கிறது.

தியலும நீர்வீழ்ச்சி
Map
அமைவிடம்இலங்கை ஊவா மாகாணம்
வகைகுதிரைவால்
மொத்த உயரம்220 மீட்டர் (722 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை1
நீர்வழிபுங்கள ஆறு - கிரிந்தி ஆறு
உயரம், உலக நிலை360 [1]

மேற்கோள்கள்

தொகு
  1. உலக நீர்வீழ்ச்சி தகவல்மையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியலும_அருவி&oldid=3846502" இலிருந்து மீள்விக்கப்பட்டது