தியோர் ஃபால் சோ
எலிசபெத் தியோர் ஃபால் சோ (Elisabeth Dior Fall Sow) (பிறப்பு: 1968) இவர் ஒரு செனகல் நீதிபதியும் சட்ட அறிஞருமாவார். மேலும் இவர் [1] செனகலில் முதல் பெண் வழக்கறிஞராகவும் இருந்தார். 1976இல் செயிண்ட் லூயிஸின் முதல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார். [2] [3] இவர் பெண்கள் நீதிபதிகள் சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் உள்ளார். [4] மேலும், இவர் மனித உரிமைகள் (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள்), அமைதி மற்றும் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதி ஆகிய துறைகளில் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனது பங்களிப்புக்காக புகழ்பெற்றவராவார். செனகலின் தேசிய ஒழுங்கு ஆணையின் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். [5]
வாழ்க்கை
தொகு1976ஆம் ஆண்டில் தியோர் ஃபால் சோ செயிண்ட் லூயிஸில் பொது வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். [1] நேர்மை மற்றும் நெறிமுறைகளுக்கான உறுதியான அர்ப்பணிப்புக்காகவும் புகழ்பெற்றவராவார். இவர் கல்வி மேற்பார்வை மற்றும் சமூக பாதுகாப்பு தேசிய இயக்குநராகவும், சோனாடெல்-ஆரஞ்சின் சட்ட விவகார இயக்குநராகவும், ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் சட்ட ஆலோசகராகவும், ருவாண்டாவின் குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கான முதன்மை சட்ட அதிகாரியாகவும் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஆலோசகராகவும் இருக்கிறார். [6]
பணி
தொகுஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மரபுகளுக்கு இணங்க செனகல் சட்டத்தை ஒத்திசைக்க யுனிசெஃப் நிதியளித்த ஆய்வை மேற்கொண்ட பின்னர், தியோர் ஃபால் சோ ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினார். இது செனகலின் 1999 சட்டத்தை உருவாக்கி பெண் பிறப்புறுப்பு சிதைவை தடை செய்தது . [7]
2001 முதல் 2005 வரை இவர் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நலன் தொடர்பான ஆப்பிரிக்க நிபுணர்களின் குழுவில் உறுப்பினராக இருந்தார். [8] [9]
ஓய்வு
தொகு2015ஆம் ஆண்டில் இவர் பாலினம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பத்திரிகையாளர்களின் வலையமைப்பின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், இவர் 2017இல் ஓய்வு பெற்றார். [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 PORTRAIT: Me Dior Fall Sow, une pionnière toujours aux aguets, Thiey Dakar, 24 November 2017. Accessed 10 March 2020.
- ↑ "Dior Fall Sow et les droits des femmes : un combat acharné". lepetitjournal.com (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ Samarew (2019-06-24). "Dior Fall Sow, 1ère femme procureure : « le jour où j'ai dit non au pouvoir »". SAMAREW INFOS (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ ""Les violeurs ne seront plus punis par des peines qui ne sont pas dissuasives"" (in fr). https://www.bbc.com/afrique/media-50953114.
- ↑ [1]
- ↑ Dior Fall Sow, ellesolaire.org. Accessed 10 March 2020.
- ↑ David Hecht, When a law sweeps in, tradition lashes back, Christian Science Monitor, February 4, 1999. Accessed 10 March 2020.
- ↑ Murray, Rachel (2004-12-09). Human Rights in Africa: From the OAU to the African Union (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-45633-3.
- ↑ Former Members பரணிடப்பட்டது 2020-03-11 at the வந்தவழி இயந்திரம், ACERWC. Accessed 10 March 2020.