தியுயாமுனைட்டு
தியுயாமுனைட்டு (Tyuyamunite) என்பது Ca(UO2)2V2O8•(5-8)H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கார்னோடைட்டு குழுவைச் சேர்ந்த இக்கனிமம் மிகவும் அரியவகை யுரேனியக் கனிமம் ஆகும். யுரேனியத்தின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால் கனிமம் பிரகாசமான மஞ்சள் நிறத்திலும் கதிரியக்கப் பண்பு கொண்டதாகவும் உள்ளது [5]. கிர்கிசுத்தான் நாட்டில் பெர்கானா பள்ளத்தாக்கின் தியுயா-முயூன் சுரங்கத்தில் 1912 ஆம் ஆண்டு தியுயாமுனைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கோன்சுடாண்டின் அவ்டோனோமோவிச்சு நெனாத்கெவிச் என்பவர் இக்கனிமத்திற்கு தியுயாமுனைட்டு என்று பெயரிட்டார் [2].
தியுயாமுனைட்டு Tyuyamunite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | வனேடேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca(UO2)2V2O8•(5-8)H2O |
இனங்காணல் | |
படிக இயல்பு | பொதிகளாக பெரும்பாலும் கதிர்வீச்சுடன் காணப்படும் தட்டையான படிகங்கள். |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
பிளப்பு | {001} இல் சரிபிளவு, மைகாவைப் போன்றது; {100} & {010} இல் தனித்துவம் |
மோவின் அளவுகோல் வலிமை | 1 1⁄2 - 2 |
கீற்றுவண்ணம் | மஞ்சள் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது முதல் ஒளிகசிதல் வரை |
ஒப்படர்த்தி | 3.57 - 4.35 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.675 nβ = 1.860 - 1.870 nγ = 1.885 - 1.895 |
இரட்டை ஒளிவிலகல் | 0.210 - 0.220 |
பலதிசை வண்ணப்படிகமை | பலவீனம்: X = கிட்ட்த்தட்ட நிறமற்றது, Y = வெளிறிய பசுமஞ்சள், Z = பசுமஞ்சள் |
2V கோணம் | 30° முதல் 45° |
நிறப்பிரிகை | ஏதுமில்லை |
பிற சிறப்பியல்புகள் | Radioactive |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
தோற்றம் மற்றும் மாற்றம்
தொகுயுரேனியத் தாதுவான யுரேனினைட்டு கனிமம் கால்நிலையாக்கத்தால் தியுயாமுனைட்டு கனிமமாக மாறுகிறது. ஒரு நீரேறிய கனிமவகையாக இருந்தாலும் தியுயாமுனைட்டு சுற்றுச்சூழலில் வெளிப்படும்போது நீர் மூலக்கூறை இழந்து மெட்டாதியுயாமுனைட்டு [5] Ca(UO2)2(VO4)2•3-5H2O[6] என்ற ஒரு புதிய கனிமமாக மாறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Tyuyamunite at Mindat
- ↑ Tyuyamunite data on Webmineral
- ↑ Tyuyamunite at Amethyst Galleries' Mineral Gallery
- ↑ 5.0 5.1 Lynch, Dan R. and Bob Lynch, "Tyuyamunite," Ed. Brett Ortler, Michigan Rocks & Minerals, Adventure Publications, 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1591932390
- ↑ Metatyuyamunite on Mindat