தியான்கே-I அல்லது தியான்கே-1 (எளிமைப்படுத்தப்பட்ட சீனம் : 天河一号; பாரம்பரிய சீனம்: 天河一號; ஆங்கில ஒலிக்குறிப்பு: Tiānhé yīhào; பொருள்: "பால்வழியிலேயே முதலிடம்") என்பது சீனத்தின் டியான்ச்சினிலுள்ள தேசிய மீத்திறன்கணினி மையத்திலுள்ள ஒரு மீத்திறன்கணினி ஆகும். இது அமெரிக்காவிற்கு வெளியிலுள்ள ஒரு சில பெடாஃப்ளாப் நிலை மீத்திறன்கணிகளுள் ஒன்றாகும்[1][2].
அக்டோபர் 2010 நிலவரப்படி அவ்வியந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான தியான்கே-1ஏ உலகிலேயே மிக வேகமான மீத்திறன்கணினியாக உள்ளது[3]. இது 2.5 x 5 = 10 மிதப்புப் புள்ளிச் செயல்பாடு கொண்டது. தியான்கே-1 ஆனது மிகப்பெரிய அளவிலான அறிவியல் கணிப்பீடுகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டது. இது லினக்சு இயக்க அமைப்பைக் கொண்டது[4].

தியான்கே 1

விரிவான தகவல்கள் தொகு

உனான், சாங்க்சாவிலுள்ள பாதுகாப்புத் தொழில்நுட்பத்திற்கான சீனத் தேசிய பல்கலைக் கழகம் ஆனது தியான்கே-1-ஐ உருவாக்கியது. இது உலகிற்கு 2009 அக்டோபர் 29 அன்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாண்டில் நவம்பர் 16இல் போர்ட்லேண்ட், ஓரிகானில் நடைபெற்ற மீத்திறன்கணிப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட "முதல் 500" பட்டியலில் இவ்வியந்திரம் ஐந்தாம் இடம் பிடித்தது. தியான்கே ஆனது "முதல் 500"-க்கான சோதனையில் 563 டெராஃப்ளாப்பில் இயங்கியது. மேலும், அது உச்ச அளவாக 1.2 பெடாஃப்ளாப்பையும் எட்டியது. அப்போது அவ்வியந்திரம் 46% பயனுறுதிறனைக் கொண்டிருந்தது[5][6].

தியான்கே-1 ஆனது 4,096 இன்டெல் சியான் E5540 நுண்செயலிகளாலும் 1,024 இன்டெல் சியான் E5450 நுண்செயலிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5,120 மேம்பட்ட நுண் கருவிகளாலான வரைகலை செயலாக்க அலகுகளும் உள்ளன. இவை 2,560 இரட்டை வரைகலை செயலாக்க அலகுகளான ATI Radeon HD 4870 X2 வரைகலை அட்டைகளால் ஆனவை. டியான்ஏ-1 மேம்படுத்தப்பட்ட பின் (அதாவது தியான்கே-1A) 14,336 சியான் X5670 நுண்செயலிகளையும் 7,168 பொதுத் தேவை வரைகலை செயலாக்க அலகுகளான விடியா டெஸ்லா M2050 -ஐயும் கொண்டிருந்தது. இது மட்டுமன்றி பலபடித்தான செயலிகளான NUDT FT1000 -ஐ 2048 என்ற எண்ணிக்கையிலும் கொண்டிருந்தது.

தியான்கே-1A ஆனது லினக்சு கருனியைக் கொண்ட செங்கொடி லினக்சில் (Red Flag Linux) இயங்குகிறது. தியான்கே-1A ஆனது டியான்ச்சினிலுள்ள தேசிய மீத்திறன்கணினி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இது வானூர்திப் பயணப் பாவனையாக்கத்திற்கும் பெட்ரோலியப் பொருள் தேடுதல் தொடர்பான கணக்கீடுகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. China’s Defense University builds World Third fastest supercomputer, www.china-defense-mashup.com, Posted on 29 October 2009 by admin, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29 {{citation}}: Check date values in: |date= (help)
  2. 我国首台千万亿次超级计算机研制成功 (China builds its first petaFLOP level supercomputer) (in (சீனம்)), SINA.com, 2009-10-29, பார்க்கப்பட்ட நாள் 2009-10-29{{citation}}: CS1 maint: unrecognized language (link)
  3. "China claims supercomputer crown". பிபிசி. 29 October 2010. பார்க்கப்பட்ட நாள் 29 October 2010.
  4. srlinuxx (May 2010). "Nearly every supercomputer runs Linux". Tux Machines. http://www.tuxmachines.org/node/45558. பார்த்த நாள்: 28 October 2010. 
  5. "China joins supercomputer elite". BBC. 16 November 2009. http://news.bbc.co.uk/2/hi/technology/8362825.stm. பார்த்த நாள்: 2009-11-16. 
  6. "Two Rival Supercomputers Duke It out for Top Spot". PC World. 15 November 2009 இம் மூலத்தில் இருந்து 2009-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091119054551/http://www.pcworld.com/businesscenter/article/182225/two_rival_supercomputers_duke_it_out_for_top_spot.html. பார்த்த நாள்: 2009-11-16. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்கே-1&oldid=3924199" இலிருந்து மீள்விக்கப்பட்டது