தியூமன் (அலகு)

தியூமன் ("பத்தாயிரம் மதிப்புடைய அலகு";[1] மொங்கோலியம்: Түмэн;[2][3] துருக்கியம்: Tümen) என்பது துருக்கிய மக்களாலும் மங்கோலிய மக்களாலும் அவர்கள் படைகள் ஏற்பாடு செய்யப்படும் தசம அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது.

படையெடுப்பு சகாப்தத்தின் போது மகியர் இராணுவ அமைப்பு

தொகு

இதே வகையான இராணுவ அமைப்பானது அங்கேரியை வெல்லும்போது மகியர்களால் பயன்படுத்தப்பட்டது. பாரசீக ஆராய்ச்சியாளரும் புவியியலாளருமான அகமது இபின் ருசுதா (கி.பி. 930) என்பவரது கூற்றுப்படி “மகியர்கள் துருக்கியர்களின் ஒரு இனமாவர். அவர்களின் மன்னன் 10,000 குதிரை வீரர்களுடன் செல்பவர். அவரது பெயர் கன்டா“. [4]

செங்கிஸ் கானின் இராணுவ அமைப்பு

தொகு

செங்கிஸ் கானின் இராணுவ அமைப்பில் தியூமன் என்பது 10 (அரவத்), 100 (சூட்), மற்றும் 1,000 (மிங்கன்) அலகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் தலைவன் மூலம் அடுத்த உயர் மட்டத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தியூமன்கள் நடைமுறைக்கு உகந்த அளவு என கருதப்பட்டன. படையெடுப்பிற்குச் சிறியதாகவோ அல்லது திறமையான போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கு மிகப்பெரியதாகவோ இல்லாமல் இருந்தன. இதன் இராணுவ மூலோபாயமானது ஒரு பயனுள்ள அதிர்ச்சியும் தாக்குதலும் ஆகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. The American Heritage Dictionary of the English Language - toman பரணிடப்பட்டது 2009-04-21 at the வந்தவழி இயந்திரம்
  2. Vietze, Wörterbuch Mongolisch - Deutsch, VEB 1988
  3. The Silk Road And The Korean Language
  4. Laszlo Gyula, The Magyars: Their Life and Civilization, (1996), pp. 41–42.
  5. Corvisier, André. A Dictionary of Military History and the Art of War. Blackwell Publishing, 1994. page 529
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூமன்_(அலகு)&oldid=3484587" இலிருந்து மீள்விக்கப்பட்டது