தியோடர் ரிக்

விவசாய வேதியியலாளர்

சர் தியோடர் ரிக் (Sir Theodore Rigg) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விவசாய வேதியியலாளர் மற்றும் அறிவியல் நிர்வாகி ஆவார். 1988 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள யோர்க்சையர் மாகாணத்தின் செட்டில் என்ற சிறிய நகரத்தில் இவர் பிறந்தார். 1938 ஆம் ஆண்டுக்கான பிரித்தானியப் பேரரசு வழங்கிய புத்தாண்டு மரியாதை நியமனத்தின் போது இவருக்கு வீரத்தளபதி என்ற மரியாதை வழங்கப்பட்டது.

இரண்டாவது மனைவி காளானியல் அறிஞர் கேத்லீன் கர்டிசு மற்றும் முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு மகள்களுடன் இவர் வாழ்க்கை நடத்தினார். 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 அன்று நெல்சனில் ரிக் இறந்தார். ரிக்கின் உடல் மார்சுடன் பள்ளத்தாக்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது [1].

மேற்கோள்கள்தொகு

  1. "Cemeteries databasae". Nelson City Council. 8 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடர்_ரிக்&oldid=3216204" இருந்து மீள்விக்கப்பட்டது